வாசி
vaasi
வேறுபாடு ; இயல்பு ; குணம் , தன்மை ; தகுதி ; நல்ல நிலைமை ; நிமித்தம் ; வீதம் ; நாணயவட்டம் ; இசைக்குழல் ; இசைப்பாட்டு ; குதிரை ; அசுவினி ; பறவை ; அம்பு ; மூச்சு ; நியாயம் ; வசிப்பவன் ; குறியீட்டுச்சொல் ; வாகனப்பிரபை ; இருப்பிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயம். (யாழ். அக.) 6. Justice; வசிப்பவன். காசிவாசி. Dweller, inhabitant; குறியீட்டுச்சொல். சதம் என்பது அநந்தவாசி (தக்கயாகப். 73, உரை). Expression; See திருவாசி, 1. மாணிக்கவாசிமுந்து சிங்காதனம் (திருவாலவா. 37, 75). Ornamental arch over an idol. இருப்பிடம். (யாழ். அக.) Dwelling place; வேறுபாடு. ஈசனிலைமைக்கு மேனையிமையோர் நிலைக்கும் வாசியுரை (ஏகாம். உலா, 483). 1. Difference; சுவாசம். (யாழ். அக.) 5. Breath; அம்பு. (யாழ். அக.) 4. Arrow; பறவை. (யாழ். அக.) 3. Bird; அசுவதி. (சூடா.) 2. The first nakṣatra; குதிரை. (பிங்.) ஏறினானவ் வாசியை (திருவாலவா. 28, 45). 1. Horse; இசைப்பாட்டு. (யாழ். அக.) 2. Tune, musical song; இசைக்குழல். (பிங்.) 1. Musical pipe; இயல்பு. அரக்கனவன் குலத்துவாசி (இராமநா. ஆரணி. 25). 2. Quality, nature; characteristic; தகுதி. ஏறினா னவ்வாசியை வாசியாக (திருவாலவா. 28, 45). 3. Fitness, propriety; நல்ல நிலைமை. அவனுக்குடம்பு வாசிதான். 4. Good, improved condition; நிமித்தம். நீ வாராதவாசி காரியங்கெட்டது. (W.) 5. Ground, cause; வீதம். செலவளவு மாகாணிவாசியும் நாலுமா வாசியும் கழித்து (S. I. I. iii, 123). 6. Rate, as of interest; portion; நாணயவட்டம். வாசி தீரவே காசு நல்குவீர் (தேவா. 572, 1). 7. Discount, in changing money;
Tamil Lexicon
s. quality, nature, தன்மை; 2. what is preferable or excellent, உத்தமம்; 3. health, convalescence, சுகம்; 4. quantity, portion, வீதம்; 5. discount; 6. reason, cause, நிமித்தம்; 7. abundance, மிகுதி. வியாதிக்காரன் வாசியாயிருக்கிறான், the patient is better. வியாதி வாசியாய்ப் போயிற்று, the disease is cured. இதிலும் அது வாசி, that is better than this. நீ வாராதவாசி காரியம் கெட்டது, the business failed because you did not come. அளவு வாசிகண்டது, by measure there has been an excess. வாசியாக்க, to cure. அரைவாசி, half part. ஆனவாசி, for that reason. கால்வாசி, a fourth part. நடைவாசி, additional wages for carrying earth beyond a certain distance. நிலவாசி, nature of the soil. முழுவாசி, the whole.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A dweller--as வனவாசி, a hermit.
Miron Winslow
vāci
n. perh. bhāj. [T. K. vāsi.]
1. Difference;
வேறுபாடு. ஈசனிலைமைக்கு மேனையிமையோர் நிலைக்கும் வாசியுரை (ஏகாம். உலா, 483).
2. Quality, nature; characteristic;
இயல்பு. அரக்கனவன் குலத்துவாசி (இராமநா. ஆரணி. 25).
3. Fitness, propriety;
தகுதி. ஏறினா னவ்வாசியை வாசியாக (திருவாலவா. 28, 45).
4. Good, improved condition;
நல்ல நிலைமை. அவனுக்குடம்பு வாசிதான்.
5. Ground, cause;
நிமித்தம். நீ வாராதவாசி காரியங்கெட்டது. (W.)
6. Rate, as of interest; portion;
வீதம். செலவளவு மாகாணிவாசியும் நாலுமா வாசியும் கழித்து (S. I. I. iii, 123).
7. Discount, in changing money;
நாணயவட்டம். வாசி தீரவே காசு நல்குவீர் (தேவா. 572, 1).
vāci
n.வாசி2-.
1. Musical pipe;
இசைக்குழல். (பிங்.)
2. Tune, musical song;
இசைப்பாட்டு. (யாழ். அக.)
vāci
n. vājin.
1. Horse;
குதிரை. (பிங்.) ஏறினானவ் வாசியை (திருவாலவா. 28, 45).
2. The first nakṣatra;
அசுவதி. (சூடா.)
3. Bird;
பறவை. (யாழ். அக.)
4. Arrow;
அம்பு. (யாழ். அக.)
5. Breath;
சுவாசம். (யாழ். அக.)
6. Justice;
நியாயம். (யாழ். அக.)
vāci
n. vāsin.
Dweller, inhabitant;
வசிப்பவன். காசிவாசி.
vāci
n. vācin.
Expression;
குறியீட்டுச்சொல். சதம் என்பது அநந்தவாசி (தக்கயாகப். 73, உரை).
vāci
n. perh. bhāsin.
Ornamental arch over an idol.
See திருவாசி, 1. மாணிக்கவாசிமுந்து சிங்காதனம் (திருவாலவா. 37, 75).
vāci
n. vāsi.
Dwelling place;
இருப்பிடம். (யாழ். அக.)
DSAL