Tamil Dictionary 🔍

பச்சை

pachai


பசுமை நிறம் ; மரகதம் ; பயறு ; திருமணத்தில் நான்காம் நாளில் மணமக்களை வாழ்த்திப் பரிசு வழங்கும் சடங்கு ; வெற்றிலை ; மணப்புல்வகை ; சாயத்துக்கு உதவும் பூடுவகை ; பச்சைகுத்திய அடையாளம் ; பசப்புநிறம் ; திருமால் ; புதன் ; நன்கொடை ; கப்பல் ; கைம்மாறு ; உணவுப்பொருள் ; வேகாதது ; உலராதது ; முற்றாதது ; ஆறாதது ; தூய்மை பண்ணப்படாதது ; தோல் ; போர்வை ; குளிர்ச்சி ; கொட்டசொல் ; வெளிப்படையானது ; மிகுதி ; இலாபம் ; அநாகரிகம் ; பயிர்கட்கு வரும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. பச்சைக்கைப்பு. (J.) 28. Intensity, excess; மரகதம். (திவா.) 2. Emerald; . 1. See பச்சாளை. (யாழ். அக.) பூடுவகை. (புட்ப. 5.) 2. A shrub; வெற்றிலை பச்சை கொடுத்தால் பாவந்தீரும் (பழ.). 4. Betel leaf; See நீருமரி. 5. Seaside Indian saltwort. வாசனைப்புல்வகை. (பிங்.) 6. A fragrant grass; பச்சைகுத்திய அடையாளம். Tinn. 7. Tattoo; பசப்புநிறம். பச்சைதீருமென் பைங்கொடி (தேவா. 497, 2). 8. Paleness, as of a maid separated from her lover; திருமால். (பிங்.) 9. Viṣṇu; See பிரத்தியும்நன். பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் (பரிபா. 3, 82). 10. cf. Pradyumna. A vyūha manifestation of Viṣṇu. புதன். (பிங்.) 11. The planet Mercury; நன்கொடை. (சீவக. 823, உரை.) 12. Present, as to a newly married pair; காணிக்கை. (ஈடு, 5, 1, 3.) 13. Offering to a superior or a deity; கப்பம். ராஜாக்கள் கொண்டுவந்த பச்சை (ஈடு, 4, 1, 1). 14. Tribute; கைம்மாறு. நல்லுதவி யாவது பச்சைகொள்ளாதே உபகரிக்கை (ஈடு, 2, 3, 4). 15. Compensation, return; சமைத்தற்குரிய உணவுப்பொருள். நெடுநாள் பச்சைதேடி விருந்திட்டாய் (ஈடு, 1, 6, 1). 16. Provisions; . 17. See பச்சைக்கலியாணம். Brāh. வேகாதது. பச்சைமாமிசம். 18. Rawness, as food uncooked; முற்றாதது. பச்சைக்காய். 19. Tenderness, unripeness, greenness, as of fruit; உலராதது. பச்சைமரம். 20. That which is not seasoned, dried or tanned; ஆறாதது. பச்சைப்புண். 21. That which is fresh or not healed; சுத்திபண்ணப்படாதது. பச்சைக் கந்தகம். 22. That which is impure, crude, as ore; தோல். (திவா.) புதுவது போர்த்த பொன்போற் பச்சை (மலைபடு. 29). 23. Skin, hide; போர்வை. புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு (சிறுபாண். 226). 24. Covering, as of the body of a yāḻ; குளிர்ச்சி. பச்சைத்தண்ணீர். 25. Freshness, as of water not boiled; coolness; அசப்பிய மொழி. பச்சையாய்ப் பேசுகிறான். 26. Vulgarity; அநாகரிகம். பச்சைப்பேச்சு. 30. Rudeness; crudenss; wildness; இலாபம். (அரும்பொருள் நிகண்டு.) 29. Profit; பசுமை நிறம். பச்சைமா மலைபோல் மேனி (திவ். திருமாலை, 2). 1. Green colour; greenness; பயறு. இறந்த விட்டிலிருந்து ஊரார்க்குப் பச்சைபோடுவார்கள். Tinn. 3. Pulse or cereals; வெளிப்படையானது. நடந்ததைப் பச்சையாய்ச் சொன்னான். 27. That which is frank, open;

Tamil Lexicon


s. greenness, rawness, unripeness, tenderness, பசுமை; 2. an emerald, மரகதம்; 3. ribaldry, vulgar language; 4. Vishnu; 5. Mercury, the planet; 6. (prov.) present to a friend or to a married pair, உலுப்பை. பச்சை குத்த, to tattoo. பச்சைபாடி, a present of vegetables.

J.P. Fabricius Dictionary


pacce பச்செ fresh, raw, cool (of water); green, yellow-green; frank, blunt

David W. McAlpin


, [pccai] ''adj.'' Green, tender, young, un ripe, raw, cool; intense; [''ex'' பசுமை.]

Miron Winslow


paccai,
n. பசு-மை. [T. patcca, K. M. pacca.]
1. Green colour; greenness;
பசுமை நிறம். பச்சைமா மலைபோல் மேனி (திவ். திருமாலை, 2).

2. Emerald;
மரகதம். (திவா.)

3. Pulse or cereals;
பயறு. இறந்த விட்டிலிருந்து ஊரார்க்குப் பச்சைபோடுவார்கள். Tinn.

4. Betel leaf;
வெற்றிலை பச்சை கொடுத்தால் பாவந்தீரும் (பழ.).

5. Seaside Indian saltwort.
See நீருமரி.

6. A fragrant grass;
வாசனைப்புல்வகை. (பிங்.)

7. Tattoo;
பச்சைகுத்திய அடையாளம். Tinn.

8. Paleness, as of a maid separated from her lover;
பசப்புநிறம். பச்சைதீருமென் பைங்கொடி (தேவா. 497, 2).

9. Viṣṇu;
திருமால். (பிங்.)

10. cf. Pradyumna. A vyūha manifestation of Viṣṇu.
See பிரத்தியும்நன். பொன்கட் பச்சை பைங்கண் மாஅல் (பரிபா. 3, 82).

11. The planet Mercury;
புதன். (பிங்.)

12. Present, as to a newly married pair;
நன்கொடை. (சீவக. 823, உரை.)

13. Offering to a superior or a deity;
காணிக்கை. (ஈடு, 5, 1, 3.)

14. Tribute;
கப்பம். ராஜாக்கள் கொண்டுவந்த பச்சை (ஈடு, 4, 1, 1).

15. Compensation, return;
கைம்மாறு. நல்லுதவி யாவது பச்சைகொள்ளாதே உபகரிக்கை (ஈடு, 2, 3, 4).

16. Provisions;
சமைத்தற்குரிய உணவுப்பொருள். நெடுநாள் பச்சைதேடி விருந்திட்டாய் (ஈடு, 1, 6, 1).

17. See பச்சைக்கலியாணம். Brāh.
.

18. Rawness, as food uncooked;
வேகாதது. பச்சைமாமிசம்.

19. Tenderness, unripeness, greenness, as of fruit;
முற்றாதது. பச்சைக்காய்.

20. That which is not seasoned, dried or tanned;
உலராதது. பச்சைமரம்.

21. That which is fresh or not healed;
ஆறாதது. பச்சைப்புண்.

22. That which is impure, crude, as ore;
சுத்திபண்ணப்படாதது. பச்சைக் கந்தகம்.

23. Skin, hide;
தோல். (திவா.) புதுவது போர்த்த பொன்போற் பச்சை (மலைபடு. 29).

24. Covering, as of the body of a yāḻ;
போர்வை. புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு (சிறுபாண். 226).

25. Freshness, as of water not boiled; coolness;
குளிர்ச்சி. பச்சைத்தண்ணீர்.

26. Vulgarity;
அசப்பிய மொழி. பச்சையாய்ப் பேசுகிறான்.

27. That which is frank, open;
வெளிப்படையானது. நடந்ததைப் பச்சையாய்ச் சொன்னான்.

28. Inten paccai,
n.
1. See பச்சாளை. (யாழ். அக.)
.

2. A shrub;
பூடுவகை. (புட்ப. 5.)

DSAL


பச்சை - ஒப்புமை - Similar