Tamil Dictionary 🔍

தொடை

thotai


இடையறாமை ; தொடர்ச்சி ; அம்பெய்கை ; கட்டு ; தேனடை ; அம்பு ; நாண் ; பூமாலை ; பூங்கொத்து ; மதிற்சுற்று ; செய்யுள் உறுப்புள் ஒன்று ; சந்து ; பாட்டு ; சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் ; சட்டம் ; துடை என்னும் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரரின் பஞ்சகிருத்தியத்துள் ஒன்றைய அம்பெய்கை. செந்தொகை பிழையா வன்க ணாடவர் (புறநா.3) (சீவக.1676, உரை). 1. Discharging, shooting, one of panca-kiruttiyam , q.v.; பின்னுகை தொடையுறு வற்கலை யாடை (கம்பரா முதற்போ.109). 2. Braiding, weaving; இடையமை தொடையிழி யிறட்லின் னும் (கம்பரா. நாட்டுப்.9). 3. Unbroken succession or continuity; கட்டுகை தொடைமாண்ட க ண்ணியன் (கலித். 37). 4. Fastening, tying; எற்று. ஒருதொடையான் வெல்வது கோழி (நான்மணி. 540. 5. Kicking, stroke; தொடர்ச்சி. தாபதர் தொடைமறை முழக்கும் (கல்லா. 39, 10). 6. Series, train, succession; வடம். முத்துத்தொடை (பரிபா. 6, 16). 7. String; சந்து. வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள் (புறநா. 78). 8. Joints of the body; கொத்து. தொடை மலர் வெறுக்கை யேந்தி (சீவக. 2708). 9. Cluster, bunch; பூமாலை. (பிங்.) 10. Flowergarland; மலர்முறுக்கு. தொடையவிழ் தண்குவளை (பு. வெ. பொது. 1). 11. Compactness of an unblown; யாழ் நரம்பு. 12. Lute string; வில்லின் நாண். (பிங்.) தொடையை நிரம்ப வாங்கிவிடாத முன்பே (சீவக. 2320). 13. Bowstring; அம்பு. (சூடா.) 14. Arrow; படிக்கட்டு. குறுந்தொடை நெடும்படிக்கால் (பட்டினப். 142). 15. Stairs, step; ஆட்சேபணை. தொடைவிடை யூழாத்தொடைவிடை துன்னி (பு.வெ.8, 19). 16. Question; criticism; . 17. See தொடர்மொழி, 2. (அக. நி. 18.) தாறு. பூமாண்ட தீந்தேன் றொடைகீறி (சீவக. 31). 18. Bunch of fruits; மதிற்சுற்று. (திவா.) 19. Surrounding wall, bulwark, fortification; சுவர்ப்புறத்து வைத்த உத்திரந்தாங்கு கட்டை. (w.) 20. Block projecting from a wall to support a beam; See சயபத்திரம். தொடைவேட் டழிபட லாற்ற லறிமுறை யேன்று (பு. வெ. 8, 19). 21. Written record of one's victory in a contest. பாட்டு. 22. Stanza, verse; மோனைத் தொடை எதுகைத்தொடை, முரண்டொடை, இயைபுத் தொடை, அளபெடைத்தொடை என்ற ஐவகையான செய்யுள் தொடுக்கும்வகை. (இலக்.வி. 723.) 23. (Pros.) Mode of versification, of five kinds, viz., mōṉai-t-toṭai, etukai-t-toṭai, muraṇ-toṭai, iyaipu-t-toṭai, aḷapeṭai-t-toṭai; . 24. See தொடைக்கயிறு. எழுநுகத்தோ டிணைப்பகடு தொடுத்த தொடை (ஏரெழு. 10). சட்டம். தொன்மனுநூற் றொடைமனுவாற் றொடைப்புண்டது (பெரியபு. மனுநீதி. 37). 25. Law; முத்து எடுக்கும்போது ஒரு குளிப்பில் கவர்ந்துவரும் சரக்கு . (W.G.) The produce of a single diving, in pearl-fishery; துடையென்னும் உறுப்பு . Thigh;

Tamil Lexicon


s. the thigh, குறங்கு; 2. a flower-garland, பூமாலை; 3. a bowstring, வில்நாண்; 4. an arrow, அம்பு; 5. rhyme in poetry, செய்யுளுறுப்பி லொன்று; 6. a surrounding wall, a bullwark, a fortification, மதிற்சுற்று; 7. verse, poetry, பாட்டு; 8. block projecting from a wall to support a beam, சுவர்ப்புறத்து நீண்ட வுத்திரம்; 9. a bunch of flowers. தொடைதட்டி வெள்ளாழர், -வெள்ளாளர், barbers. தொடையிலே தட்ட, --தட்ட, to strike the thigh in token of bravery, defiance, admiration, surprise etc. தொடையை நிமிண்ட, to pinch the thigh. தொடைவாழை, --வாளை, a tumour on the thigh near the groin; 2. a shrub whose leaves are used to cure the tumour. தொடைவாழை (வாளை) புறப்பட்டுக் கிடக்க, to lie sick of the thigh tumour. தொடை விகற்பம், the different varieties of rhyme. எதுகைத் தொடை, consonance or rhyming of the 2nd letter in verses. பின்னந் தொடை, a hind-quarter. முரண்டொடை, a kind of poetry consisting of words taken in contrast or by antithesis. முன்னந் தொடை, a forequarter of a sheep etc. மோனைத் தொடை, alliteration.

J.P. Fabricius Dictionary


, [toṭai] ''s.'' The thigh, in which sense, for butcher's meat, are, பெருந்தொடை, the upper part of the thigh; பின்னந்தொடை, a hind-quarter; முன்னந்தொடை, a fore-quar ter of a sheep, &c. 2. Flower-garland. பூமாலை. 3. Bow-string, நாண். 4. Arrow, அம்பு. 5. Surrounding wall, bulwark, for tification, மதிற்சுற்று. 6. Block projecting from a wall to support a beam, சுவர்ப்புறத்து நீண்டவுத்திரம். 7. A bunch of flowers, பூங் கொத்து. 8. Verse, poetry, பாட்டு. 9. A series, train, connexion, succession, tissue, composition, commonly poetic, தொடர்ச்சி. 1. Rhyme in poetry, செய்யுளுறுப்பினொன் று, [''ex'' தொடு. ''(v.)''--There are five classes of rhyme, each containing eight verie ties, and three single ones making forty three in all. The five classes are: 1. மோ னை, மோனைத்தொடை, the rhyming of the initial letter of the line or foot through the stanza. The varieties of this class are: 1. அடிமோனை, முதன்மோனை, rhyming of the initial in the foot of each line. 2. இணைமோனை, of the first two feet in each line. 3. பொழிப்புமோனை, of every other foot. 4. ஓரூஉமோனை, of the first and fourth foot. 5. கூழைமோனை, of all the feet in the line but the last. 6. மேற்கதுவாய்மோனை, in every foot bu the second. 7. கீழ்க்கதுவாய்மோனை, of all the feet but the penultimate. 8. முற்றுமோ னை, in every foot. II. இயைபு, இயைபுத்தொ டை, the rhyming of the last feet or letters in the lines. The varieties are: 1. அடிஇயைபு, முதலியைபு, rhyming of the last letter of the first foot in each line. 2. இணையியைபு, of the last letter of the first two feet. 3. பொழிப்பியைபு, of the last letter of every other foot. 4. ஓரூஉவியைபு, of the last letter in the first and fourth. 5. கூழை யியைபு, of the last letter in each foot except the last. 6. மேற்கதுவாயியைபு, in the last letter of every foot but the second. 7. கிழ்க்கதுவாயியைபு, of the last letter in every foot but the penultimate. 8. முற்றிழைபு, of the last letter in all the feet. III. எதுகை, எதுகைத்தொடை, rhyming of the second letter of every line in the stanza, com prising, 1. அடியெதுகை, முதலெதுகை, rhyming of the second letter of the first foot in each line. 2. இணையெதுகை, in the second letter of the two feet. 3. பொழிப்பெதுகை. that of every other foot. 4. ஓரூஉவேதுகை, that of the first fourth. 5. கூழையெது கை, that of all but the last. 6. மேற்கதுவா யெதுகை, that of all but the second. 7. கீழ்க்கதுவாயெதுகை, that of all but the pen ultimate. 8. முற்றெதுகை, in the second letter of all the feet. IV. முரண், முரண்டொ டை, a kind of poetry consisting of words taken in contrast, or by antithesis, as இருள்பரந்தன்னமாநீர்மருங்கின், நிலவுகுவிந்தன்னவெண் மணலொருசிறை, by the side of the waters, dark as the wide spread nocturnal gloom, the white sand appeared, as if the moon light had formed itself into heaps. Of this there are eight varieties, as 1. அடிமுரண்,முதன் முரண், contrast in the first foot of the lines, with one another. 2. இணைமுரண், that in the first two feet of the lines. 3. பொ ழிப்புமுரண், that in every other foot of the lines. 4. ஓரூஉமுரண், that in the first and fourth. 5. கூழைமுரண், contrast in all but the last. 6. மேற்கதுவாய்முரண், in all but the second. 7. கீழ்க்கதுவாய்முரண், in all but the penultimate. 8. முற்றுமுரண், in all the feet. V. அளபெடைத்தொடை, rhyme formed by அளபெடை, or lengthening a letter for a verse, which are of eight varieties, as 1. அடி யளபெடை, முதலளபெடை, forming rhyme by அளபெடை, in the first of each line. 2. இணையளபெடை, in the first two feet. 3. பொ ழிப்பளபெடை in every other foot. 4. ஓரூஉவள பெடை, in the first and fourth. 5. கூழையள பெடை, in all but the last. 6. மேற்கதுவாயள பெடை, in all but the second. 7. கீழ்க்கது வாயளபெடை, in all but the penultimate. 8. முற்றளபெடை, in all the feet. VI. அந்தாதி, அந்தாதித்தொடை, rhyme by the occurrence of the last syllable, word or words in the stanza as the first of the sacceeding. VII. இரட்டைத்தொடை, by the repetition of the same in every foot through the line. VIII. செந்தொடை, poetry of numbers with out rhyme, a kind of blank verse. For further particulars, see these in their respective places.

Miron Winslow


toṭai,
n.தொடு2-.
1. Discharging, shooting, one of panca-kiruttiyam , q.v.;
வீரரின் பஞ்சகிருத்தியத்துள் ஒன்றைய அம்பெய்கை. செந்தொகை பிழையா வன்க ணாடவர் (புறநா.3) (சீவக.1676, உரை).

2. Braiding, weaving;
பின்னுகை தொடையுறு வற்கலை யாடை (கம்பரா முதற்போ.109).

3. Unbroken succession or continuity;
இடையமை தொடையிழி யிறட்லின் னும் (கம்பரா. நாட்டுப்.9).

4. Fastening, tying;
கட்டுகை தொடைமாண்ட க ண்ணியன் (கலித். 37).

5. Kicking, stroke;
எற்று. ஒருதொடையான் வெல்வது கோழி (நான்மணி. 540.

6. Series, train, succession;
தொடர்ச்சி. தாபதர் தொடைமறை முழக்கும் (கல்லா. 39, 10).

7. String;
வடம். முத்துத்தொடை (பரிபா. 6, 16).

8. Joints of the body;
சந்து. வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள் (புறநா. 78).

9. Cluster, bunch;
கொத்து. தொடை மலர் வெறுக்கை யேந்தி (சீவக. 2708).

10. Flowergarland;
பூமாலை. (பிங்.)

11. Compactness of an unblown;
மலர்முறுக்கு. தொடையவிழ் தண்குவளை (பு. வெ. பொது. 1).

12. Lute string;
யாழ் நரம்பு.

13. Bowstring;
வில்லின் நாண். (பிங்.) தொடையை நிரம்ப வாங்கிவிடாத முன்பே (சீவக. 2320).

14. Arrow;
அம்பு. (சூடா.)

15. Stairs, step;
படிக்கட்டு. குறுந்தொடை நெடும்படிக்கால் (பட்டினப். 142).

16. Question; criticism;
ஆட்சேபணை. தொடைவிடை யூழாத்தொடைவிடை துன்னி (பு.வெ.8, 19).

17. See தொடர்மொழி, 2. (அக. நி. 18.)
.

18. Bunch of fruits;
தாறு. பூமாண்ட தீந்தேன் றொடைகீறி (சீவக. 31).

19. Surrounding wall, bulwark, fortification;
மதிற்சுற்று. (திவா.)

20. Block projecting from a wall to support a beam;
சுவர்ப்புறத்து வைத்த உத்திரந்தாங்கு கட்டை. (w.)

21. Written record of one's victory in a contest.
See சயபத்திரம். தொடைவேட் டழிபட லாற்ற லறிமுறை யேன்று (பு. வெ. 8, 19).

22. Stanza, verse;
பாட்டு.

23. (Pros.) Mode of versification, of five kinds, viz., mōṉai-t-toṭai, etukai-t-toṭai, muraṇ-toṭai, iyaipu-t-toṭai, aḷapeṭai-t-toṭai;
மோனைத் தொடை எதுகைத்தொடை, முரண்டொடை, இயைபுத் தொடை, அளபெடைத்தொடை என்ற ஐவகையான செய்யுள் தொடுக்கும்வகை. (இலக்.வி. 723.)

24. See தொடைக்கயிறு. எழுநுகத்தோ டிணைப்பக toṭai,
n.தொடு1-.
The produce of a single diving, in pearl-fishery;
முத்து எடுக்கும்போது ஒரு குளிப்பில் கவர்ந்துவரும் சரக்கு . (W.G.)

toṭai,.
n.[T. toda.].
Thigh;
துடையென்னும் உறுப்பு .

DSAL


தொடை - ஒப்புமை - Similar