Tamil Dictionary 🔍

குறைதல்

kuraithal


சிறுகுதல் ; இடம் பொருள் ஏவல் முதலியவற்றால் தாழ்தல் ; பற்றாமற் போதல் ; அரைகுறையாதல் ; விலையேறும்படி பண்டம் அருகுதல் ; எழுத்துக்கெடுதல் ; வருந்தி உயிரொடுங்குதல் ; குறைவுற்று வருந்துதல் ; ஊக்கங்குன்றுதல் ; தோல்வியுறுதல் ; அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகுதல். மன்னுயிர்கண் முற்று நாடொறுங் குறைந்தவன்றே (கந்தபு. மேரு. 28). 1. To diminish, decrease, abate, wane, dwindle, decline; தைரியங்குன்று தல். அரிகுரலோசையஞ்சி . . . ஆனை குறையுமனமாகி (தேவா. 883, 9). 9. To lose courage; வெட்டப்படுதல். கையுறிற் கால்குறையும் (நாலடி, 84). 10. To be cut off; தோள்வியுறுதல். எத்தனைபோரிடைக் குறைதான் (கம்பரா. யுத். மந்திரப். 112). 11. To suffer defeat; வருந்தி உயிரொடுங்குதல். கணவன் குறையக்குறைவாள் (கம்பரா. நகர்நீங். 53). 7. To droop in affliction; அழிதல். அன்னார்குறைவது சரதம் (கம்பரா. நிந்தனை. 56). 12. To be ruined, destroyed; அரைகுறையாதல். இது குறை வேலை. 4. To be imperfect, unfinished, defective, deficient; பற்றாமற் போதல். சாமான்வாங்கக் கையிற் பணங் குறைவாயுள்ளது. 3. To be wanting; to prove insufficient; to be short, in weight, measure, or number; மதிப்பு இடம் பொருள் ஏவல்முதலியவற்றால் தாழ்தல், அவன் பெருமை குறைந்துவிட்டது. 2. To be reduced, in value, in estimation in circumstances, in rank; எழுத்துக்கெடுதல். ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே (நன். 156). 6. (Gram.) To be dropped, elided, as a letter; குறைவுற்று வருந்துதல். நாளுமிகும் பணிசெய்து குறிந்தடையு நன்னாளில் (பெரியபு. திருநாவு. 45). 8. To languish from worries; விலையேரும்படி பண்டம் அருகுதல். 5. To be dear, difficult of attainment, scarce;

Tamil Lexicon


சிறுகல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuṟai-,
4. v. intr. [K. koṟe, M. kuṟayu.]
1. To diminish, decrease, abate, wane, dwindle, decline;
சிறுகுதல். மன்னுயிர்கண் முற்று நாடொறுங் குறைந்தவன்றே (கந்தபு. மேரு. 28).

2. To be reduced, in value, in estimation in circumstances, in rank;
மதிப்பு இடம் பொருள் ஏவல்முதலியவற்றால் தாழ்தல், அவன் பெருமை குறைந்துவிட்டது.

3. To be wanting; to prove insufficient; to be short, in weight, measure, or number;
பற்றாமற் போதல். சாமான்வாங்கக் கையிற் பணங் குறைவாயுள்ளது.

4. To be imperfect, unfinished, defective, deficient;
அரைகுறையாதல். இது குறை வேலை.

5. To be dear, difficult of attainment, scarce;
விலையேரும்படி பண்டம் அருகுதல்.

6. (Gram.) To be dropped, elided, as a letter;
எழுத்துக்கெடுதல். ஒருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே (நன். 156).

7. To droop in affliction;
வருந்தி உயிரொடுங்குதல். கணவன் குறையக்குறைவாள் (கம்பரா. நகர்நீங். 53).

8. To languish from worries;
குறைவுற்று வருந்துதல். நாளுமிகும் பணிசெய்து குறிந்தடையு நன்னாளில் (பெரியபு. திருநாவு. 45).

9. To lose courage;
தைரியங்குன்று தல். அரிகுரலோசையஞ்சி . . . ஆனை குறையுமனமாகி (தேவா. 883, 9).

10. To be cut off;
வெட்டப்படுதல். கையுறிற் கால்குறையும் (நாலடி, 84).

11. To suffer defeat;
தோள்வியுறுதல். எத்தனைபோரிடைக் குறைதான் (கம்பரா. யுத். மந்திரப். 112).

12. To be ruined, destroyed;
அழிதல். அன்னார்குறைவது சரதம் (கம்பரா. நிந்தனை. 56).

DSAL


குறைதல் - ஒப்புமை - Similar