Tamil Dictionary 🔍

போதல்

poathal


செல்லுதல் ; அடைதல் ; உரியதாதல் ; பிறத்தல் ; நீண்டுசெல்லுதல் ; தகுதியாதல் ; நெடுமையாதல் ; நேர்மையாதல் ; பரத்தல் ; நிரம்புதல் ; மேற்படுதல் ; ஓங்குதல் ; நன்கு பயிலுதல் ; கூடியதாதல் ; பிரிதல் ; ஒழிதல் ; நீங்குதல் ; கழிதல் ; மறைதல் : காணாமற்போதல் ; மாறுதல் ; கழிக்கப்படுதல் ; வகுக்கப் படுதல் ; சாதல் ; முடிவாதல் ; ஒலியடங்குதல் ; தொடங்குவதைக் குறிக்கும் துணைவினை ; பகுதிப்பொருளையே வற்புறுத்தும் துணைவினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லுதல். மாமலர் கொய்ய . . . யானும் போவல் (மணி. 3, 83). 1. To go, proceed; to go away, depart; பகுதிப்பொருளையே வற்புறுத்தும் துணைவினை. தூங்கிப் போனான். (b) emphasising the meaning of the main verb; உரியதாதல். (W.) 3. To belong; பிறத்தல். வணிகர் மரபிற் போந்தோன் (உபதேசகா. சிவபுண். 153). 4. To be born; நீண்டு செல்லுதல். தென் கரைக்கு நடுவாகப்போயின இடைகழி (T. A. S. i, 189). 5. To lie, pass through, as a path; தகுதியாதல். அப்படிச் செய்யப்போகாது. (W.) 6. To be proper, admissible, passable; நெடுமையாதல். (தொல். சொல். 317.) போகித ழுண்கண். (பு. வெ. 11, ஆண்பாற். 3). 7. To become long; to be stretched out; நேர்மையாதல். வார்தல் போகல் . . . நேர்பு நெடுமையும் செய்யும்பொருள் (தொல். சொல். 317). 8. To become straight; பரத்தல். விசும்பினு ஞாலத் தகத்தும் வளியே யெதிர்போம் பல்கதிர் ஞாயிற்றொளி (கலித். 144, 40). 9. To extend, spread; நிரம்புதல். நலந் துறை போய நங்கை (சீவக. 2132). 10. To be full; மேற்படுதல். ஆயிரமல்ல போன (கம்பரா. மாயாசனக. 14). 11. To exceed transcend; ஓங்குதல். கள்ளிபோகிய களரியம் பறந்தலை (புறநா. 237). 12. To shoot up; to be tall; நன்கு பயிலுதல். முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வுத்தமக்கவி (கம்பரா. சிறப்புப். 9). 13. To become expert in; கூடியதாதல். மூச்சு விடப் போகவில்லை. 14. To undergo, experience; to go through the process of; பிரிதல். புலம்பப் போகாது (பரிபா. 11, 118). 15. To separate; ஒழிதல். மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10). 16. To cease; நீங்குதல். நூல் போன சங்கிலி (பதினொ. திருத். திருவந். 69). 17. To leave, abandon; கழிதல். போய காலங்கள் (திவ். திருவாய். 2, 6, 10). 18. To go by, pass over; to lapse; மறைதல். ஒளியவன் . . . தேரும் போயிற்று (திவ். பெரியதி. 8, 6, 6). 19. To vanish, disappear; காணாமற் போதல். போன பொருள் திரும்பாது. 20. To be missing, to be lost; மாறுதல். (W.) 21. To change, as from one state to another; கழிக்கப்படுதல். ஆறிலே இரண்டு போக. 22. To be subtracted; வகுக்கப்படுதல். நூறில் பன்னிரண்டு எட்டுத்தரம் போகும். 23. To be divided; சாதல். தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் (தேவா. 692, 2). 24. To perish, die; முடிவாதல். இன்பமாவதே போந்த நெறி என்றிருந்தேன் (தாயு. சின்மயானந்த. 5). 25. To be conclusive; ஒலியடங்குதல். முரசெலாம் போன (கம்பரா. முதற்போ. 237). 26. To be hushed; புணர்தல். அவளோடு போனான்.---aux. 27. To cohabit; தொடங்குவதைக் குறிக்கும் துணைவினை. அதைச் செய்யப்போகிறான்: An aux. (a) expressing what is about to happen; அடைதல். (W.) 2. To reach a destination;

Tamil Lexicon


--போதுதல், ''v. noun.'' Going, போதரல். 2. Coming, வரல். (சது.) 3. ''(p.)'' Widening, அகலல். 4. ''(p.)'' Lengthening, நீளல். (சது.)

Miron Winslow


pō-
4 & 5 v. intr. [ O. K. pōgu M. pō.]
1. To go, proceed; to go away, depart;
செல்லுதல். மாமலர் கொய்ய . . . யானும் போவல் (மணி. 3, 83).

2. To reach a destination;
அடைதல். (W.)

3. To belong;
உரியதாதல். (W.)

4. To be born;
பிறத்தல். வணிகர் மரபிற் போந்தோன் (உபதேசகா. சிவபுண். 153).

5. To lie, pass through, as a path;
நீண்டு செல்லுதல். தென் கரைக்கு நடுவாகப்போயின இடைகழி (T. A. S. i, 189).

6. To be proper, admissible, passable;
தகுதியாதல். அப்படிச் செய்யப்போகாது. (W.)

7. To become long; to be stretched out;
நெடுமையாதல். (தொல். சொல். 317.) போகித ழுண்கண். (பு. வெ. 11, ஆண்பாற். 3).

8. To become straight;
நேர்மையாதல். வார்தல் போகல் . . . நேர்பு நெடுமையும் செய்யும்பொருள் (தொல். சொல். 317).

9. To extend, spread;
பரத்தல். விசும்பினு ஞாலத் தகத்தும் வளியே யெதிர்போம் பல்கதிர் ஞாயிற்றொளி (கலித். 144, 40).

10. To be full;
நிரம்புதல். நலந் துறை போய நங்கை (சீவக. 2132).

11. To exceed transcend;
மேற்படுதல். ஆயிரமல்ல போன (கம்பரா. மாயாசனக. 14).

12. To shoot up; to be tall;
ஓங்குதல். கள்ளிபோகிய களரியம் பறந்தலை (புறநா. 237).

13. To become expert in;
நன்கு பயிலுதல். முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வுத்தமக்கவி (கம்பரா. சிறப்புப். 9).

14. To undergo, experience; to go through the process of;
கூடியதாதல். மூச்சு விடப் போகவில்லை.

15. To separate;
பிரிதல். புலம்பப் போகாது (பரிபா. 11, 118).

16. To cease;
ஒழிதல். மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10).

17. To leave, abandon;
நீங்குதல். நூல் போன சங்கிலி (பதினொ. திருத். திருவந். 69).

18. To go by, pass over; to lapse;
கழிதல். போய காலங்கள் (திவ். திருவாய். 2, 6, 10).

19. To vanish, disappear;
மறைதல். ஒளியவன் . . . தேரும் போயிற்று (திவ். பெரியதி. 8, 6, 6).

20. To be missing, to be lost;
காணாமற் போதல். போன பொருள் திரும்பாது.

21. To change, as from one state to another;
மாறுதல். (W.)

22. To be subtracted;
கழிக்கப்படுதல். ஆறிலே இரண்டு போக.

23. To be divided;
வகுக்கப்படுதல். நூறில் பன்னிரண்டு எட்டுத்தரம் போகும்.

24. To perish, die;

DSAL


போதல் - ஒப்புமை - Similar