Tamil Dictionary 🔍

பகல்

pakal


பகுக்கை ; நடு ; நடுவுநிலை ; நுகத்தாணி ; முகூர்த்தம் ; அரையாமம் ; மத்தியானம் ; பகற்போது ; பிறரோடு கூடாமை ; கட்சி ; இளவெயில ; அறுபது நாழிகைகொண்ட நாள் ; ஊழிக்காலம் ; சூரியன் ; ஒளி ; வெளி ; கமுக்கட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகுக்கை. (பிங்.) நெருநைப் பகலிடங்கண்ணி (புறநா.249). 1. Dividing, separating; நடு. (திவா.) 2. Middle; நடுவுநிலைமை, அகல்வையத்துப் பகலாற்றி (பதிற்றுப். 90, 9). 3. Middle position, impartiality; நுகத்தாணி நெடுநுகத்துப் பகல்போல (பட்டினப். 206). 4. Middle or main peg in a yoke; முகூர்த்தம். (பிங்) ஒருபகல் காறு நின்றான்(சீவக. 2200). 5. Period of two nāḻikai; அரையாமம். அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார் (சிலப். 4, 81). 6. Half of a yāmam; மத்தியானம். Colloq. 7. Midday, noon; காலைமுதல் மாலைவரையுள்ள காலம். பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறாநா. 8). 8. Day, day time, as divided from the night; இளவெயில், பாய்குழை நீலம் பகலாகத் தையினாள் (பரிபா. 11, 96). 9. The morning sun; அறுபது நாழிகைகொண்ட நாள். (திவா). ஓல்வ கொடா அ தொழிந்த பகலும் (நாலடி, 169). 10. Day of 24 hours ஊழிக்காலம். துஞ்சலுறுஉம் பகலுறு மாலை (பதிற்றுப். 7, 8). 11. The day of destruction of the universe; சூரியன். பன்மலர்ப் பூம்பொழிற் பகன் முளைத்தது போல் (மணி. 4, 92). 12. Sun. பிறரோடு கூடாமை. பகலென்னும் பண்பின்மை (குறள், 851). 1. Unsociability; கட்சி. (தொல். சொல். 165, சேனா.) 2. Party; பிரகாசம். (திவா). 13. Light, radiance, splendour; வெளி. (சீவக. 1596, உரை.) 14. Open place; openness; கமுக்கட்டு. Loc. Armpit;

Tamil Lexicon


s. the day in opposition to the night, day-time; 2. mid-day, noon, மத்தியானம்; 3. the sun, சூரியன்; 4. a period of two Indian hours, a muhoortham, முகூர்த்தம்; 5. the middle or main peg in a yoke, நுகத்தாணி. பகலவன், பகலோன், the sun. பகலுக்கு, பகலைக்கு, for the day. பகலைக்குமேல், after mid-day, in the afternoon. பகல் சாப்பாடு, (பகற்சாப்பாடு), பக லசனம், dinner. பகல்மாறு, daily, in the day-time, பகல் மார். பகல்வத்தி, -வர்த்தி, blue lights prepared of brimstone, saltpetre etc. making light appear as day. பகல் வெளிச்சம், day-light. பகல் வெள்ளி, stars seen by day. பகல் வேஷம், masking or disguising oneself by day. பகற்கள்ளன், பகற்றிருடன், a daylight thief, a highway robber; 2. one who extorts money. பகற்காலம், the day-time; 2. the period of one's life. பகற்குறி, (in love poetry) place chosen by lovers to meet in private by day. பகற்பாடு, the day time; 2. burden for the day. பகற்பாடு தொலைந்தது, the burden for the day is over. இரவுபகல், day and night. கடும்பகல், broad day. பட்டப்பகலில், பகல் வெளிச்சத்தில், in the broad day-light, at mid-day. பிற்பகல், afternoon. முற்பகல், forenoon.

J.P. Fabricius Dictionary


எல், திவா.

Na Kadirvelu Pillai Dictionary


pakalu பகலு daytime, day (as opposed to night)

David W. McAlpin


, [pakal] ''s.'' Day, as distinguished from night, day time, பகற்காலம். 2. Mid-day, noon, மத்தியானம். ''(c.)'' 3. Light, radiance, splen dor, பிரகாசம். 4. The sun, சூரியன். ''[from Sa. B'haga.'' W. p. 61.] 5. A period of two Indian hours, ''a muhurta,'' முகுர்த்தம். 6. Day of twenty-four hours, நாள். 7. Mid dle, நடு. 8. Middle or main peg in a yoke, நுகத்தாணி. 9. ''[in combin.]'' State, birth as முற்பகல், the former birth. பகலைக்குமேலே. After mid-day; in the after-noon. பகலுக்கு-பகலைக்கு. For the day or for noon, as food,&c. பகலே. [ஏ, ''emphatic.''] In the day time --as அவன் பகலேபோய்விட்டான். பகல்போலேநிலா. Moon-shine as clear as day. பட்டப்பகலிலே. In broad day-night; at mid-day. பகல்மார்--பகல்மாறு. In the day-time, daily. சைனர்கள்பகல்மாறுசாப்பிடுவார்கள், இராமாறுசாப்பி டார்கள். The Jainas eat in the day-time, not at night.

Miron Winslow


pakal
n. பகு-.
1. Dividing, separating;
பகுக்கை. (பிங்.) நெருநைப் பகலிடங்கண்ணி (புறநா.249).

2. Middle;
நடு. (திவா.)

3. Middle position, impartiality;
நடுவுநிலைமை, அகல்வையத்துப் பகலாற்றி (பதிற்றுப். 90, 9).

4. Middle or main peg in a yoke;
நுகத்தாணி நெடுநுகத்துப் பகல்போல (பட்டினப். 206).

5. Period of two nāḻikai;
முகூர்த்தம். (பிங்) ஒருபகல் காறு நின்றான்(சீவக. 2200).

6. Half of a yāmam;
அரையாமம். அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார் (சிலப். 4, 81).

7. Midday, noon;
மத்தியானம். Colloq.

8. Day, day time, as divided from the night;
காலைமுதல் மாலைவரையுள்ள காலம். பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறாநா. 8).

9. The morning sun;
இளவெயில், பாய்குழை நீலம் பகலாகத் தையினாள் (பரிபா. 11, 96).

10. Day of 24 hours
அறுபது நாழிகைகொண்ட நாள். (திவா). ஓல்வ கொடா அ தொழிந்த பகலும் (நாலடி, 169).

11. The day of destruction of the universe;
ஊழிக்காலம். துஞ்சலுறுஉம் பகலுறு மாலை (பதிற்றுப். 7, 8).

12. Sun.
சூரியன். பன்மலர்ப் பூம்பொழிற் பகன் முளைத்தது போல் (மணி. 4, 92).

13. Light, radiance, splendour;
பிரகாசம். (திவா).

14. Open place; openness;
வெளி. (சீவக. 1596, உரை.)

pakal
n. U. bagal..
Armpit;
கமுக்கட்டு. Loc.

pakal,
n. பகு-.
1. Unsociability;
பிறரோடு கூடாமை. பகலென்னும் பண்பின்மை (குறள், 851).

2. Party;
கட்சி. (தொல். சொல். 165, சேனா.)

DSAL


பகல் - ஒப்புமை - Similar