கொந்துதல்
kondhuthal
kontu-,
5. v. tr.
1. To peck, pick, mince;
கொத்துதல்.
2. To injure fruits by pecking, gnawing;
பழமுதலியவற்றை அலகாற் குதறுதல்.
3. To threaten, intimidate, terrify;
அச்சுறுத்தல். கொந்தி யிரும்பிற் பிணிப்பர் கயத்தை (நான்மணி. 12).
4. To gore, pierce;
குத்துதல். கொந்தியயி லலகம்பால் (பெரியபு. கண்ண்ப்.145).
5. To pick up shells, etc., from the floor before a thrown-up shell comes down, as in game played by girls;
மகளிர் ஆட்டத்தில் மேலெறிந்தகாய் விழுவதற்குள் தரியிலுள்ள காய்களை எடுத்தல். அவள் புளியவிதையைக் கொந்தி விளையாடுகிறாள். Colloq.
6. To remove a cloth from the clothes' line with a stick;
கொடியிலிருக்கும் ஆடையைக் கோல் கொண்டு எடுத்தல். Colloq.--intr.
1. cf. To hop, as in a game;
ஒற்றைக்காலாற் குதித்தல்.
2. To pretend to be very orthodox;
மிக்க ஆசாரங்காட்டிக்கொள்ளுதல்.
kontu-,
5. v. intr. prob. kvath.
1. To burn; tobe in flames;
எரிதல். கொந்தழல் (சீவக. 1499).
2. To be enraged, furious; to be inflamed with anger;
கோபம் மூளுதல். (பிங்.)
DSAL