கொளுத்துதல்
koluthuthal
koḷuttu-,
5 v. Caus. of கொள்-. tr.
!. To cause to hold; to apply;
கொள்ளச்செய்தல். பூநாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தி அமைத்த ஊனையும் (புறநா. 14, உரை).
2. To explain;
விளக்குதல். விதியோர் கொளுத்திய வீரியமுடையது (பெருங். உஞ்சைக். 38, 294).
3. To teach, impart;
அறிவுறுத்துதல். சேணெறி செல்லக் கோணெறி கொளுத்தி (பெருங். உஞ்சைக். 58, 70).
4. To kindle, as a light; to fire, as a rocket; to set on fire, inflame, ignite;
தீப்பற்றவைத்தல்.
5. To play, as on a lute;
விணைமுதலியன வாசித்தல். நரம்பினாய கருவியைக் கொளுத்து மாக்கள் (சூடா. 2, 39).
6. To cause to enact, as a drama;
நாடகமுதலியவற்றை நடப்பித்தல். கூடிய நெறியின கொளுத்துங் காலை (சிலப். 3, 17).
7. To reprove sharply;
கண்டித்தல். நான் அவனை நன்றாய்க் கொளுத்திவிட்டேன். (W.)
8. To instigage quarrel, kindle strife;
சண்டை மூட்டுதல். (W.)
9. To slander, calumniate;
தூற்றுதல். (W.)--intr.
10. To burn; to scorch, as the sun;
வெயில் கடுமையாகக் காய்தல்.
11. To accomplish a task admirably;
வியக்கும்படி காரியம் புரிதல். Colloq.
DSAL