Tamil Dictionary 🔍

அடக்கம்

adakkam


மனமொழிமெய்கள் அடங்குகை ; கீழ்ப்படிவு ; பணிவு ; அடங்கிய பொருள் ; மறை பொருள் ; கொள்முதல் ; பிணம் அடக்கம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறை வகை. (சிலப். 3, 27, உரை.) Kind of drum; வாணவகை. (J.) 13. Fireworks in layers, producing successive discharges; இரகசியம். எல்லாம் அடக்க மாயிருக்கிறது. 12. Secret; புதைபொருள். 10. Treasure trove; பிரேதச்சேமம். 11. Burial; அடங்கியபொருள். 9. Contents, as of a box, enclosures, as of a letter; மூர்க்கை. (W.) 8. Loss of consciousness, stupor, as from snake-bite; சுருக்குகை. 7. Contraction, as a tortoise drawing in its limbs; வாங்கினவிலை. வாங்கியதற்கு அடக்கம் பத்து ரூபா. 6. Cost price; செறிந்திருக்கை. பெட்டியில் புத்தகங்களை அடக்கமாக வை. 5. Being packed within a space; பொறுமை. 4. Patience, endurance; இச்சையடக்கம். இளையா னடக்க மடக்கம் (நாலடி. 65). 3. Self-control; பணிவொழுக்கம். (தொல்.பொ.260,உரை.) 2. Submission, subordination; அமைதி. 1. Calmness;

Tamil Lexicon


அடக்கு, s. (அடங்கு) restraint, repression, அடங்குகை; 2. subordination, submission, கீழ்ப்படிவு; 3. continency, command over the appetites, இச்சையடக்கம்; 4. modesty, forbearance, ஒடுக்கம்; 5. concealment, மறைப்பு; 6. burial, interment, சவச் சேமம்; 7. contents, அடங்கியது; 8. contents of a book, epitome, பொழிப்பு. அடக்கமுள்ளவன், a modest person. அடக்கம்பண்ண, to hide, to conceal to bury. "அடக்கம் அமரருளுய்க்கும் அடங்கா மை, ஆரிருள் உய்த்துவிடும்"- குறள். தன்னடக்கம், self-restraint.

J.P. Fabricius Dictionary


ஒடுக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṭkkm] ''s.'' Restraint, repression, compression, அடங்குகை. 2. Subordination, submission, கீழ்ப்படிவு. 3. Restraining the senses, self-control, forbearance, பொறியொ டுக்கம். 4. Continency, command over the appetites, temperance, modesty, chlastity, good behaviour, இச்சையடக்கம். 5. Conceal ment, sepulture, interment of a dead body, பிரேதமடக்குகை. 6. Retiredness, reservedness silence, taciturnity, மௌனம். 7. Contents of a box, &c., that which is comprehend ed, அடங்கியது. 8. Contents of a book, &c., epitome, abstract, summary, import, sub stance, பொழிப்பு. 9. Shrinking, compress ing,--as a tortoise its members; re duction, condensation, compression, &c. of the powers of the mind, syncope from snake bite, &c., ஒடுக்கம். 1. ''[prov.]'' Fire works in layers, producing successive dis charges, பாணம். 11. Treasure kept in con cealment, or laid by unobserved by others, புதைபொருள். 12. Erudition, profound know ledge connected with paucity of words and gravity of manners, மிக்கறிவு; ''(ex)'' அடக்கு or அடங்கு.

Miron Winslow


aṭakkam
n. அடங்கு-. [T. adakuva, K. adaka, M. aṭakkam.]
1. Calmness;
அமைதி.

2. Submission, subordination;
பணிவொழுக்கம். (தொல்.பொ.260,உரை.)

3. Self-control;
இச்சையடக்கம். இளையா னடக்க மடக்கம் (நாலடி. 65).

4. Patience, endurance;
பொறுமை.

5. Being packed within a space;
செறிந்திருக்கை. பெட்டியில் புத்தகங்களை அடக்கமாக வை.

6. Cost price;
வாங்கினவிலை. வாங்கியதற்கு அடக்கம் பத்து ரூபா.

7. Contraction, as a tortoise drawing in its limbs;
சுருக்குகை.

8. Loss of consciousness, stupor, as from snake-bite;
மூர்க்கை. (W.)

9. Contents, as of a box, enclosures, as of a letter;
அடங்கியபொருள்.

10. Treasure trove;
புதைபொருள்.

11. Burial;
பிரேதச்சேமம்.

12. Secret;
இரகசியம். எல்லாம் அடக்க மாயிருக்கிறது.

13. Fireworks in layers, producing successive discharges;
வாணவகை. (J.)

aṭakkam
n. dhakkā.
Kind of drum;
பறை வகை. (சிலப். 3, 27, உரை.)

DSAL


அடக்கம் - ஒப்புமை - Similar