நகர்த்துதல்
nakarthuthal
இடம்விட்டுப் பெயர்த்தல் ; சிறிது தள்ளுதல் ; காலம்கடத்தல் ; சிறுகச்சிறுககவர்தல் ; நன்றாகப் புடைத்தல் ; செவ்வையாய்ச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரயாசைப்பட்டுச் சிறிது தள்ளுதல். 1. To push with difficulty, shove along;
Tamil Lexicon
nakarttu-,
5 v. tr. Caus. of நகர்-. Colloq.
1. To push with difficulty, shove along;
பிரயாசைப்பட்டுச் சிறிது தள்ளுதல்.
2. To pilfer, steal little by little;
சிறுகச் சிறுக அபகரித்தல்.
3. To delay;
காலம் கடத்துதல். வேலையை நகர்த்துகிறான்.
4. To thrash, give a good drubbing;
நன்றாகப்புடைத்தல்.
5. To do well;
செவ்வையாய்ச் செய்தல். காரியங்களை நகர்த்தி விட்டான்.
DSAL