Tamil Dictionary 🔍

குத்து

kuthu


கைமுட்டியால் தாக்குவது ; ஈட்டி முதலியவற்றால் தாக்குகை ; உரலிற் குற்றுதல் ; புள்ளி ; செங்குத்து ; நோவு ; பிடி ; தெரு முதலியவற்றின் பாய்ச்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடி. ஒருகுத்துச்சோறு. 6. Handful; நோவு. தலைகுத்துத் தீர்வு சாத்தற்கு (வள்ளுவமா. 11). 5. Acute pain, twinge, ache; புள்ளி. 4. Dot, point, stop, punctuation mark; சணல். (W.) Sunnhemp; ஈட்டி முதலியவற்றால் தாக்குகை. 2. Thrust, stab, puncture, prick, incision, goading; கைமுட்டியால் தாக்கும் இடி. கைக்குத்தது படலும் (கம்பரா. முதற்போ. 176). 1. Blow with the fist, cuff, buffet, box; தெருமுதலியவற்றின் பாய்ச்சல். 8. Inauspicious position, as of ahouse opposite to a street, or a well opposite to a doorway; செங்குத்து. 7. Perpendicularity, steepness; உரலிற் குத்துகை. 3. Pounding, as in a mortar;

Tamil Lexicon


III. v. t. prick, puncture, pinch, தை; 2. thrust, stab, pierce, பாய்ச்சு; 3. beat or pound in a mortar; 4. smash, crush, நெரி; 5. ram into, load (as a gun) கெட்டி; 6. pick, strike (as a crow etc.); 7. buffet, cuff, strike with the fist; 8. put a dot, stamp, புள்ளி முத்திரை முதலிய குத்து; 9. drop, pour out by drops, சிறுக வார்; 1. use sarcastic allusions, சுடுவார்த் தைப்பேசு; 11. thwart, defeat, afflict, injure; v. i. throb, ache, pain, 2. puke, vomit, எதிர்க்கெடு. எனக்கு மண்டையைக் குத்துகிறது, my head aches. கண்ணிலே எண்ணெய்குத்த, to drop oil into the eye. குத்திக்கொல்பவன், --கொல்வோன், an assassin. குத்திப்பேச, to make a cutting remark. குத்திப்போட, to stab. குத்து, v. n. a thrust with a sword etc; a stab, a prick; a blow with the fist, the peck of a stork; 2. a dot over a consonant etc; 3. acute pain; 4. a handful; 5. perpendicularity, see செங்குத்து. குத்தாய் நிற்கிறமலை, a mountain standing perpendicularly. குத்துக்கட்டை யடைப்பு, stockade, inclosure. குத்துக்கரணம், a somerset. குத்துக்காயம், a wound by a stab or thrust. குத்துக்கால், a support, the upright of a Frame. குத்துக்காலிட, to sit or lie with bent legs. குத்துக்கால் நாட்ட, to prop or support with uprights. குத்துக்குடைச்சல், --வலி, throbbing pain. குத்துக்கூலி, wages for beating paddy. குத்துக்கொம்பு, perpendicular horn. குத்துக்கோல், a pickstaff, a goad. குத்துச்செடி, any low shrub. குத்துணி, குத்துண்டவன், one who is stabbed. குத்துண்ண, குத்துப்பட்டுவிழ, to be pierced, stabbed. குத்துமி, husk. குத்துமுள், a spur. குத்துவாள், a dagger; a poniard. குத்குவிளக்கு, a standing-lamp, a brass candle-stick. குத்துவெட்டு, wound made by a stab, erasures. குத்தூசி, a wooden needle for roofing. குத்தோக்காளம், vomiting attended with twisting pain in the stomach. அம்மைகுத்த, to vaccinate. பச்சைகுத்த, to tattoo. தலைக்குத்த, headache. நெல்லுக்குத்த, to pound paddy. பல்லுக்குத்த, to pick the teeth. பேன்குத்த, to crash lice. முலைக்குத்து, piercing pain in the breast. மூக்குக்குத்த, to perforate the nose. மூங்கிற்குத்து, a cluster of bamboos.

J.P. Fabricius Dictionary


, [kuttu] ''s.'' Hemp--as குத்திரம், சணல். ''(M. Dic.)'' See under the verb குத்து.

Miron Winslow


kuttu,
n. குத்து-. [T. guddu, K. M. Tu. kuttu.]
1. Blow with the fist, cuff, buffet, box;
கைமுட்டியால் தாக்கும் இடி. கைக்குத்தது படலும் (கம்பரா. முதற்போ. 176).

2. Thrust, stab, puncture, prick, incision, goading;
ஈட்டி முதலியவற்றால் தாக்குகை.

3. Pounding, as in a mortar;
உரலிற் குத்துகை.

4. Dot, point, stop, punctuation mark;
புள்ளி.

5. Acute pain, twinge, ache;
நோவு. தலைகுத்துத் தீர்வு சாத்தற்கு (வள்ளுவமா. 11).

6. Handful;
பிடி. ஒருகுத்துச்சோறு.

7. Perpendicularity, steepness;
செங்குத்து.

8. Inauspicious position, as of ahouse opposite to a street, or a well opposite to a doorway;
தெருமுதலியவற்றின் பாய்ச்சல்.

kuttu
n. cf. குத்திரம்.
Sunnhemp;
சணல். (W.)

DSAL


குத்து - ஒப்புமை - Similar