Tamil Dictionary 🔍

ஆள்

aal


ஆண்மகன் ; திறமையுடையோன் ; வீரன் ; காலாள் ; கணவன் ; தொண்டன் ; ஆட்செய்கை ; வளர்ந்த ஆள் ; ஆள்மட்டம் ; அரசு ; தொட்டால் வாடி ; பெண்பாற் பெயர் விகுதி ; பெண்பால் வினைமுற்று விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசு. 1. cf. ஆல். Pipal; தொட்டால்வாடி. 2. Touch-me-not; ஆண்மகன். நல்லா ளிலாத குடி (குறள்.1030). 1. Man; சமர்த்தன். ஆளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும் (திரிக.7). 2. Man of capacity, capable man,manly person; வீரன். பிள்ளை கடுப்பப்பிணம் பிறங்க வாளெறிந்து (பு.வெ.2, 7). 3. Warrior; காலாள். (பு.வெ.7. 13.) 4. Foot soldier; கணவன். ஆளில்லா மங்கைக் கழகு (வாக்குண்.3). 5. Husband; ஊழியன். ஏதிலார்க்காளாய் (நாலதி.122). 6. Servant, slave, labourer; தொண்டன். நின்னாளானார்க் குண்ணார்ந்த வாரமுதே (திருவாச.38, 2). 7. Devotee; ஆட்செய்கை. ஆளரிக்கும் மரிதாய் (திருக்கோ.225). 8. Serving as a slave; வளர்ந்த ஆள். அந்தப் பையனும் பெண்ணும் இப்போது ஆளாய்விட்டார்கள். Colloq. 9. Person, adult, sturdy fellow; ஆள்மட்டம். அந்தக் கேணி எத்தனை ஆளாழம்.? 10. Man's height, as a standard measure; பெண்பாற் பெயர்விகுதி. 1. Noun ending of the 3rd pers. fem. sing. as in இல்லாள்; பெண்பால் வினைமுற்றுவிகுதி. 2. Verb ending of the 3rd pers. fem. sing. as in வந்தாள்;

Tamil Lexicon


s. a person, a grown man, ஆண் மகன்; 2. one that is able at act for oneself, a man of power, consequence, சுயாதீனன்; 3. a messenger, a labourer, servant, slave, அடிமை; 4. warrior, வீரன்; 5. husband, கணவன். ஆள்வினை, alacrity, bravery, முயற்சி, தைரியம். அவன் அதுக்கு ஆளல்ல, he is not capable of doing it. ஆட்காட்டி, a bird that screeches on seeing anybody at night, a lapwing; 2. the forefinger, ஆட்காட்டி விரல். ஆட்கூலி, the wages of a workman. ஆட்கொல்லி, murderer: 2. gold, money (fig.) ஆட்கொள்ள, to employ as a servant, to admit as a devotee. ஆட்டிட்டம் (ஆள்+திட்டம்) quantity fixed for an adult; marks for recognising a person. ஆட்பிடியன், an alligator. ஆளாக, to arrive at manhood; to be liable to. ஆளாக்க, to bring one up, to teach one to act for oneself (caus. of ஆளாக, to involve one into). ஆளோட்டி, slave-driver, overseer of workmen. ஆள்மாறாட்டம், false personation. ஆள்மாறாட்டம் செய்ய, to personate, to assume a disguise. ஆள்வள்ளி, the tapioca plant. ஆள்வீதம், the portion belonging to each person. கூலியாள், சிற்றாள், வீட்டாள், வேலை யாள், see under கூலி etc. தெய்வீக ஆள்தத்துவம், (christ.) God a Personal Being.

J.P. Fabricius Dictionary


aaLu ஆளு person

David W. McAlpin


, [āḷ] ''s.'' A person, grown man, ஆண் மகன். 2. A man of property, power, in fluence, consequence, &c., ஆடவன். 3. A servant, slave, அடிமை. 4. A laborer, mes senger, கூலியாள். 5. A devotee, தொண்டன். 6. The common termination of the third person singular feminine, பெண்பாற்படர்க்கை யொருமைவிகுதி. ஆளானான். He has attained to manhood, has become a person of consequence. அவனதற்காளோ? Is he competent for that? மரங்களாளாய்ப்போயின. The trees have ar rived at maturity.

Miron Winslow


āḷ
n. ஆள்-. [K.M.Tu. āl.]
1. Man;
ஆண்மகன். நல்லா ளிலாத குடி (குறள்.1030).

2. Man of capacity, capable man,manly person;
சமர்த்தன். ஆளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும் (திரிக.7).

3. Warrior;
வீரன். பிள்ளை கடுப்பப்பிணம் பிறங்க வாளெறிந்து (பு.வெ.2, 7).

4. Foot soldier;
காலாள். (பு.வெ.7. 13.)

5. Husband;
கணவன். ஆளில்லா மங்கைக் கழகு (வாக்குண்.3).

6. Servant, slave, labourer;
ஊழியன். ஏதிலார்க்காளாய் (நாலதி.122).

7. Devotee;
தொண்டன். நின்னாளானார்க் குண்ணார்ந்த வாரமுதே (திருவாச.38, 2).

8. Serving as a slave;
ஆட்செய்கை. ஆளரிக்கும் மரிதாய் (திருக்கோ.225).

9. Person, adult, sturdy fellow;
வளர்ந்த ஆள். அந்தப் பையனும் பெண்ணும் இப்போது ஆளாய்விட்டார்கள். Colloq.

10. Man's height, as a standard measure;
ஆள்மட்டம். அந்தக் கேணி எத்தனை ஆளாழம்.?

āḷ
part.
1. Noun ending of the 3rd pers. fem. sing. as in இல்லாள்;
பெண்பாற் பெயர்விகுதி.

2. Verb ending of the 3rd pers. fem. sing. as in வந்தாள்;
பெண்பால் வினைமுற்றுவிகுதி.

āḷ
n. cf. ஆல். (சங். அக.)
1. cf. ஆல். Pipal;
அரசு.

2. Touch-me-not;
தொட்டால்வாடி.

DSAL


ஆள் - ஒப்புமை - Similar