கணக்கு
kanakku
எண் ; கணக்கு ; கணக்குக் குறிப்பு ; அளவு ; முறைமை ; எழுத்து ; தொகை , முடிவு ; செயல் ; சூழ்ச்சி ; கணிதநூல் ; நூல் ; ஒழுங்கான தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறைமை. அசித்தையும் இவனையுங் காட்டுகிறகணக்கிலே (ஈடு,3,4, ப்ர.) 5. Order; sequence; கணிதசாஸ்திரம். 4. Science of arithmetic; முடிவு. (W.) 7. Result, consequence; Event; தொகை. மொத்தக்கணக்கென்ன? 8. Sum; காரியம். என்ன கணக்காக நானலைந் தெய்த்தேன் (சிவப்பிரபந். திருச்செந். நிரோட். 28). 9. Thing, affair, circumstance; அளவு. கணக்கிலாத் திருகோலம் (திருவாச. 30, 4). 10. Limit; count; எழுத்து. (திவா.) 11. Letter, writing; நூல். மேற்கணக்கு, கீழ்க்கணக்கு. 12. Literature; science; வழக்கு. இக்கணக்கிப்படிக்கார் வெல்லுவார் (திருவாலவா. 41, 28). 13. Litigation; விதம். புகுவதெக்கணக்கம்மா (இரகு. திக்கு. 163). 14. Way, manner; ஒழுங்கான ஏற்பாடு. அவனது செயல்யாவும் கணக்காக இருக்கும். 15. Orderly arrangement, system; சூழ்ச்சி. கதுமென வேக விடுத்தது நல்ல கணக்கன்றோ (பிரபோத. 24, 25). 6. Stratagem, artifice, expedient; எண். (திவா.) 1. Number, account, reckoning, calculation, computation; கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல். 2. The four simple rules of arithmetic, viz,. வரவுசெலவுக்கணக்குக் குறிப்பு. காவலர்கணக்காய் வகையின் வருத்தி (குறுந். 261). 3. Account book, ledger;
Tamil Lexicon
s. number calculation, account, computation, எண்; 2. written accounts, writing எழுத்து; 3. result, consequence, முடிவு; 4. litigation, வழக்கு; 5. way or manner, விதம். கணக்கதிகாரம், the science of Arithmetic, Mathematics. கணக்கறுதி பண்ண, to finish or settle an account. கணக்கன், கணக்கப் பிள்ளை, an accountant, a writer. கணக்காசாரம், methods of calculation, of keeping accounts. கணக்காயன், a wise man; a teacher of the Vedas and Sastras. கணக்காய், like, as. மாப்பிள்ளை கணக்காய் நடக்க, to walk like a bridegroom. கணக்காளி, a mathematician; 2. an economical person. கணக்கிட, to reckon, calculate. கணக்குக் கூட்ட, --ஏற்ற, --தொகை பார்க்க, to add, sum up. கணக்குக் கேட்க, to call to account. கணக்குச் சுமத்த, --ஏற்ற, to charge to one's account. கணக்குச் சொல்ல, to give the items of disbursement in detail. கணக்குத் தீர்க்க, --அறுக்க, to settle account. கணக்குப் பார்க்க, to reckon, to take account, to examine accounts. கணக்கு எழுத, to write accounts. கணக்கொப்புவிக்க, to deliver an account. கழிப்புக் (கழித்தற்) கணக்கு, subtraction. கூட்டுக் (கூட்டற்) கணக்கு, addition. பெருக்குக் (பெருக்கற்) கணக்கு, multiplication. பேர்க் கணக்கு, division.
J.P. Fabricius Dictionary
எண், எழுத்து.
Na Kadirvelu Pillai Dictionary
kaNakku கணக்கு (numerical) computation; (financial) accounts
David W. McAlpin
, [kṇkku] ''s.'' Number, account, reck oning, calculation, computation, எண். 2. Letters, writing, written accounts, எழுத்து. 3. ''(fig.)'' Result, consequence, sum, event, முடிவு. 4. Thing, affair, circumstance, காரியம். கணக்குவருமளவுங்கிடக்கிறான். The dying man lingers until the destined hour arrives. இனியிங்கேயிருக்கக்கணக்கில்லை. There is no reason for our remaining here any longer. அவருக்குமெனக்குங்கணக்குவழக்குத்தீர்ந்தது. All accounts and disputes between him and me are settled. கொடுக்கல்வாங்கல்கணக்காய். Concerning giv ing and receiving. உன்கணக்கைநீபார். Mind your own busi ness.
Miron Winslow
kaṇakku
n. cf. gaṇaka. [M. kaṇakku.]
1. Number, account, reckoning, calculation, computation;
எண். (திவா.)
2. The four simple rules of arithmetic, viz,.
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்.
3. Account book, ledger;
வரவுசெலவுக்கணக்குக் குறிப்பு. காவலர்கணக்காய் வகையின் வருத்தி (குறுந். 261).
4. Science of arithmetic;
கணிதசாஸ்திரம்.
5. Order; sequence;
முறைமை. அசித்தையும் இவனையுங் காட்டுகிறகணக்கிலே (ஈடு,3,4, ப்ர.)
6. Stratagem, artifice, expedient;
சூழ்ச்சி. கதுமென வேக விடுத்தது நல்ல கணக்கன்றோ (பிரபோத. 24, 25).
7. Result, consequence; Event;
முடிவு. (W.)
8. Sum;
தொகை. மொத்தக்கணக்கென்ன?
9. Thing, affair, circumstance;
காரியம். என்ன கணக்காக நானலைந் தெய்த்தேன் (சிவப்பிரபந். திருச்செந். நிரோட். 28).
10. Limit; count;
அளவு. கணக்கிலாத் திருகோலம் (திருவாச. 30, 4).
11. Letter, writing;
எழுத்து. (திவா.)
12. Literature; science;
நூல். மேற்கணக்கு, கீழ்க்கணக்கு.
13. Litigation;
வழக்கு. இக்கணக்கிப்படிக்கார் வெல்லுவார் (திருவாலவா. 41, 28).
14. Way, manner;
விதம். புகுவதெக்கணக்கம்மா (இரகு. திக்கு. 163).
15. Orderly arrangement, system;
ஒழுங்கான ஏற்பாடு. அவனது செயல்யாவும் கணக்காக இருக்கும்.
DSAL