தகடு
thakadu
மென்மையுந் தட்டையுமான வடிவு ; உலோகத் தட்டு ; வண்ணத் தகடு ; கம்மார் வெற்றிலை , கறுப்பு வெற்றிலை ; பூவின் புறவிதழ் ; மண்படை ; அடர்ச்சி ; வாழை இலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழையிலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு. Tj. The middle portion of a plantain leaf, cut longitudinally; அடர்ச்சி. (யாழ். அக.) 8. Closeness, thickness, as of hair; மண்படை. (J.) 7. Layer of earth; பூவின் புறவிதழ். கருந்தகட்டுளைப் பூமருதின் (திருமுரு. 27). 6. Outer petal; கம்மார்வெற்றிலை. (தைலவ. தைல. 85). 5. Black betel-leaf; இலை. (பிங்.) 4. Leaf blade; வருணத்தகடு. தகட்டி லழுத்தின மாணிக்கம் போலே (ஈடு). 3. Foil set below a precious stone to enhance its lustre; உலோகத்தட்டு. தமனியத் தகடுவேய்ந்தென (கம்பரா. நகர்நீ. 28). 2. Metal plate; மென்மையுந் தட்டையுமான வடிவு. (பிங்.) 1. Quality of being thin and flat, as plate of metal;
Tamil Lexicon
s. (Gen. தகட்டின்), a thin flat piece of metal, a metal plate, தட்டு; 2. closeness, thickness, அடர்ப்பு; 3. leaf, blade, flake, scale, இலை; 4. the sepals of a flower, புறவிதழ். தகட்டிலே வரைய, to engrave on a plate. தகட்டுச் செம்பு, copper in plate. தகடு தைக்க, to fasten a plate with nails. போற்றகடு, a gold plate. செப்புத்தகடு, a copper plate. நாறாத்தகடு, the sepals of a flower which have no fragrance.
J.P. Fabricius Dictionary
அரி, அடர், ஐம்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tkṭu] ''s.'' (''Gen.'' ட்டின்.) Metal plate, lamina of metal, தட்டு. 2. Flat and thin as the quality of a plate of metal, ஐமை வடிவு. 3. Leaf, blade, vegetable exfolia tion, flake, scale, இலை. 4. closeness, thickness as of bushes, hair, &c., அடர்பு. 5. ''[prov.]'' Stratum or layer of earth, மண் படை. ''(c.)''
Miron Winslow
takaṭu,
n. [T. K. tagadu.]
1. Quality of being thin and flat, as plate of metal;
மென்மையுந் தட்டையுமான வடிவு. (பிங்.)
2. Metal plate;
உலோகத்தட்டு. தமனியத் தகடுவேய்ந்தென (கம்பரா. நகர்நீ. 28).
3. Foil set below a precious stone to enhance its lustre;
வருணத்தகடு. தகட்டி லழுத்தின மாணிக்கம் போலே (ஈடு).
4. Leaf blade;
இலை. (பிங்.)
5. Black betel-leaf;
கம்மார்வெற்றிலை. (தைலவ. தைல. 85).
6. Outer petal;
பூவின் புறவிதழ். கருந்தகட்டுளைப் பூமருதின் (திருமுரு. 27).
7. Layer of earth;
மண்படை. (J.)
8. Closeness, thickness, as of hair;
அடர்ச்சி. (யாழ். அக.)
takaṭu
n. [T. K. tagadu.]
The middle portion of a plantain leaf, cut longitudinally;
வாழையிலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு. Tj.
DSAL