Tamil Dictionary 🔍

விரித்தல்

virithal


விரியச்செய்தல் ; விளக்கியுரைத்தல் ; பரப்புதல் ; கூந்தல் முதலியவற்றை அவிழ்த்து நெகிழவிடுதல் ; செய்யுள்விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது ; நூல் யாப்பு நான்கனுள் முன்னூலில் தொகுத்துக் கூறப்பட்டதனை விளங்குமாறு விரித்துக் கூறுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரியச்செய்தல். 1. To cause to expand; to open, unfold; கூந்தல் முதலியவற்றை அவிழ்த்து நெகிழ விடுதல். விரித்த கருங்குழலும் (சிலப். 20, வெண்பா, 3). 4. To untie, loosen, as the tressess of a woman; விளக்கி யுரைத்தல். நூல் விரித்துக் காட்டினும் (நாலடி, 341). 2. To expound; to elaborate, as in writing or in speaking; பரப்புதல். பல்கதிர் விரித்தே (புறநா. 8). விரித்த நாணல் (கம்பரா. கங்கை. 50). 3. To extend; to spread; நூல்யாப்பு நான்கனுள் முன்னூலிற் றொகுத்துக் கூறப்பட்டதனை விளங்குமாறு விரித்துக் கூறுவது. (தொல். பொ. 652.) 2. Elaborate treatment of topics briefly dealt with in a former treatise, one of four nūl-yāppu, q.v.; செய்யுள்விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது. (நன். 155.) 1. (Gram.) A poetic licence which consists in the augmentation of a letter in the middle of a word, one of nine ceyyuḷ-vikāram, q.v.;

Tamil Lexicon


viri-
11 v. tr. Caus. of விரி1-.
1. To cause to expand; to open, unfold;
விரியச்செய்தல்.

2. To expound; to elaborate, as in writing or in speaking;
விளக்கி யுரைத்தல். நூல் விரித்துக் காட்டினும் (நாலடி, 341).

3. To extend; to spread;
பரப்புதல். பல்கதிர் விரித்தே (புறநா. 8). விரித்த நாணல் (கம்பரா. கங்கை. 50).

4. To untie, loosen, as the tressess of a woman;
கூந்தல் முதலியவற்றை அவிழ்த்து நெகிழ விடுதல். விரித்த கருங்குழலும் (சிலப். 20, வெண்பா, 3).

virittal
n. விரி2-.
1. (Gram.) A poetic licence which consists in the augmentation of a letter in the middle of a word, one of nine ceyyuḷ-vikāram, q.v.;
செய்யுள்விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது. (நன். 155.)

2. Elaborate treatment of topics briefly dealt with in a former treatise, one of four nūl-yāppu, q.v.;
நூல்யாப்பு நான்கனுள் முன்னூலிற் றொகுத்துக் கூறப்பட்டதனை விளங்குமாறு விரித்துக் கூறுவது. (தொல். பொ. 652.)

DSAL


விரித்தல் - ஒப்புமை - Similar