Tamil Dictionary 🔍

சார்பு

saarpu


இடம் ; பக்கம் ; அடைக்கலம் ; பற்று ; பிறப்பு ; பௌத்தர் கூறும் பன்னிரண்டு நிதானங்கள் ; ஒருதலை நிற்றல் ; அண்மை ; கூட்டுறவு ; பொருத்தம் ; சார்ப்புக்கூரை ; புகலிடம் ; கிட்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெளத்தர் கூறும் பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்ற பன்னிரண்டு நிதானங்கள். (மணி. 21, 163-4). 8. (Buddh.) Causes of misery, 12 in number, viz., pētaimai, ceykai, uṇarvu, aru-v-uru, vāyil, ūṟu, nukarvu, vēṭkai, paṟṟu, pavam, tōṟṟam, viṉai-p-payaṉ; துணை. மதலையாஞ் சார்பிலார்க்கு (குறள், 449). 4. Help, support; சமீபம். (W.) 12. Adjacency, nearness; கிட்டுகை. (W.) 11. Approximation; கூட்டுறவு. அவனோடு இவன் சார்புள்ளவன். 10. Friendship; ஒரு தலைப்பட்சம். அவனுக்குச் சார்பாகப் பேசுகிறான். 9. Bias, partiality; புகலிடம். ஓர் சார்பிலாமையால் ...காப்பு நீங்கினார் (திருவிளை. வளையல். 28). 5. Refuge, shelter; பிறப்பு. சார்பறுத்துய்தி யென்று கூறினன் (சீவக. 1221) 7. Birth; பற்று. சார்புகெட வொழுகின் (குறள், 359). 6. Attachment; இடம். படைஞர் சார்புதொறேகி (கந்தபு. முதனாட். 30). 1. Place; பக்கம். வாதிசார்பில் நியாயாதிபதி தீர்மானித்தார். 2. Side; . 3. See சார்ப்பு, 1.

Tamil Lexicon


, ''v. noun.'' and ''s.'' Place, இடம். 2. Help, support, patronage, protection, favor, உதவி. 3. Dependence, reliance, பற்று. 4. Place of refuge, asylum, shel ter, defence, அடைக்கலம். 5. Favoritism, partiality, தயவு. 6. Bias, prejudice, வார பட்சம். 7. Approximation, கிட்டுகை. 8. Inclination, propensity, tendency, bent of mind, மனச்சாய்வு. 9. Adhesion, friend ship, attachment, கூட்டுறவு. ''(c.)'' 1. Specific or distinguishing quality, nature or cha racter, உரிமை. 11. Connection, இணைப்பு. 12. Adjacency, nearness of a place or thing, அணுகுகை. 13. Contact, coalescence, combination, junction, சேர்கை. 14. In clining toward a color, taste, smell, dispositions, quality, &c., பொருத்தம்.

Miron Winslow


cārpu,
n. சார்-.
1. Place;
இடம். படைஞர் சார்புதொறேகி (கந்தபு. முதனாட். 30).

2. Side;
பக்கம். வாதிசார்பில் நியாயாதிபதி தீர்மானித்தார்.

3. See சார்ப்பு, 1.
.

4. Help, support;
துணை. மதலையாஞ் சார்பிலார்க்கு (குறள், 449).

5. Refuge, shelter;
புகலிடம். ஓர் சார்பிலாமையால் ...காப்பு நீங்கினார் (திருவிளை. வளையல். 28).

6. Attachment;
பற்று. சார்புகெட வொழுகின் (குறள், 359).

7. Birth;
பிறப்பு. சார்பறுத்துய்தி யென்று கூறினன் (சீவக. 1221)

8. (Buddh.) Causes of misery, 12 in number, viz., pētaimai, ceykai, uṇarvu, aru-v-uru, vāyil, ūṟu, nukarvu, vēṭkai, paṟṟu, pavam, tōṟṟam, viṉai-p-payaṉ;
பெளத்தர் கூறும் பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்ற பன்னிரண்டு நிதானங்கள். (மணி. 21, 163-4).

9. Bias, partiality;
ஒரு தலைப்பட்சம். அவனுக்குச் சார்பாகப் பேசுகிறான்.

10. Friendship;
கூட்டுறவு. அவனோடு இவன் சார்புள்ளவன்.

11. Approximation;
கிட்டுகை. (W.)

12. Adjacency, nearness;
சமீபம். (W.)

DSAL


சார்பு - ஒப்புமை - Similar