Tamil Dictionary 🔍

எரிதல்

yerithal


சுடருண்டாதல் ; ஒளிவிடுதல் ; எரிச்சலுண்டாதல் ; பொறாமை கொள்ளுதல் ; சினத்தல் ; துயரமடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாலித்தல். எரியுந்தீயோடு (திவ். திருவ்வய். 3, 6, 5). 1. To flame, ignite;

Tamil Lexicon


eri
4 v. intr. [T. eriyu, K. uri, M. Tu. eri.]
1. To flame, ignite;
சுவாலித்தல். எரியுந்தீயோடு (திவ். திருவ்வய். 3, 6, 5).

2. To glow, shine, emit light;
பிரகாசித்தல். எரியுஞ் செம்பொன் மணிமுடி (சூளா. மந்தி. 6).

3. To burn, as sore, as fever; to smart; to suffer pain; to feel pangs, as the stomach from hunger;
எரிச்ச லுண்டாதல். கண்ணெரிகின்றது.

4. To be envious, jealous;
பொறாமைகொள்ளுதல்.

5. To experience a painful emotion;
துயரமடைதல். அதைப்பார்க்கும் போது மனம்எரிகிறது.

6. To be angry, indignant;
கோபங்கொள்ளுதல்.

7. To become old;
முதிர்தல். எரிகின்ற மூப்பினாலும் (கம்பரா. மருத்து. 17).

DSAL


எரிதல் - ஒப்புமை - Similar