கொதித்தல்
kothithal
koti-,
11. v. intr. cf. kvath [T. kotuku, M. koti, Tu. kodi.]
1. To boil, bubble up from heat, effervesce;
நீர் முதலியன காய்ந்து பொங்குதல். குண்டிகை யிருந்தநீருங் . . . கொதித்ததன்றே (கம்பரா. வருணணை. 61).
2. To be heated, as the body, ground, etc.;
சூடுடையதாதல். பூமி கொதிக்கிறது.
3. To be infuriated, enraged; to burn with indignation;
கோபித்தல். (பிங்.)
4. To be offended; to be distressed; to be moved with pity;
வருத்தமுறுதல். அவன் செய்த தீங்கால் என் நெஞ்சு கொதிக்கிறது.
5. To burn with desire, hanker after;
ஆசைமிக்ககொள்ளுதல். அவன் உன்னைப் பார்க்கக் கொதிக்கிறான். Loc.
6. To have slight diarrhoea;
வயிறு நழுக்குதல். (W.)
DSAL