Tamil Dictionary 🔍

சூத்திரம்

soothiram


பஞ்சுநூல் ; இயந்திரம் ; நுண்ணிய வேலை ; தந்திரம் ; இரகசியம் ; சில்லெழுத்திற் பலபொருள் தெரிவிக்கும் யாப்புச் செய்யுளாகிய நுற்பா ; சூத்திர வடிவில் அமைந்த நூல் ; இயக்குவிக்குங் கயிறு ; பெயர் , விதி , விலக்குதல் , நியமம் , அதிகாரம் , ஞாபகம் என்னும் அறுவகைச் சூத்திரங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூத்திர வடிவில் இயன்ற தாந்த சூத்திரம். 7. Treatise in sūtra style; பெயர்ச்சூத்திரம். விதிச்சூத்திரம், விலக்கியற்சூத்திரம், நியமச்சூத்திரம், அதிகாரச்சூத்திரம், ஞாபகச்சூத்திரம் என அறுவகைப்படும் சூத்திரங்கள். (யாப். வி . பாயி. பக். 11.) 8. Sūtra, of six kinds, yar-c-cūttiram, viti-c-cūttiram, vilakki-cūttiram, niyama-c-cūttiram; சில் வகையெழுத்திற் பல்வகைப்பொருளும் செறிந்துவிளங்க அமைத்து முடிக்கப்படும் யாப்பு. (தொல். பொ. 481.) 6. Sūtra, aphorism; இரகசியம். (சங். அக.) 5. Secret, mystery; தந்திரம். (W.) 4. Stratagem, artful trick, artifice; சூட்சுமவேலை. (W.) 3. Ingenious contrivance, puzzle; இயந்திரம். (சூடா.) முன்பயில் சூத்திர மிதுவென (கம்பரா. கார்முக. 61). 2. Machine; engine; mechanism; spring in a machine; பஞ்சநூல் (சூடா.) 1. Thread, cord;

Tamil Lexicon


s. thread, twisted thread, cord, நூல்; 2. machine, engine, artificial piece of work (as a clock etc.) இயந்திரம்; 3. stratagem, artifice, contrivance, உபாயம்; 4. a brief rule or precept in grammar, logic; 5. a secret, a mystery, இரகசியம்; 6. a proposition, a doctrine, a predicated dogma, கொள்கைச் சூத்திரம். சூத்திரக்காரன், சூத்திரன், சூத்திரி, an artist, a mechanist, an engineer. சூத்திரத்தாரன், a stage-manager; 2. God. சூத்திரதாரி, one who moves and manages the wires in a puppetshow; 2. God (as moving all things). சூத்திரப் பதுமை, a puppet moved by strings, சூத்திரப் பாவை. சூத்திரப் பதுமையாட்ட, to make puppets dance. சூத்திரப் புறநடை, a note appended to a rule. சூத்திர வேலை, an ingenious contrivance, anything of mechanism. கபட சூத்திரம், a cunning deception. சல சூத்திரம், waterworks, hydraulic machine.

J.P. Fabricius Dictionary


, [cūttiram] ''s.'' Machine, engine, any piece of mechanism; mechanism of the body or otherwise; the spring in a machine; that which gives impulse, momentum, effect, &c.--as the helm of the ship, the lock of a gun, &c., இயந்திரம். 2. Ingenious contrivance, puzzle, சூட்சவேலை. 3. Stratagem, artifice, artful trick, உபாயம். 4. Point, gist, hinge, substance of a thing, அரும்பொருளடக்கம். 5. A secret, a mystery, இரகசியம். 6. Rule, canon, definition, precept, axiom, for mula. இலக்கணசூத்திரம். 7. W. p. 94. SOOTRA. Guide, clue, directory, key, in dex, குறிப்பு. 8. Proposition, doctrine, predicated dogma, கொள்கைச்சூத்திரம். 9. Thread, yarn, twine, line, cord, பஞ்சிநூல். --''Note.'' Rules in Garmmar or other works are of six kinds: 1. பிண்டச்சூத்திரம், the opening of a subject by giving an abstract of the work. 2. தொகைச்சூத்திரம், a synopsis, the divisions in brief, their number, &c., a general rule. 3. வகைச்சூத்திரம், an analysis with general divisions; particular rules. 4. குறிச்சூத்திரம், definitions, &c., demonstra tive rules. 5. செய்கைச்சூத்திரம், directory, as in grammar, for permutation, elision, &c., connective rules. 6. புறனடைச்சூத்திரம், supplementary rules to obviate objections; give reasons, explanations, &c., respective rules. Thess are sometimes reduced to two, குறிச்சூத்திரம் and செய்கைச்சூத்திரம். சாத்திரத்தைச்சுட்டுச் சதுமறையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக்கண்டுசுகம்பெறுவதெக்காலம். When shall the shastras be burnt, the four Vedas proved false, and I through a knowledge of the mystery, be made happy?

Miron Winslow


cūttiram,
n. sūtra.
1. Thread, cord;
பஞ்சநூல் (சூடா.)

2. Machine; engine; mechanism; spring in a machine;
இயந்திரம். (சூடா.) முன்பயில் சூத்திர மிதுவென (கம்பரா. கார்முக. 61).

3. Ingenious contrivance, puzzle;
சூட்சுமவேலை. (W.)

4. Stratagem, artful trick, artifice;
தந்திரம். (W.)

5. Secret, mystery;
இரகசியம். (சங். அக.)

6. Sūtra, aphorism;
சில் வகையெழுத்திற் பல்வகைப்பொருளும் செறிந்துவிளங்க அமைத்து முடிக்கப்படும் யாப்பு. (தொல். பொ. 481.)

7. Treatise in sūtra style;
சூத்திர வடிவில் இயன்ற தாந்த சூத்திரம்.

8. Sūtra, of six kinds, yar-c-cūttiram, viti-c-cūttiram, vilakki-cūttiram, niyama-c-cūttiram;
பெயர்ச்சூத்திரம். விதிச்சூத்திரம், விலக்கியற்சூத்திரம், நியமச்சூத்திரம், அதிகாரச்சூத்திரம், ஞாபகச்சூத்திரம் என அறுவகைப்படும் சூத்திரங்கள். (யாப். வி . பாயி. பக். 11.)

DSAL


சூத்திரம் - ஒப்புமை - Similar