Tamil Dictionary 🔍

கொட்டுதல்

kottuthal


koṭṭu-,
5. v. [T. M. koṭṭu.] tr.
1. To beat, as a drum, a tambourine;
வாத்திய முழக்குதல். மத்தளங் கொட்ட (திவ். நாய்ச். 6, 6).

2. [Tu. kodapuni.] to hammer, beat, as a brazier;
கம்மியர் சம்மட்டியால் அடித்தல். கொட்டுவினைக் கொட்டிலும் (பெருங். மகத. 4, 16).

3. To clap, strike with the palms;
கையால் தட்டுதல். கொட்டினான் றோள் (கம்பரா. சம்புமா. 18).

4. To card out, as cotton;
பஞ்சரைத்தல். கொட்டிய பஞ்சுபோல் (இராமநா. அயோத். 5).

5. To pound, as paddy;
நெற்குத்துதல். கொட்டி வீழுமி குத்தல் போல் (பிரபுலிங். சித்தரா. 9).

6. To strike, beat;
அடித்தல்.

7. [tu. kodapuni.] To sting, as a scorpion, a wasp;
தேள் குளவி முதலியன கொட்டுதல். கருங்குளவி கொட்டும் (அரிச். பு. நகர்நீங். 41).

8. To pour forth, shower down, shed;
சொரிதல்.

9. To cast out or empty the contents of a basket or sack, as grain, sand;
கூடை சாக்கு முதலியவற்றினின்றும் பண்டங்களைக் கவிழ்த்தல்.

10. To throw or cast into a vessel;
பொருள்களைக் கலத்தில் ஒருசேர இடுதல்.

11. To besmear, as sandal or other fragrant paste;
அப்புதல். பூங்கேழ்த் தேய்வை . . . இளமுலை கொட்டி (திருமுரு. 35)--intr.

12. To beat, as upon the breast;
அறைந்து கொள்ளுதல். கைகளான் முலைமேற் கொட்டி (கம்பரா. இராவணன்சோக. 44).

13. To chip, as a lizard;
பல்லிசொல்லுதல். கொட்டாய் பல்லிக்குட்டி (திவ். பெரியதி. 10, 10, 4).

14. To drop, as leaves; to fall off, as hair;
உதிர்தல் மயிரெல்லாம் கொட்டிப்போயிற்று.

koṭṭu-
5 v. tr.
To wink;
கண் இமைத்தல். கொட்டாது பார்க்கிறான்.

DSAL


கொட்டுதல் - ஒப்புமை - Similar