Tamil Dictionary 🔍

வெளிறு

veliru


வெண்மை ; நிறக்கேடு ; வெளிச்சம் ; வெளிப்படுகை ; பயனின்மை ; அறியாமை ; இளமை ; திண்மையற்றது ; குற்றம் ; வயிரமின்மை ; மரவகை ; காண்க : அலிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிச்சம். கதிர்வே றுணையா வெளிறுவிரவ வருதிகண்டாய் (பதினொ. திருவாரூர்மும். 9). 3. Light; . 11. See வெளிற்றுமரம், 1. வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ (சீவக. 2613). (திவா. MSS.) வயிரமின்மை. வெளிறி னோன்காழ் (புறநா. 23). 10. Having no hard core; குற்றம். வெளிறில் வாள் (சீவக. 3074). 9. Fault, defect; திண்மையற்றது. வெளிறான இருளன்றிக்கே (ஈடு, 2, 1,8). 8. That which is not dense; இளமை. வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35). 7. Tenderness, youth; நிறக்கேடு. 2. Paleness; pallor; See நறுவல்லி, 1. (மலை.) 12. Common sebesten. வெளிப்படுகை. வெளிறுற்ற வான்பழியாம் (திருக்கோ. 254). 4. Becoming clear or manifest; பயனின்மை. வெளிற்றுரை (சீவக. 1431). 5. Uselessness; அறியாமை. ஆசற்றார் கண்ணும் . . . இன்மை யரிதே வெளிறு (குறள், 503). 6. Stupidity, ignorance; வெண்மை. வெளிறு சேர்நிணம் (கம்பரா. கரன். 155). 1. Whiteness;

Tamil Lexicon


s. ignorance, அறிவின்மை; 2. a tree, cordia, நறுவிலிமரம்; 3. a tree having no core, வயிரமற்ற மரம்; 4. whiteness, வெண்மை. வெளிறர், ignorant persons, அறிவி லார். வெளிற்றுக் குணம், character devoid of humility வெளிற்று மரம், a tree without a core. வெளிற்றுரை, an unmeaning word, ignorant notions, வெற்றுரை.

J.P. Fabricius Dictionary


veḷiṟu
n. வெளிறு-.
1. Whiteness;
வெண்மை. வெளிறு சேர்நிணம் (கம்பரா. கரன். 155).

2. Paleness; pallor;
நிறக்கேடு.

3. Light;
வெளிச்சம். கதிர்வே றுணையா வெளிறுவிரவ வருதிகண்டாய் (பதினொ. திருவாரூர்மும். 9).

4. Becoming clear or manifest;
வெளிப்படுகை. வெளிறுற்ற வான்பழியாம் (திருக்கோ. 254).

5. Uselessness;
பயனின்மை. வெளிற்றுரை (சீவக. 1431).

6. Stupidity, ignorance;
அறியாமை. ஆசற்றார் கண்ணும் . . . இன்மை யரிதே வெளிறு (குறள், 503).

7. Tenderness, youth;
இளமை. வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35).

8. That which is not dense;
திண்மையற்றது. வெளிறான இருளன்றிக்கே (ஈடு, 2, 1,8).

9. Fault, defect;
குற்றம். வெளிறில் வாள் (சீவக. 3074).

10. Having no hard core;
வயிரமின்மை. வெளிறி னோன்காழ் (புறநா. 23).

11. See வெளிற்றுமரம், 1. வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ (சீவக. 2613). (திவா. MSS.)
.

12. Common sebesten.
See நறுவல்லி, 1. (மலை.)

DSAL


வெளிறு - ஒப்புமை - Similar