Tamil Dictionary 🔍

புரள்

pural


புரளு, I. v. i. roll over, wallow, welter in, உருளு; 2. be over-turned; 3. fail in one's word, தவறு; 4. overflow, அலைமறி; 5. revolve; 6. become soiled or dirty; 7. (fig.) abound, மிகு. நீ பேச்சுப் புரண்டாய், you shuffled in your talk. புரண்டு பேச, to talk otherwise than before. புரண்டு போக, புரண்டோட, to overflow.

J.P. Fabricius Dictionary


[purḷ ] --புரளு, கிறேன், புரண்டேன், வேன், புரள, ''v. n.'' To roll over, to tumble over, to be overturned, to wallow, or welter in, உருள. 2. To roll as a river or a torrent, to overflow, to roll as waves, அலைமறிய. 3. To become besmeared, soiled, dirty, அழுக்காக. 4. To be perfumed, soaked, drenched with, கலக்க. 5. To be deranged, or changed, as times, seasons, customs, or laws; to be overturned as a state, மாற. 6. To fail in one's word, சொற்பிறழ. 7. To be refuted or confuted, வாதுமடங்க. 8. To revolve, சுற்ற. 9. ''(fig.)'' To abound, மிக. தண்ணீர்கரைபுரண்டோடிற்று. The water has overflowed the bank. பேச்சுப்புரளலாமா. Will you fail in your word? நீபுரண்டுபேசுகிறாய். You shuffle in your talk.

Miron Winslow


puraḷ-
2 v. intr.
1. [T. peralu, K. poral, M. puraḷuka.] To roll over; to tumble over; to be upset;
உருளுதல்.

2. To slip off;
கழிதல். புல்லார் புரள விடல் (குறள், 755).

3. To roll, as waves;
அலைமறிதல். புரணெடுந் திரைகளும் (கம்பரா. விபீடண. 27).

4. To be full to the brim; to overflow;
நிரம்பி வழிதல். ஆறு கரைபுரண்டு போகிறது.

5. To become besmeared, soiled or dirty;
அழுக்காதல். (W.)

6. To be soaked, drenched;
நீரிற் கலத்தல். (W.)

7. To be deranged, to be changed, as times, seasons, customs or laws; to be overturned, as a state;
மாறுபாடடைதல்.

8. To go back upon one's word;
சொற்பிறழ்தல்.

9. To be refuted or confuted;
ஆட்சேபிக்கப்படுதல். (W.)

10. To revolve;
சுற்றுதல். (W.)

11. To abound;
மிகுதல். அந்த ஊரில் பணம் புரளுகிறது.

12. To come alternately;
மாறிமாறி வருதல். வெயில்களும் நிலாக்களும் புரள (கம்பரா. பிரமா. 99).

13. To die;
சாதல். கழுத்திலே புண்ணாகிப் புழுத்துப்புரண்டான் (குருபரம், 165, ஆறா.).

DSAL


புரள் - ஒப்புமை - Similar