Tamil Dictionary 🔍

நெய்

nei


வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள் : வெண்ணெய் ; எண்ணெய் ; புழுகுநெழ் ; தேன் ; இரத்தம் ; நிணம் ; நட்பு ; சித்திரைநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாந்துடன் சேர்ந்து இறுகப்பிடித்துக் கொள்ளுதல்குரிய கருப்புக்கட்டி முதலியன. மணலும் நீருங் கூட வரைந்த சாந்திற் கருப்புக் கட்டியாகிய நெய் அளவினவாறுபோல (நீலகேசி, 310, உரை). Cementing substance; நிணம். நெய்யுண்டு (நல்லா. 71). 7. Grease, fat; சினேகம். நெய் பொதி நெஞ்சின் மன்னர் (சீவக. 3049). 8. Friendship, love; வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள். நீர்நாண நெய் வழங்கியும்(புறநா. 106, 21). 1. Ghee , clarified butter; வெண்ணெய். நெய்குடை தயிரி னுரையொடும் (பரிபா.16, 3). 2. Butter; எண்ணெய். நெய்யணி மயக்கம் (தொல். பொ. 146). 3. Oil; புழுகு நெய். மையிருங் கூந்த னெய்யணி மறப்ப (சிலப். 4, 56). 4. Civet; தேன். நெய்க்கண் ணிறாஅல் (கலித். 42). 5. Honey; உதிரம். நெய்யரிபற்றிய நீரெலாம் (நீர் நிறக். 51). 6. Blood; See சித்திரை. (சூடா.) 9. The 14th nakṣatra.

Tamil Lexicon


s. ghee, clarified butter; 2. fat, grease, நிணம்; 3. blood. உதிரம்; 4. the 14th lunar asterism, சித்திரைநாள். நெய்யிலே கைவிட, to put the hand in (hot) ghee to prove one's innocence. நெய்க்கடல், (சர்ப்பி சமுத்திரம்) one of the seven oceans, that of ghee. நெய்ச்சட்டி, a chatty for frying. நெய்ச் சிக்கு, indigestion caused by eating ghee, it adhering to the bowels. நெய்ச்சுண்டு, a small portion of ghee, sticking to the pot; sediment or dregs, settling at the bottom of the vessel in boiling butter to prepare ghee. நெய்ப்பற்று, ப்பிடி, -ப்பிடிப்பு, greasiness, stickiness of ghee; 2. being fat (as a person). நெய்மழுவாய்த் தீர்த்துக்கொள்ள, நெய் யா மழுவாத் தீர்த்துக்கொள்ள, to get a case decided by putting the hand in hot oil. நெய் வார்க்க, to pour ghee upon the boiled rice. பன்றிநெய், lard.

J.P. Fabricius Dictionary


neyyi நெய்யி ghee, clarified butter

David W. McAlpin


, [ney] ''s.'' Grease, fat, unctuousness, oili ness, நிணம். 2. Ghee, clarified butter, கிருதம். ''(c.)'' 3. (சது.) Blood, உதிரம். 4. The fourteenth lunar asterism, சித்திரைநாள். நெய்யாமழுவாத்தீர்த்துக்கொள்ளுதல். Getting a matter decided by the ordeal. கையிலிருக்கநெய்யிலேகையிடுவானேன். When the thing stolen is found in the hand, why put the hand in (hot) oil?

Miron Winslow


ney,
n. perh. sucha [T. neyyi, K. M. ney.]
1. Ghee , clarified butter;
வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள். நீர்நாண நெய் வழங்கியும்(புறநா. 106, 21).

2. Butter;
வெண்ணெய். நெய்குடை தயிரி னுரையொடும் (பரிபா.16, 3).

3. Oil;
எண்ணெய். நெய்யணி மயக்கம் (தொல். பொ. 146).

4. Civet;
புழுகு நெய். மையிருங் கூந்த னெய்யணி மறப்ப (சிலப். 4, 56).

5. Honey;
தேன். நெய்க்கண் ணிறாஅல் (கலித். 42).

6. Blood;
உதிரம். நெய்யரிபற்றிய நீரெலாம் (நீர் நிறக். 51).

7. Grease, fat;
நிணம். நெய்யுண்டு (நல்லா. 71).

8. Friendship, love;
சினேகம். நெய் பொதி நெஞ்சின் மன்னர் (சீவக. 3049).

9. The 14th nakṣatra.
See சித்திரை. (சூடா.)

ney,
n.
Cementing substance;
சாந்துடன் சேர்ந்து இறுகப்பிடித்துக் கொள்ளுதல்குரிய கருப்புக்கட்டி முதலியன. மணலும் நீருங் கூட வரைந்த சாந்திற் கருப்புக் கட்டியாகிய நெய் அளவினவாறுபோல (நீலகேசி, 310, உரை).

DSAL


நெய் - ஒப்புமை - Similar