தழுவுதல்
thaluvuthal
அணைத்தல் ; மேற்கொள்ளுதல் ; அன்பாய் நடத்துதல் ; நட்பாக்கிக்கொள்ளுதல் ; உள்ளடக்குதல் ; பூசுதல் ; பொருந்துதல் ; சூழ்தல் ; புணர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்கொள்ளுதல். பணிமுறை தழுவுந் தன்மையார் (கம்பரா. ஊர்தே. 50). 2. To adopt, as an opinion, course of life; to keep, observe, as a command; சூழ்தல். தண்பணை தழீஇய (பெரும்பாண். 242). 5. To surround; நட்பாக்குதல். உலகந் தழீஇய தொட்பம் (குறள், 425). 4. To make friendship; பூசுதல். சாந்தங்கொண்டு நலமலிய வாகந் தழீஇ (பதினொ. திருக்கைலா. 15). 7. To besmear, rub on; பொருந்துதல். தமிழ்தழிய சாயலவர் (சீவக. 2026). 8. To mix with, join; புணர்தல். 9. To copulate; அணைத்தாதரித்தல். குடிதழீஇ (குறள், 544). 3. To treat kindly; உள்ளடக்குதல். அணங்குசா லுயர்நிலை தழீஇ (திருமுரு. 289). 6. To compress; to contain; to keep within oneself; அணைத்தல். மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ (மணி. 6, 139). 1. [K. taḷ.] To clasp, embrace, hug, entwine;
Tamil Lexicon
taḻuvu-,
5 v. tr. [M. taḻukuka.]
1. [K. taḷ.] To clasp, embrace, hug, entwine;
அணைத்தல். மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ (மணி. 6, 139).
2. To adopt, as an opinion, course of life; to keep, observe, as a command;
மேற்கொள்ளுதல். பணிமுறை தழுவுந் தன்மையார் (கம்பரா. ஊர்தே. 50).
3. To treat kindly;
அணைத்தாதரித்தல். குடிதழீஇ (குறள், 544).
4. To make friendship;
நட்பாக்குதல். உலகந் தழீஇய தொட்பம் (குறள், 425).
5. To surround;
சூழ்தல். தண்பணை தழீஇய (பெரும்பாண். 242).
6. To compress; to contain; to keep within oneself;
உள்ளடக்குதல். அணங்குசா லுயர்நிலை தழீஇ (திருமுரு. 289).
7. To besmear, rub on;
பூசுதல். சாந்தங்கொண்டு நலமலிய வாகந் தழீஇ (பதினொ. திருக்கைலா. 15).
8. To mix with, join;
பொருந்துதல். தமிழ்தழிய சாயலவர் (சீவக. 2026).
9. To copulate;
புணர்தல்.
DSAL