நகுதல்
nakuthal
சிரித்தல் ; மகிழ்தல் ; மலர்தல் ; கட்டவிழ்தல் ; ஒளிவிடுதல் ; புள்ளிசைத்தல் ; அவமதித்தல் ; தாழ்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரித்தல். நகுதற்பொருட்டன்று நட்டல் (குறல், 784). 1. To laugh, smile;
Tamil Lexicon
naku-,
6 v. [T.K. nagu.] intr.
1. To laugh, smile;
சிரித்தல். நகுதற்பொருட்டன்று நட்டல் (குறல், 784).
2. To rejoice;
மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774 ).
3. To bloom, as a flower;
மலர்தல். நக்க கண்போ னெய்தல் (ஐங்குறு. 151).
4. To open or expand;
கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை (பரிபா. 4, 58).
5. To shine, glitter;
பிரகாசித்தல். பொன்னக்கன்ன சடை (தேவா. 644,1).
6. To hoot, as on owl; to sing, as a bird;
புள்ளி சைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ.3, 4). - tr.
1. To despise;
அவமதித்தல். ஈகென்பவனை நகுவானும் (திரிகடு. 74).
2. To surpass, overcome, defeat;
தாழ்த்துதல். மானக்க நோக்கின் மடவார் (சீவக. 1866).
DSAL