Tamil Dictionary 🔍

செல்

sel


போகை ; வாங்கிய கடனுக்குச் செலுத்தியதொகை ; கடன் ; கடன் செலுத்தியதற்கு பத்திர மெழுதுங் குறிப்பு ; கையொப்பம் ; சென்ற காலவளவு ; மேகம் ; வானம் ; குடி ; வேல் ; கறையான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போகை. செல்லொன்றுகணையால் (கம்பரா. இராவணன்வதை. 15). 1. Career, swift course; வாங்கிய கடனுக்குச் செலுத்திய தொகை. இந்தப் பத்திரத்துக்குச் செல் ரூபாய் ஐம்பது. 2. Payment of loan; கடன். கணக்குப் பார்த்ததில் அவனுக்கு ஆயிரரூபாய் செல் இருக்கிறது. 3. Loab, debt; கடன் செலுத்தியதற்குப் பத்திரத்திலெழுதுங் குறிப்பு. கொடுத்த ரூபாயைச் செல் வைத்திருக்கிறதா? 4. Note of payment; கறையான். (பிங்.) செல்லரித்திடவு மாண்டெழாதாள் (கம்பரா. காட்சி. 15). White ant ; மேகம் . (பிங்.) 6. Cloud; ஆகாயம். (அக. நி.) 7. Sky; இடி. வான்முழக்குச் செல் (பரிபா. 13, 44). 8. Thunder-bolt; வேல். (அக. நி.) 9. Javelin; சென்ற காலவளவு. சூரிய புக்தியிற் செல் நான்கு வருஷம். 5. Period that has elapsed;

Tamil Lexicon


செல்லு, s. white-ants, கறையான்; 2. (Tel.) endorsement of a bill கையொப்பம்; 3. thunderbolt, இடி; 4. cloud, மேகம். செல்லடிக்க, செல்லரிக்க, to be eaten by white-ants. செல்லு வைக்க, to endorse payment on a bill. ஈசெல், ஈசல், white-ants when winged.

J.P. Fabricius Dictionary


1. 1-2. poo 2. naTa 1-2. போ 2. நட 1. [arrive at (a destination)]; be current (of money) 2. have an effect

David W. McAlpin


[cel ] --செல்லு, ''s.'' White ants, கறை யான். ''[loc.]'' 2. ''Tel.'' சஎல்லு.) Endorsement of a bill, &c., by the receiver of the cash, கையெழுத்து. 3. ''(p.)'' Thunder-bolt, இடி. 1. Cloud. மேகம். (சது.)

Miron Winslow


cel,
n. செல்-. [K. sale.]
1. Career, swift course;
போகை. செல்லொன்றுகணையால் (கம்பரா. இராவணன்வதை. 15).

2. Payment of loan;
வாங்கிய கடனுக்குச் செலுத்திய தொகை. இந்தப் பத்திரத்துக்குச் செல் ரூபாய் ஐம்பது.

3. Loab, debt;
கடன். கணக்குப் பார்த்ததில் அவனுக்கு ஆயிரரூபாய் செல் இருக்கிறது.

4. Note of payment;
கடன் செலுத்தியதற்குப் பத்திரத்திலெழுதுங் குறிப்பு. கொடுத்த ரூபாயைச் செல் வைத்திருக்கிறதா?

5. Period that has elapsed;
சென்ற காலவளவு. சூரிய புக்தியிற் செல் நான்கு வருஷம்.

6. Cloud;
மேகம் . (பிங்.)

7. Sky;
ஆகாயம். (அக. நி.)

8. Thunder-bolt;
இடி. வான்முழக்குச் செல் (பரிபா. 13, 44).

9. Javelin;
வேல். (அக. நி.)

cel,
n. cf. சிதல்.
White ant ;
கறையான். (பிங்.) செல்லரித்திடவு மாண்டெழாதாள் (கம்பரா. காட்சி. 15).

cel-,
3 v. cf. cal. [T. cellu, K. sal, M. celka.] intr.
1. To go, flow, pass; to traverse, as the eye, mind;
போதல். சென்ற தேஎத்து (தொல். பொ. 146).

2. To occur;
நிகழ்தல். செல்லாஅநின்ற வித்தாவரசங்கமத்துள் (திருவாச. 1, 30).

3. To fall, as on the ground;
வீழ்தல். படியிற்செல்லும்படி (கம்பரா. நிகும்பலை. 23).

4. To become, form;
ஆதல். புண்செல்வன வல்லால் (கம்பரா. நிகும்பலை. 1070.

5. To spread, as fame;
பரவுதல். உரைசெல முரசுவௌவி (புறநா. 26, 7).

6. To be effective; to have influence;
பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி, 115) .

7. To last, endure, exist;
நிலைத்திருத்தல். செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா. இந்திரசித். 56).

8. To pass, as coin;
செலாவணியாதல். சந்தையினிற் செல்லாப்பணஞ் செல்லுமோ (தனிப்பா.).

9. To be required; to cost;
வேண்டியதாதல். இந்தக் காரியத்தை முடிக்க ஆயிர ரூபா செல்லும்.

10. To be suitable; to be acceptable;
பொருந்துதல். உலகம் . . . தோற்றுவானொருவனை உடைத்தாதல் செல்லாது (சி. போ. சிற். 1, 2, பக். 17).

11. To be acceptable to the system;
விரும்பியேற்றுக்கொள்ளப்படுதல். நோயாளிக்கு ஆகாரம் செல்லவில்லை.

12. To be due, as money; to appertain to, as a right;
அடைதற்குரியதாதல். இந்தப்பணம் எனக்குச் செல்லவேண்டியது.

13. To pass away, lapse, expire, as time;
கழிதல். சென்றன சென்றன வாழ்நாள் (நாலடி, 4).

14. To disappear, diminish, as anger;
தணிதல். செலியரத்தை நின்வெகுளி (புறநா. 6, 23).

15. To perish; to be ruined;
கெடுதல். செல்லா நல்லிசை (மலைபடு. 388).

16. To die;
இறத்தல். செல்லுநாளைந்து புலனு மயர்ந்தபின்னர் (உபதேசகா. சிவநாம. 3). --tr.

1. To approach;
கிட்டுதல். செல்வரைச் சென்றிர வாதார் (நாலடி, 296).

2. To become, turn into, attain;
அடைதல். கலங்கலைச் சென்றவன்றும் (திருக்கோ. 24).

DSAL


செல் - ஒப்புமை - Similar