Tamil Dictionary 🔍

நட்பு

natpu


சிநேகம் ; உறவு ; சுற்றம் ; நண்பன் ; யாழின் நாலாம் நரம்பு ; காதல் ; அரசாங்கம் ஆறனுள் ஒன்றாகிய நட்பரசர் ; கையூட்டு ; மாற்றரசரோடு நட்புச்செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சி. நாமமருடலு நட்புந் தணப்பும் (பரிபா 20, 108.) Sexual union; இராசாங்க மாறனுள் ஓன்றாகிய நட்பரசர். படைகுடிகூழமைச்சு நட்பரணாறும் (குறள், 381). 2. Allies, one of six irācāṅkam, q.v.; சினேகம். நட்பிடைக் குய்யம் வைத்தான் (சீவக. 253). 1. Friendship, amity; காதல். நின்னொடு மேயமடந்தை நட்பே (ஐங்குறு. 297). 10. Love; கிரகநிலையைந்தனுள் சினேகத்தைக் குறிக்கும் நிலை. 4. (Astrol.) Friendly aspect of a planet, one of five kiraka-nilai, q.v.; உறவு. (பிங்.) 5. Relationship, kinship; சுற்றம். (சூடா.) 6. Relation, kindred; யாழின் நான்காம் நரம்பு. இளைகிணைபகைநட்பென்றிந் நான்கின் (சிலப். 8, 33). 7. The 4th string of a lute; பரிதானம். (W.) 8. Bribe; மாற்றரச ரோடு நட்புச்செய்கை. (பு. வெ. 9, 37, உரை.) 9. Reconciliation with enemy kings;

Tamil Lexicon


s. (நள்) friendship, affection, சிநேகம்; 2. present, gift, bribe பரி தானம். நட்புத்தின்னாமல் நாவெழாது, he will not open his mouth to do justice unless one greases his palm. நட்பாட, to keep friendship, to be affectionate. நட்பாளன், a trusty friend. நட்புக்காட்ட, to show kindness, to make presents, to get one's favour. நட்புவைக்க, to show kindness, to cultivate friendship.

J.P. Fabricius Dictionary


, [nṭpu] ''s.'' Friendship, amity, sociality, affection, சிநேகம். 2. Relationship, con sanguinity, உறவு. 3. A bribe, பரிதானம். ''(p.)''

Miron Winslow


naṭpu,
n. நள் [K.naṇpu.]
1. Friendship, amity;
சினேகம். நட்பிடைக் குய்யம் வைத்தான் (சீவக. 253).

2. Allies, one of six irācāṅkam, q.v.;
இராசாங்க மாறனுள் ஓன்றாகிய நட்பரசர். படைகுடிகூழமைச்சு நட்பரணாறும் (குறள், 381).

3. Friend;
நண்பன். எனக்கவன் நட்பு.

4. (Astrol.) Friendly aspect of a planet, one of five kiraka-nilai, q.v.;
கிரகநிலையைந்தனுள் சினேகத்தைக் குறிக்கும் நிலை.

5. Relationship, kinship;
உறவு. (பிங்.)

6. Relation, kindred;
சுற்றம். (சூடா.)

7. The 4th string of a lute;
யாழின் நான்காம் நரம்பு. இளைகிணைபகைநட்பென்றிந் நான்கின் (சிலப். 8, 33).

8. Bribe;
பரிதானம். (W.)

9. Reconciliation with enemy kings;
மாற்றரச ரோடு நட்புச்செய்கை. (பு. வெ. 9, 37, உரை.)

10. Love;
காதல். நின்னொடு மேயமடந்தை நட்பே (ஐங்குறு. 297).

naṭpu
n. நள்-.
Sexual union;
புணர்ச்சி. நாமமருடலு நட்புந் தணப்பும் (பரிபா 20, 108.)

DSAL


நட்பு - ஒப்புமை - Similar