Tamil Dictionary 🔍

தோரணம்

thoranam


அலங்காரவாயில் ; தெருவில் குறுக்காகக் கட்டும் அலங்காரத் தொங்கல் ; ஊர்தி ; குரங்கு ; நீராடுமிடத்திற் கட்டும் வரம்பு ; தராசுதாங்கி ; யானைநடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாகனம் (யாழ். அக.) 2. Conveyance ; முன்காலை வைத்த சுவட்டிடத்தே பின்காலை வைத்து நடக்கும் யானைக்கதி. முன்ன ருன்றிய காற்குரி தன்னிற், பின்னர்ப்பத மிடுவது தோரண மென்ப (பன்னிருபா.276) Gait of an elephant in which it places its hind foot in the track of its forefoot ; குரங்கு. (பிங்.) 1. perh.dōlana. Monkey; தெருவிற் குறுக்காகக் கட்டும் அலங்காரத்தொங்கல். புரமெங்குந் தோரணநாட்டக் கனாக்கண்டேன் (திவ். நாய்ச். 6,1). 1. Festoons of leaves and flowers suspended across streets and entrances on auspicious occasions; அலங்கார வளைவுள்ள வாயில். தோரணத்தி னும்பரிருந்ததோர் நீதியானை (கம்பரா. அட்ச. 21). 2. Ornamented gateway surmounted with an arch; நீராடுமிடத்திற்கட்டும் வரம்பு. (W.) 3. Mound raised near a bathing place for a mark; தராசுதாங்கி. (W.) 4. Beam of a balance;

Tamil Lexicon


s. festoons to decorate, or adorn with, garlands of palm-leaves etc, மகரிகை; 2. principal entrance, an outer-door, a gateway, வாசல்; 3. the beam of a balance, தராசுக்கோல்; 4. a mound raised near a bathing place for a mark. தோரணக்கல், stone pillars in large tanks to show the height of the water. தோரணக்கால், posts supporting garlands etc, தோரணக்கம்பம். தோரணங்கட்ட, -போட, to adorn the streets with lines ornamented with flowers etc. தோரணந்தூக்க. தோரணதீபம், -விளக்கு, torches in a row used at temple procession made of rolls of cloth dipped in oil and hung by wires to a pole extending across the street. தோரணவாயில், a porch, a portico.

J.P. Fabricius Dictionary


மகரிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tōraṇam] ''s.'' Cords hung with gar lands, palm-leaves, &c., or cloth hung up to adorn a road, in honor of an idol, or great person; or to garnish a house for a festivity; or the parts about a temple for an annual ceremony, &c., மகரிகை. 2. An outward door, a porch or ornamented geteway, சித்திரகோபுரவாயில். ''(c.)'' 3. A mound raised near a bathing place for a mark, நீராடுமிடத்திற்கட்டும்வரம்பு. W. p. 386. TORAN'A. 4. ''(R.)'' The beam of a balance, தராசுதாங்கி.

Miron Winslow


tōraṇam
n. tōraṇa
1. Festoons of leaves and flowers suspended across streets and entrances on auspicious occasions;
தெருவிற் குறுக்காகக் கட்டும் அலங்காரத்தொங்கல். புரமெங்குந் தோரணநாட்டக் கனாக்கண்டேன் (திவ். நாய்ச். 6,1).

2. Ornamented gateway surmounted with an arch;
அலங்கார வளைவுள்ள வாயில். தோரணத்தி னும்பரிருந்ததோர் நீதியானை (கம்பரா. அட்ச. 21).

3. Mound raised near a bathing place for a mark;
நீராடுமிடத்திற்கட்டும் வரம்பு. (W.)

4. Beam of a balance;
தராசுதாங்கி. (W.)

tōraṇam
n.
1. perh.dōlana. Monkey;
குரங்கு. (பிங்.)

2. Conveyance ;
வாகனம் (யாழ். அக.)

tōraṇam
n. dhōraṇa
Gait of an elephant in which it places its hind foot in the track of its forefoot ;
முன்காலை வைத்த சுவட்டிடத்தே பின்காலை வைத்து நடக்கும் யானைக்கதி. முன்ன ருன்றிய காற்குரி தன்னிற், பின்னர்ப்பத மிடுவது தோரண மென்ப (பன்னிருபா.276)

DSAL


தோரணம் - ஒப்புமை - Similar