Tamil Dictionary 🔍

தொடுதல்

thoduthal


தீண்டுதல் ; தோண்டுதல் ; பிடித்தல் ; பிழிதல் ; தொடங்குதல் ; உண்ணல் ; ஆணையிடுதல் ; செலுத்துதல் ; வாச்சியம் வாசித்தல் ; அடித்தல் ; செருப்பணிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசித்தல். தொடிற்சுடி னல்லது (குறள், 1159). 1. To touch, come in contact with, feel or perceive by the touch; பிடித்தல். தொட்ட மூவிலைச்சூலந் துளக்குவார் (கந்தபு. வீரபத். 38). 2. To handle, take hold of, use; பொருந்துதல். 3. To be connected, united with or joined to; அடித்தல். ததிமுகாதிகளை நான் தொட்டுத்தருகிறேன் (ஈடு, 3, 5, ப்ர). 13. To strike, beat; பிழிதல். நறவுந்தொடுமின் (புறநா. 262). 14. To strain, squeeze out, as juice; ஆணையிடுதல். தொட்டுவிடுத்தே னவனை (சீவக. 1876). 15. To swear upon; எடுத்தல். பதுமுகன் சிலை தொட்டானே (சீவக. 1862). 16. To take up, lift; வெளுத்தல். இவற்றைத் தொட்டபடி (ஈடு, 5, 10, 6). 17. To wash, as clothes; மனைவியல்லாரொடு கூடுதல். Loc. 18. To have illicit intercourse, as with another's wife; செருப்பணிதல். (திவா.) பாதஞ்சேரத்தொடு நீடுசெருப்பு (பெரியபு. கண்ணப்ப. 62).-intr. 19. [K. todu.] To wear, as shoes; உண்டாதல். பழிபாவமுந் தொடுமே (விநாயகவு. 77, 35). To occur, happen, come into being; தரித்தல். சுறாவேறெழுதிய மோதிரந் தொட்டாள் (கலித். 84, 23). 4. To put on, as a ring, clothes; தோண்டுதல். குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறநா. 6). 5. To dig, scoop out, excavate; துளைத்தல். உழலை மரத்தைப் போற் றொட்டன வேறு (கலித். 106). 6. To pierce through; தொடங்குதல். அன்றுதொட் டனங்கனே யாயினான் (கம்பரா. தாடக. 1). 7. To begin; செலுத்துதல். கடுங்கணைகடம்மைத் தொட்டனன் (கந்தபு. சூரபன்மன்வ. 191). 8. To discharge, as an arrow or other missile; உண்ணுதல். (சூடா.) 9. To eat; நினைத்தல். நின்பெருமலை மூழ்க வென்னுளத்தினிற்றொடாமுன் (கல்லா. 52, 9). 10. To think; வாச்சியம் வாசித்தல். கலித்த வியவ ரியந்தொட் டன்ன (மதுரைக். 304). 11. To play, as a musical instrument; to beat, s a drum; கட்டுதல். கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு (புறநா. 77). 12. To fasten, insert;

Tamil Lexicon


toṭu-,
6 v. tr.
1. To touch, come in contact with, feel or perceive by the touch;
பரிசித்தல். தொடிற்சுடி னல்லது (குறள், 1159).

2. To handle, take hold of, use;
பிடித்தல். தொட்ட மூவிலைச்சூலந் துளக்குவார் (கந்தபு. வீரபத். 38).

3. To be connected, united with or joined to;
பொருந்துதல்.

4. To put on, as a ring, clothes;
தரித்தல். சுறாவேறெழுதிய மோதிரந் தொட்டாள் (கலித். 84, 23).

5. To dig, scoop out, excavate;
தோண்டுதல். குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறநா. 6).

6. To pierce through;
துளைத்தல். உழலை மரத்தைப் போற் றொட்டன வேறு (கலித். 106).

7. To begin;
தொடங்குதல். அன்றுதொட் டனங்கனே யாயினான் (கம்பரா. தாடக. 1).

8. To discharge, as an arrow or other missile;
செலுத்துதல். கடுங்கணைகடம்மைத் தொட்டனன் (கந்தபு. சூரபன்மன்வ. 191).

9. To eat;
உண்ணுதல். (சூடா.)

10. To think;
நினைத்தல். நின்பெருமலை மூழ்க வென்னுளத்தினிற்றொடாமுன் (கல்லா. 52, 9).

11. To play, as a musical instrument; to beat, s a drum;
வாச்சியம் வாசித்தல். கலித்த வியவ ரியந்தொட் டன்ன (மதுரைக். 304).

12. To fasten, insert;
கட்டுதல். கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு (புறநா. 77).

13. To strike, beat;
அடித்தல். ததிமுகாதிகளை நான் தொட்டுத்தருகிறேன் (ஈடு, 3, 5, ப்ர).

14. To strain, squeeze out, as juice;
பிழிதல். நறவுந்தொடுமின் (புறநா. 262).

15. To swear upon;
ஆணையிடுதல். தொட்டுவிடுத்தே னவனை (சீவக. 1876).

16. To take up, lift;
எடுத்தல். பதுமுகன் சிலை தொட்டானே (சீவக. 1862).

17. To wash, as clothes;
வெளுத்தல். இவற்றைத் தொட்டபடி (ஈடு, 5, 10, 6).

18. To have illicit intercourse, as with another's wife;
மனைவியல்லாரொடு கூடுதல். Loc.

19. [K. todu.] To wear, as shoes;
செருப்பணிதல். (திவா.) பாதஞ்சேரத்தொடு நீடுசெருப்பு (பெரியபு. கண்ணப்ப. 62).-intr.

To occur, happen, come into being;
உண்டாதல். பழிபாவமுந் தொடுமே (விநாயகவு. 77, 35).

DSAL


தொடுதல் - ஒப்புமை - Similar