Tamil Dictionary 🔍

துவள்

thuval


காண்க : துவட்சி ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம் துவளின் மாமணி மாடமோங்கு துலைவில்லிமங்கலம் (திவ். திருவாய். 6,5,1.) 2. cf. துகள். Fault, defect; . See துவட்சி. நனியுருவத் தென்னோ துவள்கண்டீ (பரிபா.6.64).

Tamil Lexicon


துவளு, I. v.i. be flexible or pliable; 2. shake, be agitated, அசை; 3. relax, slacken, தளர்; 4. bend, warp, shrink, நெளி; 5. become dry, வாடு; 6. stick to, adhere, ஒட்டு; 7. faint, droop under a load etc. அந்தக் காரியத்திலே மிகத் துவண்டிருக் கிறான், he is very much bent on that business. பாலைத் துவளக் காய்ச்சினான், he boiled the milk until it was thick. துவட்சி, துவளல், v. n. being thin, slender, flexible; shaking as unable to bear a weight.

J.P. Fabricius Dictionary


[tuvḷ ] --துவளு, கிறது, துவண்டது, துவளும், துவள, ''v. n.'' To waver, shake, move, vacillate, to be agitated, அசைய. 2. To be flexible slender, weak, unable to sustain a weight--as a tender tree, or ''(fig.)'' a lady's waist, &c., மெல்லியதாயிருக்க. 3. To fall, faint, droop under a load, &c., திவள. (See சவளு 4. To wrap, bend, shrink, twist, as boards in the sun, &c. நெளிய. 5. To become thick and dry as curry. இறுக. 6. To become rumpled, deprived of gloss, as a new-cloth, கசங்க. 7. ''(in an impersonal sense.)'' To stick to, adhere, as oil, thick liquid, dust, or coloring matter, to the hand or a cloth; to stain, blot, color, soil, daub, smear, ஒட்ட. 8. To become dry, as plants under a scorching sun, வாட. ''(c.)'' குழந்தைஅல்லித்தண்டுபோலத்துவண்டுகிடக்கிறது. The child is weak as the stalk of a lily. துவளாமல்காரியம்பார்க்க. To manage another's business without deriving any profit to one's self. To get business done with out expense. பாலைத்துவளக்காய்ச்சினான். He boiled the milk until it was thick.

Miron Winslow


tuvaḷ,
n. துவள்-.
See துவட்சி. நனியுருவத் தென்னோ துவள்கண்டீ (பரிபா.6.64).
.

2. cf. துகள். Fault, defect;
குற்றம் துவளின் மாமணி மாடமோங்கு துலைவில்லிமங்கலம் (திவ். திருவாய். 6,5,1.)

tuvaḷ-,
2 v. cf. dhvar. intr.
1. To be flexible, supple, as a tender tree;
ஒசிதல். (சூடா.) பொலிவில துவள (கம்பரா. பூக்கொய். 11).

2. To bend, shrink, twist, warp, as boards in the sun;
நெளிதல். (சங். அக.)

3. To fade, wither, as plants under scorching sun;
வாடுதல். கண்ணார் தழையுந் துவளத்தகுவனவோ (திருக்கோ. 112).

4. To become rumpled, as a new cloth;
கசங்குதல். புதிய ஆடை துவண்டுவிட்டது.

5. To quiver, tremble;
துடித்தல். பெருநீரறச் சிறுமீன் றுவண்டாங்கு (திருவாச 6, 26).

6. To be distressed;
வருந்துதல். சோறுகூறையின்றியே துவண்டு (தேவா. 119, 3).

7. To disappear;
ஒழிதல். வெஞ்சுரஞ்சென்றதெல்லாம்... பூவணைமேலணையாமுன் றுவளுற்றதே (திருக்கோ. 351).

8. To be dense, close;
அடர்தல். தாழை துவளுந் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே (திணைமாலை. 59).

9. To be thick in consistency, as milk;
இறுகுதல். பாலைத் துவளக் காய்ச்சினான்.

10. To be sticky; to adhere, as oil;
ஒட்டுதல். (W.)

11. To be unite sexually;
புணர்தல். துடியிடையார் கணவருடன் துவளும் போது (அருணா. பு. திருக்கண். 14).

12. To be thin;
மெல்லிதாயிருத்தல். (சங். அக.) - tr. To touch; தொடுதல். (பிங்.)

DSAL


துவள் - ஒப்புமை - Similar