Tamil Dictionary 🔍

கொல்லுதல்

kolluthal


kol-,
3. v. tr.[K. M. kol.]
1. To kill, slay, murder;
வதைத்தல். கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109).

2. To destroy, ruin;
அழித்தல். கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16).

3. To fell, cut down;
வெட்டுதல். மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29).

4. To reap, as the heads of grain;
கதிரறுத்தல். நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்து (தொல். பொ. 76, உரை).

5. To afflict, tease;
துன்பப் படுத்துதல். நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).

6. To neutralize metallic properties by oxidation
இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுதல்.

DSAL


கொல்லுதல் - ஒப்புமை - Similar