Tamil Dictionary 🔍

வீசுதல்

veesuthal


எறிதல் ; சிறகடித்தல் ; ஆட்டுதல் ; இரட்டுதல் ; சுழற்றுதல் ; அடித்தல் ; விரித்து நீட்டுதல் ; மிகுத்திடுதல் ; வரையாது கொடுத்தல் ; சிந்துதல் ; சிதறுதல் ; களைதல் ; செய்யாதொழிதல் ; காற்று முதலியன அடித்தல் ; பரவுதல் ; தீநாற்றம் அடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்று முதலியன அடித்தல். வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் (தேவா. 1203, 1). 1. To blow, as the wind; பரவுதல். ஞானவாசம் வீசி ப்ரகாசியா நிற்ப (திருப்பு. 1132). 2. To spread; to be diffused or emitted, as fragrance, rays, etc.; துர்நாற்றம் அடித்தல். 3. To be emitted, as a bad smell; இரட்டுதல். முழவுத் தோளோச்சித் தண்ணென வீசியோயே (புறநா. 50, 13). 4. To fan; சுழற்றுதல். வருமாய ரோடுடன் வளைகோல் வீச (திவ். பெரியாழ். 3, 4, 6). 5. To wave, flourish, as a sword; அடித்தல். கழியால் அவனை வீசினான். 6. To strike, beat, flog; விரித்து நீட்டுதல். இருஞ்சிறை வீசியெற்றி (கம்பரா. சடாயுவுயிர். 107). 7. To open out, spread; to lengthen, stretch; மிகுத்திடுதல். (அரு. நி.) 8. To accumulate; வரையாது கொடுத்தல். (பிங்.) இரவலர் புன்கண்டீர நாடொறும் உரைசானன்கலம் வரைவில் வீசி (பதிற்றுப். 54, 8). 9. To give liberally; சிந்துதல். கண்¢ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ (கலித். 145). 10. To spill; சிதறுதல். கொள்பத மொழிய வீசிய புலனும் (புறநா. 23). 11. To strew, scatter; sow, as seeds; களைதல். உடலுறு பாசம்வீசா தும்பர்ச்செல்வாரு மொத்தார் (கம்பரா. கடறாவு. 11). 12. To lay aside, throw off; செய்யாமொழிதல். சுடுவேனது தூயவன் வில்லினாற்றற்கு மாசென்று வீசினேன் (கம்பரா. சூளா. 18). -intr. 13. To abandon, to leave off, to drop; சிறகடித்தல். வீசுஞ் சிறகாற் பறத்திர் (திவ். இயற். திருவிருத். 54). 2. To flap, as wings; ஆட்டுதல். மூங்கில் போன் றிருந்துள்ள தோள் வீசி (திவ். பெரியதி. 3, 7, 5, வ்யா.). 3. To swing, as the arm; எறிதல். (பிங்.) நின்ற மண்ணாயினுங் கொண்டு வீசுமினே (திவ். இயற். திருவிருத். 53). 1. To throw, fling, as a weapon; to cast, as a net;

Tamil Lexicon


வீசல்.

Na Kadirvelu Pillai Dictionary


vicu-
5 v. tr. cf. vij. [T. vicu K. bisu M. vicuka.] tr.
1. To throw, fling, as a weapon; to cast, as a net;
எறிதல். (பிங்.) நின்ற மண்ணாயினுங் கொண்டு வீசுமினே (திவ். இயற். திருவிருத். 53).

2. To flap, as wings;
சிறகடித்தல். வீசுஞ் சிறகாற் பறத்திர் (திவ். இயற். திருவிருத். 54).

3. To swing, as the arm;
ஆட்டுதல். மூங்கில் போன் றிருந்துள்ள தோள் வீசி (திவ். பெரியதி. 3, 7, 5, வ்யா.).

4. To fan;
இரட்டுதல். முழவுத் தோளோச்சித் தண்ணென வீசியோயே (புறநா. 50, 13).

5. To wave, flourish, as a sword;
சுழற்றுதல். வருமாய ரோடுடன் வளைகோல் வீச (திவ். பெரியாழ். 3, 4, 6).

6. To strike, beat, flog;
அடித்தல். கழியால் அவனை வீசினான்.

7. To open out, spread; to lengthen, stretch;
விரித்து நீட்டுதல். இருஞ்சிறை வீசியெற்றி (கம்பரா. சடாயுவுயிர். 107).

8. To accumulate;
மிகுத்திடுதல். (அரு. நி.)

9. To give liberally;
வரையாது கொடுத்தல். (பிங்.) இரவலர் புன்கண்டீர நாடொறும் உரைசானன்கலம் வரைவில் வீசி (பதிற்றுப். 54, 8).

10. To spill;
சிந்துதல். கண்¢ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ (கலித். 145).

11. To strew, scatter; sow, as seeds;
சிதறுதல். கொள்பத மொழிய வீசிய புலனும் (புறநா. 23).

12. To lay aside, throw off;
களைதல். உடலுறு பாசம்வீசா தும்பர்ச்செல்வாரு மொத்தார் (கம்பரா. கடறாவு. 11).

13. To abandon, to leave off, to drop;
செய்யாமொழிதல். சுடுவேனது தூயவன் வில்லினாற்றற்கு மாசென்று வீசினேன் (கம்பரா. சூளா. 18). -intr.

1. To blow, as the wind;
காற்று முதலியன அடித்தல். வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் (தேவா. 1203, 1).

2. To spread; to be diffused or emitted, as fragrance, rays, etc.;
பரவுதல். ஞானவாசம் வீசி ப்ரகாசியா நிற்ப (திருப்பு. 1132).

3. To be emitted, as a bad smell;
துர்நாற்றம் அடித்தல்.

DSAL


வீசுதல் - ஒப்புமை - Similar