கொல்
kol
kol
n. கொல்-
1. Act of killing, murdering;
கொலைத்தொழில். கொல்லார் மழுவாட்படையாய் (தேவா. 966, 1).
2. Affliction;
வருத்தம். (சூடா.)
3. Working in iron;
கொற்றொழில்.
4. Blacksmith;
கொல்லன்.
5. Lock;
பூட்டு. (பிங்.)
6. Brass or iron bar nailed across a door or gate;
கதவு முதலியவற்றில் தைக்கும் இருப்பு முதலியவற்றாலாகிய பம்டை. Loc.
kol,
part.
1. An affix implying doubt;
ஐயப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல். யாதுகொன் மற்றிவ் வேந்தல் பணி (பெருங். உஞ்சைக். 34, 70).
2. An expletive, chiefly in poetry;
பெரும்பாலும் செய்யுளில் வரும் ஓர் அசைநிலை. (நன். 435.)
kol
n.
1. Iron;
இரும்பு. மின் வெள்ளி பொன் கொல்லெனச் சொல்லும் (தக்கயாகப். 550).
2. Metal;
உலோகம். (நாமதீப. 318.)
kol-,
3. v. tr.[K. M. kol.]
1. To kill, slay, murder;
வதைத்தல். கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109).
2. To destroy, ruin;
அழித்தல். கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16).
3. To fell, cut down;
வெட்டுதல். மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29).
4. To reap, as the heads of grain;
கதிரறுத்தல். நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்து (தொல். பொ. 76, உரை).
5. To afflict, tease;
துன்பப் படுத்துதல். நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).
6. To neutralize metallic properties by oxidation
இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுதல்.
DSAL