Tamil Dictionary 🔍

பூத்தல்

poothal


மலர்தல் ; தோன்றுதல் ; உண்டாதல் ; பொலிவுபெறுதல் ; பூப்படைதல் ; கண்ணொளி மங்குதல் ; பூஞ்சணம் பிடித்தல் ; பயனின்றிப் போதல் ; தோற்றுவித்தல் ; படைத்தல் ; பெற்றெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலர்தல். பூத்த மாஅத்து (ஐங்குறு.10). 1. To blossom, bloom; தோன்றுதல். பூத்திழி மதமலை (கம்பரா. கும்பகர். 315). 2. To appear; பொலிவு பெறுதல். மீன்பூத் தன்ன தோன்றலர் (திருமுரு.169). 3. To flourish; to be prosperous; இருதுவாதல் பூத்தகாலைப் புனையிழை மனைவியை (நம்பியகப். 91). 4. To menstruate; வெகுநேரம் நோக்குதலாற் கண்ணொளி மழுங்குதல். 5. To become blurred in vision, as by long wistful look; பூஞ்சாளம் பிடித்தல். Loc. 6. To become mouldy; பயனின்றிப்போதல். எதிர்பார்த்த காரியம் பூத்துப்போயிற்று.-tr. 7. To become useless; மலர் முதலியவற்றைத் தோற்றுவித்தல். செய்ய தாமரைகளெல்லாந் தெரிவையர் முகங்கள் பூத்த (கம்பரா. நீர்விளை. 3). 1. To produce, as flower; சிருட்டித்தல். ஞாலமெல்லாம் பூத்தோனே (பாரக. கிருட்டிண. 12). 2. To create;

Tamil Lexicon


pū-
11 v. cf. puṣp. [K. pū.]
1. To blossom, bloom;
மலர்தல். பூத்த மாஅத்து (ஐங்குறு.10).

2. To appear;
தோன்றுதல். பூத்திழி மதமலை (கம்பரா. கும்பகர். 315).

3. To flourish; to be prosperous;
பொலிவு பெறுதல். மீன்பூத் தன்ன தோன்றலர் (திருமுரு.169).

4. To menstruate;
இருதுவாதல் பூத்தகாலைப் புனையிழை மனைவியை (நம்பியகப். 91).

5. To become blurred in vision, as by long wistful look;
வெகுநேரம் நோக்குதலாற் கண்ணொளி மழுங்குதல்.

6. To become mouldy;
பூஞ்சாளம் பிடித்தல். Loc.

7. To become useless;
பயனின்றிப்போதல். எதிர்பார்த்த காரியம் பூத்துப்போயிற்று.-tr.

1. To produce, as flower;
மலர் முதலியவற்றைத் தோற்றுவித்தல். செய்ய தாமரைகளெல்லாந் தெரிவையர் முகங்கள் பூத்த (கம்பரா. நீர்விளை. 3).

2. To create;
சிருட்டித்தல். ஞாலமெல்லாம் பூத்தோனே (பாரக. கிருட்டிண. 12).

3. To give birth to;
பெற்றெடுத்தல். ஓரு திருவைப் பூத்தனள் (பிரமோத். 8, 15).

DSAL


பூத்தல் - ஒப்புமை - Similar