Tamil Dictionary 🔍

தாதல்

thaathal


tā-,
13 V. tr. [K. M. tā.]
1. To give, as to equals;
ஒப்போனுக்குக் கொடுத்தல். (தொல்.சொல்.446.)

2. To grant, bestow;
ஈந்தருளுதல்

3. To instruct;
உபதேசித்தல், நாதனாரருள்பெறு நந்தி தந்திட (கந்தபு. அவையடக். 8).

4. To serve;
பரிமாறுதல். இன்சோறுதருநர் (மதுரைக். 535).

5. To cause to get;
அடைவித்தல், பொருபடைதரூஉங் கொற்றமும்¢ (புறநா.35, 25.)

6. To create, form, construct;
படைத்தல். தருமதேவதை ... தருதலாற் றருமதீர்த்தம் (சேதுபு. சக்கர. 14).

7. To beget, generate, procreate;
மகப்பெறுதல். புயங்கமெலாஞ் சுதையென்னு மாதுதந்தாள் (கம்பராசடாயுகாண். 28.)

8. To produce, compose;
நூல் முதலியன இயற்றுதல். சடையன் வெண்ணெய்நல் லூர்வயிற ¢றந்ததே (கம்பரா. சிறப்புப். 11).

9. To denote; express;
உணர்த்துதல். இறந்தகாலந் தருந்தொழி லிடைநிலை (நன். 142).

10. To acquire, gather;
சம்பாதித்தல். தாளினாற்றந்த விழுநிதியும் (திரிகடு. 47).

11. To capture;
கைப்பற்றுதல். ஆரெயில் பலதந்து (புறநா. 6, 14).

12. To call, summon;
அழைத்தல். மற்றவட் டருகல¦ங்கென (சிலப். வழக்குரை. 45).

13. To yield, bring forth, as trees;
மரமுதலியன பலன் கொடுத்தல் (W.)- aux. An auxiliary added to verbs; ஒரு துணைவிணை. வண்டாய்த் திரிதருங் காலத்து (நாலடி, 284).

DSAL


தாதல் - ஒப்புமை - Similar