Tamil Dictionary 🔍

காட்டுதல்

kaattuthal


காண்பித்தல் ; அறிவித்தல் ; மெய்ப்பித்தல் ; நினைப்பூட்டுதல் ; படையல் ; உண்டாக்குதல் ; அறிமுகஞ் செய்தல் ; வெளிப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரூபித்தல். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 3. To demonstrate, prove ; நினைப்பூட்டுதல். முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8). 4. To remind ; நிவேதனஞ்செய்தல். ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும் (S.I.I. iii, 102). 5. To offer to a deity ; வெப்பம் உறைக்கச்செய்தல். நெய்ப்பாத்திரத்தை நெருப்பிற்காட்டி உருக்கினான். 10. To heat, as a vessel of ghee ; பிரதிபலிக்கச்செய்தல். அடுத்தது காட்டும் பளிங்கு போல் (குறள், 706). 6. To reflect, as a mirror or water ; உண்டாக்குதல். களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி (சிலப். 19, 17). 7. To create, bring to pass ; அறிழகஞ்செய்வித்தல். செல்வழியுள்ளத் தோனைக் காட்டுதி தெரியவென்றான் (கம்பரா. அனுமப். 23). 8. To introduce ; நறுமணமுதலியன ஊட்டுதல். ஆவிகாட்டி ... சோர்குழல் (கம்பரா. நாடவி. 59). 9. To apply, as incense or perfume to the hair ; மீட்டுத்தருதல். ஆழிகாட்டி யென்னாருயிர் காட்டினாய் (கம்பரா. பிணிவீட்டு. 34). 11. To bring back; காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 1. To show, exhibit, display ; அறிவித்தல். காணாதாற் காட்டுவான் (குறள், 849). 2. To reveal, disclose, set forth ;

Tamil Lexicon


kāṭṭu-
5 v. tr. caus. of காண்-. [M. kāṭṭu.]
1. To show, exhibit, display ;
காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293).

2. To reveal, disclose, set forth ;
அறிவித்தல். காணாதாற் காட்டுவான் (குறள், 849).

3. To demonstrate, prove ;
நிரூபித்தல். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28).

4. To remind ;
நினைப்பூட்டுதல். முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8).

5. To offer to a deity ;
நிவேதனஞ்செய்தல். ஆழ்வார்க்குக் காட்டுகின்ற திருவமுர்தும் (S.I.I. iii, 102).

6. To reflect, as a mirror or water ;
பிரதிபலிக்கச்செய்தல். அடுத்தது காட்டும் பளிங்கு போல் (குறள், 706).

7. To create, bring to pass ;
உண்டாக்குதல். களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி (சிலப். 19, 17).

8. To introduce ;
அறிழகஞ்செய்வித்தல். செல்வழியுள்ளத் தோனைக் காட்டுதி தெரியவென்றான் (கம்பரா. அனுமப். 23).

9. To apply, as incense or perfume to the hair ;
நறுமணமுதலியன ஊட்டுதல். ஆவிகாட்டி ... சோர்குழல் (கம்பரா. நாடவி. 59).

10. To heat, as a vessel of ghee ;
வெப்பம் உறைக்கச்செய்தல். நெய்ப்பாத்திரத்தை நெருப்பிற்காட்டி உருக்கினான்.

11. To bring back;
மீட்டுத்தருதல். ஆழிகாட்டி யென்னாருயிர் காட்டினாய் (கம்பரா. பிணிவீட்டு. 34).

DSAL


காட்டுதல் - ஒப்புமை - Similar