Tamil Dictionary 🔍

போடுதல்

poaduthal


எறிதல் ; இடுதல் ; தாழ் முதலியன இடுதல் ; தரித்தல் ; ஈனுதல் ; அச்சிட்டு வெளிப்படுத்துதல் ; கணக்குச்செய்தல் ; வரைதல் ; பரிமாறுதல் ; அடித்தல் ; விதைத்தல் ; பயன்படுத்தல் ; கள் முதலியன குடித்தல் ; விடுத்தல் ; பணம் முதலியன கட்டுதல் ; பிரித்து இடுதல் ; உண்டாதல் ; ஒரு துணைவினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரு துணைவினை. அவன் செய்து போட்டான். An auxiliary verb; உண்டாதல். (w.)-aux. To become, form, பிரித்து இடுதல். சீட்டுப் போடு. 16. To cast, as lots; to allot; பண முதலியன கட்டுதல். பணம் போட்டு வாங்கினான். 15. To pay, subscribe, invest; எறிதல். பூத்த கடுக்கையைச் சிறிதும் போடா (இரகு. ஆற்று. 19). 1. To cast down, throw a short distance; to cast away; இடுதல். புல்லாயினு மொருபச்சிலையாயினும் போட்டிறைஞ்சி (தாயு. பாயப்புலி. 31). 2. To put, set in a position, apply, lay; தாழ் முதலியன இடுதல். கதவு போட்டாயிற்றா? 3. To fasten, as a bolt; தரித்தல். வயிரமாலை பொலியப் போட்டு (இரகு. இலவண. 40). 4. To put on, as ornaments; ஈனுதல். வாழை குலை போட்டது. 5. To bring forth, as animals; to put forth, yield, as fruit-trees; அச்சிட்டு வெளிப்படுத்துதல். புஸ்தகம் போட்டான். 6. To bring out; to publish; கணக்குச் செய்தல். Colloq. 7. To work, as a sum; வரைதல். Colloq. 8. To draw, as a figure; பரிமாறுதல். Colloq. 9. To serve, as food; to pour, as a drink; அடித்தல். செருப்பாலொருவன் போடானோ (தனிப்பா. i, 41, 80). 10. To strike; to stamp; to beat, as a drum; விதைத்தல். 11. To sow, plant; உபயோகித்தல். புகையிலை போடுகிறவன். 12. To use, as tobacco; to be addicted to; கள் முதலியன குடித்தல். Colloq. 13. To drink, as toddy; விடுத்தல். வீரமுங் களத்தேபோட்டு (கம்பரா. கும்பக. 1). 14. To lose; to drop;

Tamil Lexicon


pōṭu
6 v. tr.
1. To cast down, throw a short distance; to cast away;
எறிதல். பூத்த கடுக்கையைச் சிறிதும் போடா (இரகு. ஆற்று. 19).

2. To put, set in a position, apply, lay;
இடுதல். புல்லாயினு மொருபச்சிலையாயினும் போட்டிறைஞ்சி (தாயு. பாயப்புலி. 31).

3. To fasten, as a bolt;
தாழ் முதலியன இடுதல். கதவு போட்டாயிற்றா?

4. To put on, as ornaments;
தரித்தல். வயிரமாலை பொலியப் போட்டு (இரகு. இலவண. 40).

5. To bring forth, as animals; to put forth, yield, as fruit-trees;
ஈனுதல். வாழை குலை போட்டது.

6. To bring out; to publish;
அச்சிட்டு வெளிப்படுத்துதல். புஸ்தகம் போட்டான்.

7. To work, as a sum;
கணக்குச் செய்தல். Colloq.

8. To draw, as a figure;
வரைதல். Colloq.

9. To serve, as food; to pour, as a drink;
பரிமாறுதல். Colloq.

10. To strike; to stamp; to beat, as a drum;
அடித்தல். செருப்பாலொருவன் போடானோ (தனிப்பா. i, 41, 80).

11. To sow, plant;
விதைத்தல்.

12. To use, as tobacco; to be addicted to;
உபயோகித்தல். புகையிலை போடுகிறவன்.

13. To drink, as toddy;
கள் முதலியன குடித்தல். Colloq.

14. To lose; to drop;
விடுத்தல். வீரமுங் களத்தேபோட்டு (கம்பரா. கும்பக. 1).

15. To pay, subscribe, invest;
பண முதலியன கட்டுதல். பணம் போட்டு வாங்கினான்.

16. To cast, as lots; to allot;
பிரித்து இடுதல். சீட்டுப் போடு.

To become, form,
உண்டாதல். (w.)-aux.

An auxiliary verb;
ஓரு துணைவினை. அவன் செய்து போட்டான்.

DSAL


போடுதல் - ஒப்புமை - Similar