Tamil Dictionary 🔍

சரி

sari


ஒப்பு ; சம்மதக்குறிப்பு ; மலைச்சாரல் ; வழி ; கூட்டம் ; கைவளை ; பொருத்தம் ; நடத்தை ; ஒழுங்கு ; சரியளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலைச்சாரல். சிங்கம் வேட்டந் திரிசரிவாய் (திருக்கோ. 156). 1. [T. tcari.] Declivity, slope of a mountain; வழி. பெருமலைக ளிடைச்சரியிற் பெரும் பன்றி புனமேய்ந்து (பெரியபு. கண்ணப்ப. 142). 2. Way, road; கூட்டம். (பிங்.) 3. Crowd, flock; வளைவகை. சரியின் முன்கை நன்மாதர் (தேவா. 118, 3). 4. A kind of bracelet; நடத்தை. அவனுடைய சரி நன்றாயில்லை. Colloq. Conduct; ஒப்பு. மதித்தழும்புக்குச் சரி. (குமர. பிர. சிவகாமி. இரட். 16). 1. Similarity; பொருத்தம். 2. Suitability, agreement, exactness ; ஒழுங்கு. 3. Rightness, propriety, regularity; சரியளவு. சொன்னஞ் சரிகூட்டி (பணவிடு. 232). 4. Equal measure or quantity; சம்மதிக்குறிப்பு. 5. A term of approbation meaning 'yes', 'right';

Tamil Lexicon


s. conduct; 2. equality, agreement, exactness 3. propriety, correctness, straightness; 4. a word of approbation meaning `yes'. அவன் சரி நன்றாயில்லை, his conduct is not good. அது சரி, that is true. இது அதுக்குச் சரியன்று, this is not equal to that. சரிதான், it is right, it is well enough. வந்தாலும்சரி போனாலும்சரி, it is all the same whether he (or it) comes or not. எல்லை இந்தமட்டும் சரி, the limit does end here. சரிக்கட்ட, to pay fully, duly, to adjust, to redress, to retaliate, to take revenge, to recompense, to reward. நன்மைக்குத் தீமையைச் சரிகட்ட, to return evil for good. சரிக்குச்சரி, like for like. சரிக்குச்சரி செய்ய, -பண்ண, கட்ட, to recompense, to render like for like. சரிக்குச்சரி பேச, to answer impertinently. சரி சமானம், exact likeness, equality. சரி சொல்ல, to answer for one, to become responsible for, to second a motion. சரிபாதி, just half. சரிபோக, to go properly as a tune etc. to be to one's liking, to agree, to resemble. உமக்குச் சரிப்போனாப்போலே, as you please. தனக்குச் சரிப்போனாப்போலே (சரி போனபடி) நடக்கிறான், he lives after his own way. சரிப்பட, to become right or correct, to succeed, to suit, to agree, to resemble, to be finished, settled. அது என் மனதுக்குச் சரிப்படவில்லை, I am not satisfied with that. அவனுக்கும் எனக்கும் சரிப்படாது, we cannot agree. அத்தோடே சரிப்பட்டுப் போயிற்று, all is settled, there remains no more. சரிப்படுத்த, -பண்ணிப்போட, -ஆக்க, to make equal, to correct, to adjust, to persuade, to reconcile. ஒருவனுக்குச் சரிபண்ண, to make one content or satisfied. சரிமேரை, established privileges of individual riots. சரிவர, to prove right, to be equal, to agree; 2. adv. satisfactorily, rightly, fully. சரிவரக் கொடு, give the whole amount due.

J.P. Fabricius Dictionary


cari சரி 1. correct(ness) [n.] 2. O.K., alright, fine, yes [int.]

David W. McAlpin


, [cari] ''(indeclin.) s.'' Declivity or side of a mountain, மலைச்சாரல்; [''ex'' சரி, to lean.] ''(p.)'' 2. A kind of bracelet; an anklet, கைச்சரி, காற்சரி; [''ex'' சரம், string.] 3. Way, road, வழி, (நிக); [''ex Sa. Chara,'' going.] 4. Right, propriety; straightness, exactness, ஒழுங்கு; [''ex Sa. Sara,'' being straight.] 5. Equality, parity, சமம். 6. Agreement, conformity, similarity, ஒப்பு. 7. Identity, ஒருதன்மை; [''ex Sa. Chara,'' being like.] 8. (சது.) Collection, multitude, flock, கூட்டம். 9. ''[adv.]'' A term of approbation, equivalent to, right, சம்மதிக்குறிப்பு. சரிதான். That is right, proper, true. அதுவுமிதுவுஞ்சரி. This and that are alike; they are equal to one another. வந்தாலுஞ்சரி, போனாலுஞ்சரி. It is all the same whether he, ''(or it)'' comes or not. இதனோடேசரி. This completes it; this is his last; this terminates his life; just so far, &c. எனக்குச்சரியாகநடந்துகொள்ளுகிறான். He does every thing, as I wish. சரியானமட்டும். As much as you need. இதுபெரியோர்க்குச்சரியல்ல. This does not become the great.

Miron Winslow


Cari-,
n. சரி-.
1. [T. tcari.] Declivity, slope of a mountain;
மலைச்சாரல். சிங்கம் வேட்டந் திரிசரிவாய் (திருக்கோ. 156).

2. Way, road;
வழி. பெருமலைக ளிடைச்சரியிற் பெரும் பன்றி புனமேய்ந்து (பெரியபு. கண்ணப்ப. 142).

3. Crowd, flock;
கூட்டம். (பிங்.)

4. A kind of bracelet;
வளைவகை. சரியின் முன்கை நன்மாதர் (தேவா. 118, 3).

Cari,
n. Caryā.
Conduct;
நடத்தை. அவனுடைய சரி நன்றாயில்லை. Colloq.

Cari-,
n. Pkt. sari sadrša.
1. Similarity;
ஒப்பு. மதித்தழும்புக்குச் சரி. (குமர. பிர. சிவகாமி. இரட். 16).

2. Suitability, agreement, exactness ;
பொருத்தம்.

3. Rightness, propriety, regularity;
ஒழுங்கு.

4. Equal measure or quantity;
சரியளவு. சொன்னஞ் சரிகூட்டி (பணவிடு. 232).

5. A term of approbation meaning 'yes', 'right';
சம்மதிக்குறிப்பு.

DSAL


சரி - ஒப்புமை - Similar