Tamil Dictionary 🔍

இழைதல்

ilaithal


நூற்கப்படுதல் ; உராய்தல் ; சோறு முதலியன குழைதல் ; கூடுதல் ; நெருங்கிப்பழகுதல் ; உள்நெகிழ்தல் ; மூச்சுச் சிறுகுதல் ; குறுமூச்சு விடுதல் ; மனம் பொருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூற்கப்படுதல். இழைந்த நூலிணை (கம்பரா. சித்ர. 9) To be reeled, as yarn; மூச்சுச்சிறுகுதல். உயிரிழைந்து கொண்டிருக்கிறது. 8. To breathe in a scarcely audible manner, as a dying person; பிணைதல். பாம்புகள் ஒன்றோடொன் றிழையும். (W.) 7. To copulate, as snakes; கூடுதல். இழைந்தவர் நலத்தை யெய்தி (சீவக. 2720). 6. To be together, as husband and wife; உராய்தல். மூங்கில் ஒன்றோடொன்று இழைந்து பற்றிக் கொள்ளும் Colloq. 2. To rub against as the shoots of the bamboo tree; நெருங்கிப்பழகுதல். அவர்களிருவரும் இப்போது நிரம்ப இழைகிறார்கள். Colloq. 4. To associate very intimately; சோறு குழைதல். (W.) 3. To become soft and pasty, as boiled rice by being kept over the fire too long; மனம் பொருந்துதல். இழையச் சொல்லி (சீவக. 1593). 9. To agree, be in accord; மெலிதல். குழந்தை நூலாய் இழைந்துவிட்டது. To become emaciated, reduced; ஊள் நெகிழ்தல். விழைந்திழைந்து வேண்டியவர்க் கண்ட கண் (குறள், 1177). 5. To have tender emotions, as in love;

Tamil Lexicon


, ''v. noun.'' Mixture.

Miron Winslow


iḻai-
4 v. intr. 1. cf. இழு-.
To be reeled, as yarn;
நூற்கப்படுதல். இழைந்த நூலிணை (கம்பரா. சித்ர. 9)

2. To rub against as the shoots of the bamboo tree;
உராய்தல். மூங்கில் ஒன்றோடொன்று இழைந்து பற்றிக் கொள்ளும் Colloq.

3. To become soft and pasty, as boiled rice by being kept over the fire too long;
சோறு குழைதல். (W.)

4. To associate very intimately;
நெருங்கிப்பழகுதல். அவர்களிருவரும் இப்போது நிரம்ப இழைகிறார்கள். Colloq.

5. To have tender emotions, as in love;
ஊள் நெகிழ்தல். விழைந்திழைந்து வேண்டியவர்க் கண்ட கண் (குறள், 1177).

6. To be together, as husband and wife;
கூடுதல். இழைந்தவர் நலத்தை யெய்தி (சீவக. 2720).

7. To copulate, as snakes;
பிணைதல். பாம்புகள் ஒன்றோடொன் றிழையும். (W.)

8. To breathe in a scarcely audible manner, as a dying person;
மூச்சுச்சிறுகுதல். உயிரிழைந்து கொண்டிருக்கிறது.

9. To agree, be in accord;
மனம் பொருந்துதல். இழையச் சொல்லி (சீவக. 1593).

iḻai-,
12 v. intr.
To become emaciated, reduced;
மெலிதல். குழந்தை நூலாய் இழைந்துவிட்டது.

DSAL


இழைதல் - ஒப்புமை - Similar