வேண்டு
vaendu
III. v. t. desire, wish, விரும்பு; 2. beg, pray, மன்றாடு; 3. impers. & defect. v. be necessary, be wanted. In the last sense, only a few forms are in use: the finite verb (வேண்டும் or வேணும், neg. வேண்டாம்; or வேணாம், common to all persons and genders), the adj. part. (வேண்டிய, வேண்டின, neg. வேண்டாத, வேண்டா), and the adv. part. (வேண்டி, neg. வேண்டாது, வேண்டாமல்). அவன் (இது) எனக்கு வேண்டும், he (this) is necessary to me, I want him (this). நீர் அப்படிச் செய்யவேண்டும், please to do so. நீ சீக்கிரமாய் வரவேண்டும், you must make haste to come. அவன் உனக்கென்ன வேண்டும், what relation does he bear to you? உமக்குத் தண்ணீர் வேண்டுமோ (வேணு மோ), would you have water? வேண்டும், yes, I want; வேண்டாம், no, I don't want. வேண்டுமென்று (வேணுமென்று) செய் தான், he did it intentionally. நான் அதை வேண்ட இல்லை, அது எனக்கு வேண்டியதாயிருக்க வில்லை, I do not want it. மருந்து எனக்கு வேண்டாம், I do not want medicine. நீ அப்படிச்செய்ய வேண்டாம், you must (need) not do so. அது தனக்கு வேண்டாமென்றான், he refused it. வேண்டாதிருக்க, to be not wanted. வேண்டாமை, aversion, dislike. வேண்டா வெறுப்பாய், unwillingly, with disgust, with reluctance. வேண்டி, adv. part. being wanted; 2. as prep for the sake of, for. அவனை வேண்டி, for his sake. என்னத்தை வேண்டி, with what object? வேண்டிக் கொள்ள, to solicit, to pray. வேண்டிய சகாயம், all the assistance that is desired or necessary. வேண்டுங் காரியம் தருவேன், I will give whatever is necessary. வேண்டுதல், வேண்டல், v. n. prayer, petition; 2. desiring, begging. வேண்டும், வேணும், it is required or necessary. வேண்டுமென்ற பாக்கியம், all prosperity that can be desired. வேண்டுமென்றிருக்க, to desire.
J.P. Fabricius Dictionary