Tamil Dictionary 🔍

கூத்து

koothu


நடனம் ; பதினொருவகைக் கூத்து ; நாடகம் ; தெருக்கூத்து ; வியத்தகு செயல் ; கேலிக்கூத்து ; குழப்பம்: நாடகம்பற்றி அமைந்த ஒரு கடைச்சங்க நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடனம். ஆடுதுங்கூத்தே (திவ். திருவாய்.10, 1, 5). 1. Dance, dancing; அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை; பதினொருவகைக் கூத்து. கடையம் . . . கொட்டியிவை காண் பதினோர் கூத்து (சிலப். 3, 1 14, உரை.) 2. Divine dances, eleven in number, viz., நாடகம். பிறவி மாமாய்க் கூத்தினையே (திவ். திருவாய். 8, 4, 11). 3. Dramatic performance, action; அதிசயச் செயல். அங்கே ஏதாவது கூத்து நடக்கும். 4. Strange event or incident; கேலிக்கூத்து. 5. Droll or ludicrous action, as a pantomime; குழப்பம். 6. Confusion; நாடகம்பற்றியமைந்த ஒரு கடைச்சங்க நூல். (இறை. 1, பக். 5.) 7. A treatise of the last sangam, on the art of dancing;

Tamil Lexicon


s. dance, dancing, ball, நடனம்; 2. stage-play, dramatic performance, நாடகம்; 3. confusion, குழப்பம்; 4. a strange incident, அதிசயச்செயல்; 5. presumption, assumption, vanity, கோலாகலம். கூத்தன், a dancer, a dramatist. கூத்தாட, to dance. கூத்தாடி, (fem. கூத்தாடிச்சி), a player, a dancer, an actor. கூத்தாட்டு, கூத்தாட்டம், dancing, acting. கூத்தாண்டவர், a village diety. கூத்துக்களரி, a theatre, a play house. கூத்துக்காரன், (fem. கூத்துக்காரி, a dancer, a dancing-master, a buffoon. கூத்துப்பண்ண, to make fun, confound. கூத்துப்பயிலிடம், a dancing school. கூத்துப்பார்க்க, to attend a play or dance. கூத்துப்போட, to perform a drama. கூத்துவைக்க, to give a dance or ball, to perform a play. பேய்க்கூத்தாய் முடிய, to end in disorder.

J.P. Fabricius Dictionary


நடனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūttu] ''s.'' (''from Sans. Goorda,'' play, Wils. p. 239.) Dance, dancing; action, performance; ball, நடனம். 2. Dramatic play, comedy, நாடகம். 3. Dance or sport of the deity--as the creation, preserva tion, and destruction of the universe are considered by Hindu philosophers, திருக் கூத்து. 4. Expression or exhibition of the feelings of the soul in its conscious states, as manifested in the actions and organic functions of the body, according to Hindu psychologists, ஆத்துமசேட்டை. 5. Frolick ing, leaping and frisking about, like young boys and girls, விளையாட்டு. 6. Dis play, pomp, parade, &c.--as viewed by ascetics, பிரபஞ்சநடிப்பு. 7. A strange event or phenomenon, நூதனசெய்கை. 8. Presump tion, assumption, vanity--as of young persons--one new in office, &c., spoken in contempt, கோலாகலம். 9. A droll or ludi crous action or performance--as a panto mime, &c., பரிகாசக்கூத்து. 1. ''(fig. little used.)'' The instigating or moving cause of an action, தூண்டுகாரணம். கூத்துக்குமீசைசிரைக்கவா. Why shave off the mustaches for mere play; i. e. why do a thing without an object? ஏதேனுங்கூத்துநடக்கும். ''[prov.]'' Some dis astrous event will happen--said after a bad omen. நாலுநாட்கூத்து. A four day's dance- spoken of worldly prosperity, elevation to office, &c.

Miron Winslow


kūttu,
n. cf. kūrdda [ K. kūtu, M. kūttu.]
1. Dance, dancing;
நடனம். ஆடுதுங்கூத்தே (திவ். திருவாய்.10, 1, 5).

2. Divine dances, eleven in number, viz.,
அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை; பதினொருவகைக் கூத்து. கடையம் . . . கொட்டியிவை காண் பதினோர் கூத்து (சிலப். 3, 1 14, உரை.)

3. Dramatic performance, action;
நாடகம். பிறவி மாமாய்க் கூத்தினையே (திவ். திருவாய். 8, 4, 11).

4. Strange event or incident;
அதிசயச் செயல். அங்கே ஏதாவது கூத்து நடக்கும்.

5. Droll or ludicrous action, as a pantomime;
கேலிக்கூத்து.

6. Confusion;
குழப்பம்.

7. A treatise of the last sangam, on the art of dancing;
நாடகம்பற்றியமைந்த ஒரு கடைச்சங்க நூல். (இறை. 1, பக். 5.)

DSAL


கூத்து - ஒப்புமை - Similar