Tamil Dictionary 🔍

கண்

kan


விழி ; கண்ணோட்டம் ; பீலிக்கண் ; கணு ; மரக்கணு ; தொளை ; மூங்கில் முரசடிக்குமிடம் ; மூட்டுவாய் ; பெருமை ; இடம் ; ஏழனுருபு ; அறிவு ; பற்றுக்கோடு ; உடம்பு ; அசை ; உடலூக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபசர்க்கம். களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை (கலித். 101, 35). 3. Intensive Prepositional prefix; அருள். (அக.நி.) Grace; விழி. (தொல். எழுத். 7.) 1. Eye; கண்ணோட்டம். கண்ணின்று பெயர்ப்பினும் (தொல். பொ. 150). 2. Kindness, benignity, graciousness, as expressed by the eye; பீலிக்கண். ஆயிரங்கணுடையாய்க்கு (கம்பரா. பம்பை. 27). 3. Star of a peacock's tail; தேங்காய் பனங்காய்களின் கண். 4. Hollow marks on a coconut or palmyrashell; முலைக்கண். 5. Nipple, teat; துவாரம். கால்வாய்த் தலையின்கண்கள் (பாரத. முதற். 72). 6. Aperture, orifice; புண்ணின்கண். 7. Core of a boil; மரக்கணு. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண் (முத்தொள். பெருந்தொ. 634). 8. Joint in bamboo or sugar-cane; connection between a bough or flower and its stem; முரசு முதலியவற்றில் அடிக்குமிடம். கண்மகிழ்ந்து துடிவிம்ம (பு. வெ. 2, 8, கொளு). 9. Centre of a drum-head where it is rapped; மூங்கில். (திவா.) 10. Bamboo; பெருமை. (திவா.) 11. Greatness; ஞானம். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள், 927). 12. Knowledge, wisdom; உணர்த்துவது. சொன்னசிவன் கண்ணா (சி. போ. 5, 2, 1). 13. That which reveals; பீசம். நாதமாஞ் சத்தியதன் கண்ணாம் (சி. போ. 9, 3, 3). 14. Seed, as cause; பாயின் நெட்டிழையாகிய நூல். (G. Tn. D. i, 220.) 15. Longitudinal threads used for the warp of a mat; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058). 16. Place, site; முன்பு. கண்ணின்றிரப்பவர் (குறள், 1055). 17. Front; பற்றுக்கோடு. கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே (திவ். திருவாய். 2, 2, 7). 18. Protection, support; உடம்பு. பொன்கட்பச்சை (பரிபா. 3, 82). -part. 19. Body; ஏழுனுருபு. (நன். 302.) 1. (Gram.) Ending of the locative; ஓர் அசை. மீன்கணற்று (புறநா. 109, 10). 2. Expletive;

Tamil Lexicon


s. the eye, விழி; 2. aperture, as the mesh of a net, the nipple of breast, the spans of a bridge, the hole of a sieve, துவாரம்; 3. the star in a peacock's tail; 4. a knot in a tree, கணு; 5. place, spot, இடம்; 6. joint in a bamboo or sugar cane, கணு; 7. body, சரீரம்; 8. protection, support, பற்றுக் கோடு; 9. seed as cause, பீஜம்; 1. wisdom, ஞானம்; (gram.) a termination of the 7th case, எழனுறுபு; 2. an expletive, அசை; 3. an intensive prefix, உபசருக்கம். அவன் கண்ணவிந்து போயிற்று, he has lost his sight. அவன் கண்ணிலே விடிந்தேன், --பட் டேன், he envies me, I suffer from his eye. கண்ணுக்குள் நிற்கிறது, it ever stands in my eyes; it never goes out of my sight (as a departed friend, a thing lost etc.) என் கண்ணே, Oh, my darling. கண்கட்டி, a sty on the eye. கண்கட்டு, blindfolding, blindman's buff. கண்கட்டு வித்தை, art of legerdemain, magic art, tricks played by conjurers. கண்கலங்க, to weep as the eyes from dust; to get disheartened. கண்காட்சி, a show, exhibition, a pleasant or mournful sight. கண்காணம், inspection, superintendence. கண்காணக்காரன், a man supervising the harvest. கண்காணம் காக்க, --பண்ண, --பார்க்க, to watch. கண்காணம் வைக்க, --போட, to set a watch. கண்காணி, an overseer, inspector; a bishop. கண்காணிக்க, to oversee, superintend. கண்காணிப்பு, v. n. supervision. கண்காரர், experts in estimating precious stones etc. கண்குத்திப் பாம்பு, a whip-snake. கண்குவளை, --குழி, --கூடு, the socket of the eye. கண்குளிர்ச்சி, refreshing, pleasing to the sight. கண்கூச, to be weak sighted, to be dazzled. கண்கூச்சன், a short-sighted man. கண்கூடாய்ப்பார்க்க, to look with one's own eyes. கண்கூர்மை, sharpness of sight. கண்சாடை, winking at, signalling with the eye. கண்சாய்ப்பு, side look, partiality. கண்சிமிட்ட, to wink, to make a signal with the eye. கண்சொக்க, the eyes to be heavy from sleep. கண்ணடைய, to sleep. கண்ணயர்ந்துபோக (--அசந்துபோக) to be heavy and drowsy. கண்ணருள், favour. கண்ணாடி, see separately. கண்ணாம்பூச்சி (கண்பொத்தி) விளையாட, to play at hide-and-seek or at blind-man's-buff. கண்ணாரக்காண, to see clearly. கண்ணாளன், a husband, a companion; (fem. கண்ணாட்டி which see). கண்ணிமை (கண்+இமை or நிமை) eyelid, twinkling of the eye a moment. கண்ணிமைக்க, to wink. கண்ணிலி, a blind man; Yama, the god of death. கண்ணிலேதைக்க, to attract the eyes, to arrest the attention. கண்ணிலே பூப்பட, -விழ, to have specks in the eye. கண்ணீர், tears. கண்ணீர் உதிர, -ஓட, -வடிய, a run as tears. கண்ணீர் உதிர்க்க, -வடிக்க, -சொரிய, - விட, -உருக்க, -சிந்த, to shed tears. கண்ணீர் தளம்ப, -ததும்ப, to have the eyes suffused with tears. கண்ணுக்குக் கண்ணானவன், one as dear as the eye. கண்ணுதல், Siva who has an eye in the forehead (கண்+நுதல். கண்ணும் கருத்துமாயிருக்க, to be all eyes and ears, to be very attentive, to devote oneself whole-heartedly. கண்ணுராவி, கண்ணராவி, கண்டிராவி, commiseration, a pitiable sight. கண்ணுலை மூடி, a rice strainer. கண்ணுற, to see. கண்ணுறக்கம், sleep. கண்ணுறங்க, to sleep. கண்ணூறு, same as கண்திஷ்டி. கண்ணைக்காட்ட, to indicate the wishes by a glance, to wink. கண்ணைப் பிடுங்க, to pluck out one's eyes. கண்ணொளி, vision, lustre of the eye. கண்ணோக்க, to look on. கண்ணோட, to look at with desire or lust; 2. to watch, inspect; 3. to be kind, indulgent. கண்ணோட்டம் (கண்+ஓட்டம் or நோட் டம்), glance; 2. regard, kindness, favour; 3. guess by the eye. கண்ணோவு, கண்ணோக்காடு, sore eyes. கண்திஷ்டி, கண் திருஷ்டி, கண்தோஷம், கண்ணூறு, blight of eyes. கண் திருஷ்டி கழிக்க, to remove the fascination of the eyes. கண் திருஷ்டிப்பட, to be bewitched or fascinated with a look. கண் தெரியாதவன், a blind man. கண் பஞ்சடைய, the eyes to become dim as a symptom of exhaustion or death. கண்பட, to sleep. கண் பட்டை, -மடல், the eyelid. கண் பீளை, viscid discharge from the eye. கண் புருவம், eyebrow. கண் பூக்க, to fail as the eyes by earnest looking. கண் பொத்த, to blindfold. கண் பொத்தி விளையாட, to play at blind-man's buff. கண் போட, to look at with desire, fall in love. கண்மணி, -விழி, -முழி, the apple of the eye. என் கண்மணியானவன், my well-beloved, my darling. கண் மதிப்பு, guess by the eye, opinion from sight. கண் மயிர், the eyes lashes. கண் மாயம், delusion, ocular deception. கண் மூட, to shut the eyes, to sleep. கண் மூடிக்கொண்டிருக்க, to connive at, to be careless. கண் ரெப்பை, -மடல், the eye-lids. கண் வரி, the iris of the eye. கண் வலி, sore eyes, கண்ணோவு. கண் வளர, to sleep. கண்விழிப்பு, watchfulness, caution, keeping awake. கண் விழிக்க, to open the eyes, to awake. கண்வைக்க, to be benignant; 2. to glance, look at; 3. to desire. ஊற்றுக் கண், orifice of the spring. ஓரக்கண்ணன், one that is squinteyed, a one-eyed man. கலங்கின கண், a disordered eye, lita troubled eye. சல்லடைக் கண், the holes of a sieve. மாறுகண், a squint-eye. வன்கண், கொடுங்கண், envy jealousy, evil eye.

J.P. Fabricius Dictionary


அகக்கண், புணக்கண்.

Na Kadirvelu Pillai Dictionary


kaNNu கண்ணு eye; any small aperture (as of a net or mesh)

David W. McAlpin


, [kṇ] ''s.'' The eye, விழி. 2. A hollow mark or spot, குழி. 3. A roundish hole, orifice, crevice, cavity, aperture, துவாரம். 4. A knot or point in a tree, கணு. 5. ''(p.)'' A bamboo, மூங்கில். 6. Place, location, sit uation, இடம். 7. A form of the locative case--that employed in grammatical ex amples, &c., ஏழனுருபு. 8. Kindness, benig nity, graciousness, protection, கண்ணோட் டம். 9. Greatness, பெருமை. கண்கண்டதுகைசெய்யும். What the eye has seen the hand may do; ''i. e.'' we learn by ob servation. கண்காணநடந்தசெய்தி. Any event that happened before one's eyes. கண்ணிலேகாணப்படாது. I hate the very sight of him. 2. Even the sight of it is in jurious; ''i. e.'' prejudicial--spoken where mutual animosity exists--as in the kite and snake, &c. 3. ''(p.)'' It will not appear to the eye. கண்ணிலேகுத்துகிறதோ. Does it hurt your eyes? why do you envy me, &c. கண்ணுக்கின்பமானபொருள். That which is delectable to the eye. கண்ணுக்குக்கண்ணானவன். One as precious or dear as the eye. கண்ணுக்குப்புண்ணுமல்லக்காண்பார்க்குநோயுமல் ல. There is no wound to be seen, nor any visible symptoms of disease; the sick ness, if real, is internal. கண்ணுக்குள்ளேநிற்கின்றது. It is fixed in my eyes, imagination, &c.-as a departed friend, a thing lost, &c. இராசாவுக்குக்கண்மந்திரி. A counsellor is the eye of the king. அண்டைவீட்டுச்சண்டைகண்ணுக்குக்குளிர்ச்சி.... The quarrels of neighbors are gratifying to the eyes of the instigator. என்கண்ணே. ''[An expression of endear ment.]'' Oh, thou, my eyes; ''i. e.'' my darling. இறந்தனையோஎன்கண்ணேஎன்னுயிரேஅபிமாவின் றென்செய்தாயே. Ah! Abima, my eyes, my life, art thou dead! whence this cruel deed? (பார.) அவன்கண்ணவிந்துபோயிற்று. He has lost his sight. அவன்கண்ணிலேபட்டேன். I suffer from his eye, his evil eye is upon me, he envies me.

Miron Winslow


kaṇ
காண்-. [T. kannu, K . M. Tu.kaṇ.]
1. Eye;
விழி. (தொல். எழுத். 7.)

2. Kindness, benignity, graciousness, as expressed by the eye;
கண்ணோட்டம். கண்ணின்று பெயர்ப்பினும் (தொல். பொ. 150).

3. Star of a peacock's tail;
பீலிக்கண். ஆயிரங்கணுடையாய்க்கு (கம்பரா. பம்பை. 27).

4. Hollow marks on a coconut or palmyrashell;
தேங்காய் பனங்காய்களின் கண்.

5. Nipple, teat;
முலைக்கண்.

6. Aperture, orifice;
துவாரம். கால்வாய்த் தலையின்கண்கள் (பாரத. முதற். 72).

7. Core of a boil;
புண்ணின்கண்.

8. Joint in bamboo or sugar-cane; connection between a bough or flower and its stem;
மரக்கணு. மரக்கண்ணோ மண்ணாள்வார் கண் (முத்தொள். பெருந்தொ. 634).

9. Centre of a drum-head where it is rapped;
முரசு முதலியவற்றில் அடிக்குமிடம். கண்மகிழ்ந்து துடிவிம்ம (பு. வெ. 2, 8, கொளு).

10. Bamboo;
மூங்கில். (திவா.)

11. Greatness;
பெருமை. (திவா.)

12. Knowledge, wisdom;
ஞானம். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள், 927).

13. That which reveals;
உணர்த்துவது. சொன்னசிவன் கண்ணா (சி. போ. 5, 2, 1).

14. Seed, as cause;
பீசம். நாதமாஞ் சத்தியதன் கண்ணாம் (சி. போ. 9, 3, 3).

15. Longitudinal threads used for the warp of a mat;
பாயின் நெட்டிழையாகிய நூல். (G. Tn. D. i, 220.)

16. Place, site;
இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058).

17. Front;
முன்பு. கண்ணின்றிரப்பவர் (குறள், 1055).

18. Protection, support;
பற்றுக்கோடு. கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே (திவ். திருவாய். 2, 2, 7).

19. Body;
உடம்பு. பொன்கட்பச்சை (பரிபா. 3, 82). -part.

1. (Gram.) Ending of the locative;
ஏழுனுருபு. (நன். 302.)

2. Expletive;
ஓர் அசை. மீன்கணற்று (புறநா. 109, 10).

3. Intensive Prepositional prefix;
உபசர்க்கம். களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை (கலித். 101, 35).

kaṇ
n.
Grace;
அருள். (அக.நி.)

DSAL


கண் - ஒப்புமை - Similar