எரித்தல்
yerithal
தீயில் வேகச்செய்தல் ; அழற்றுதல் ; செரிக்கச் செய்தல் ; விளக்கை எரியச்செய்தல் ; மருந்து முதலியன புடமிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீயால் வெந்தழியச் செய்தல். புரமூன் றெரித்தவா (திருவாச. 13, 6). 1. To burn, consume by fire, scorch;
Tamil Lexicon
eri
11 v. tr. caus. of எரி1-. [T. eriyintsu, M. eri.]
1. To burn, consume by fire, scorch;
தீயால் வெந்தழியச் செய்தல். புரமூன் றெரித்தவா (திருவாச. 13, 6).
2. To keep burning, as a lamp or torch;
விளக்கு பந்தம் முதலியன எரித்தல். வீட்டுக்கெரித்த விளக்கு (தமிழ்நா. 237).
3. To sublimate, calcine, as metals; to reduce to powder by fire, ffor making medicine;
மருந்து முதலியன புடமிடுதல். எரித்த மருந்து.
4. To inflame, as a sore; to cause to burn, as poison;
அழற்றுதல். அந்த மருந்து உடம்பை எரிக்கிறது.
5. To digest;
சீரணிக்கச் செய்தல். இந்த மருந்து உண்டதையெல்லாம் எரிக்கும்.
DSAL