Tamil Dictionary 🔍

தூங்குதல்

thoongkuthal


அசைதல் ; தொங்குதல் ; ஊசல் முதலியவற்றில் ஆடுதல் ; சோம்பலாயிருத்தல் ; வாடுதல் ; சாதல் ; இடையறாது விழுதல் ; ஒலித்தல் ; நிலையாகத் தங்குதல் ; மெத்தென நடத்தல் ; செறிதல் ; கூத்தாடுதல் ; துயிலுதல் ; தாமதித்தல் ; அழுந்துதல் ; மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையறுது விழுதல். வீழ்தல். வீழ்பணி தூங்க (திருக்கோ. 320) 5. To pour, rain, fall uncreasingly; ஒலித்தல். தண்ணுமை தழுவித்தூங்க (கம்பரா. மிதிலை. 9) 6. To sound; துயிலுதல். சொரிந்த சோரிதன் வாய்வரத் தூங்குவான் (கம்பரா. கும்ப. 62) 7. [T. tūgu, M. tūṅṅuka.] To sleep, slumber; அசைவுதோன்றாது சுற்றுதல். பம்பரம் தூங்குகின்றது. 8. To spin, as a top; சாதல். நாடுங்காற் றூங்குபவர் (திரிகடு. 19) 9. To die; வாடுதல், துக்கத்துட் டூங்கி (நாலடி, 121) 10. To droop, as a plant; to be withered; மந்தமாதல். சொன்ன வெல்லையினூங்குமத் தூங்கிய மன்னன் வந்திலன் (கம்பரா. கிட்கி. 1) 11. To be sluggish, idle, dull, slow; தாமதித்தல். தூங்குக தூங்கிச் செயற்பால (குறள் 672) 12. To delay, procrastinate; நிலையாகத் தங்குதல். கடப்பாட்டாளனுடைப் பொருள்போலத் தூங்குதற்குரியதன்று (குறுந். 143) 13. To tarry, remain, abide; மெத்தென நடத்தல். கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க (அகநா. 54) 14. To walk or trudge slowly; அழுந்துதல். மாநக ரானாவின்பந் தூங்கின (திருவிளை. மாயப். 22) 15. To rest profoundly; செறிதல். தூங்கிரு ளிறும்பில் (புறநா. 126) 16. To be crowded, dense; மிகுதல். களிமகிழ் தூங்கி (காசிக. சத். 18) 17. To abound; தொங்குதல். காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள்.1163) 1. [K. tūgu, M. tūṅṅuka] To hang to be suspended; ஊசல் முதலியவற்றில் ஆடுதல். வீழுசல் தூங்கப்பெறின் (கலித். 131) 2. [T. K. tūgu.] To swing; அசைதல். தூங்கு கையானோங்கு நடைய (புறநா. 22) 3. To sway from side to side, as an elephant; கூத்தாடுதல். அறற்குழற் பாணி தூங்கியவரோடு (சிறுபாண். 162) 4. To dance;

Tamil Lexicon


tūṅku-
5 v. intr.
1. [K. tūgu, M. tūṅṅuka] To hang to be suspended;
தொங்குதல். காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள்.1163)

2. [T. K. tūgu.] To swing;
ஊசல் முதலியவற்றில் ஆடுதல். வீழுசல் தூங்கப்பெறின் (கலித். 131)

3. To sway from side to side, as an elephant;
அசைதல். தூங்கு கையானோங்கு நடைய (புறநா. 22)

4. To dance;
கூத்தாடுதல். அறற்குழற் பாணி தூங்கியவரோடு (சிறுபாண். 162)

5. To pour, rain, fall uncreasingly;
இடையறுது விழுதல். வீழ்தல். வீழ்பணி தூங்க (திருக்கோ. 320)

6. To sound;
ஒலித்தல். தண்ணுமை தழுவித்தூங்க (கம்பரா. மிதிலை. 9)

7. [T. tūgu, M. tūṅṅuka.] To sleep, slumber;
துயிலுதல். சொரிந்த சோரிதன் வாய்வரத் தூங்குவான் (கம்பரா. கும்ப. 62)

8. To spin, as a top;
அசைவுதோன்றாது சுற்றுதல். பம்பரம் தூங்குகின்றது.

9. To die;
சாதல். நாடுங்காற் றூங்குபவர் (திரிகடு. 19)

10. To droop, as a plant; to be withered;
வாடுதல், துக்கத்துட் டூங்கி (நாலடி, 121)

11. To be sluggish, idle, dull, slow;
மந்தமாதல். சொன்ன வெல்லையினூங்குமத் தூங்கிய மன்னன் வந்திலன் (கம்பரா. கிட்கி. 1)

12. To delay, procrastinate;
தாமதித்தல். தூங்குக தூங்கிச் செயற்பால (குறள் 672)

13. To tarry, remain, abide;
நிலையாகத் தங்குதல். கடப்பாட்டாளனுடைப் பொருள்போலத் தூங்குதற்குரியதன்று (குறுந். 143)

14. To walk or trudge slowly;
மெத்தென நடத்தல். கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க (அகநா. 54)

15. To rest profoundly;
அழுந்துதல். மாநக ரானாவின்பந் தூங்கின (திருவிளை. மாயப். 22)

16. To be crowded, dense;
செறிதல். தூங்கிரு ளிறும்பில் (புறநா. 126)

17. To abound;
மிகுதல். களிமகிழ் தூங்கி (காசிக. சத். 18)

DSAL


தூங்குதல் - ஒப்புமை - Similar