Tamil Dictionary 🔍

சூடு

soodu


வெப்பம் ; அரிக்குவியல் ; சுடப்பட்டது ; சுடுபுண் ; சூட்டுக்குறி ; ஒற்றடம் ; கோபமுண்டாக்குதல் ; கோபம் ; உணர்ச்சி ; விலையேற்றம் ; கண்ணோய்வகை ; வடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சிக்கொண்டை. 2. Crest, comb; சூடுமி. கானிறை குஞ்சிச் சூட்டில் (திருவிளை. யானையெய். 25.) 1. Hair-tuft; சூட்டுக்குறி. கருநரைமேற் சூடேபோல் (நாலடி, 186). 10. [T. cūdu, K. tūdu.] Brand; வடு. பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி (பெருங். மகத. 8, 14). 11. Scar, callosity; விலையேற்றம். விலை சூடாயிருக்கிறது. 8. Increase or enhancement, as of prices; உணர்ச்சி. எவ்வளவு சொன்னாலும் சூடில்லை. Loc. 7. Feeling, sensibility; கோபம். அவன் சூடாக இருக்கிறான். 6. Hot temper, anger; கோபமுண்டாக்குவது. அவன் வார்த்தை சூடாக இருக்கிறது. 5. That which provokes; ஒத்தடம். 4. Fomentation; வெப்பம். உடம்பு சூடாயிருக்கிறது. 3. (T. tcūdu, M. cūṭu, Tu. cūdu.) Heat, warmth, feverishness; சுடுபுண். 2. Burn, scald; கடப்பட்டது. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). 1. The which is heated, burnt, roasted; அரிக்கட்டு. அகவய லிளநெல் லரிகாற் சூடு (பரிபா. 7, 27). [K. sūdu, M. cūṭṭu, Tu. sūdi.] Bundle of sheaves;

Tamil Lexicon


s. heat, warmth, வெப்பம்; 2. a burning or brand; 3. a sheaf, a bundle of rice-corn given to the barber, washerman etc., அரிக்கட்டு; 4. fomentation, ஒத்தடம்; 5. scar, callosity, வடு; 6. (Sans.) hair tuft, crest. "சூடுகண்ட பூனை அடுப்படி செல்லாது", "a burnt child dreads the fire." சூடடிக்க, to thrash the leaves. சூடுகாட்ட, to foment, to warm, to heat, to appear hot (as fever). சூடுகொள்ள, to become heated or feverish. சூடுண்டவன், one marked with a brandiron. சூடுபோட, -வைக்க, to brand cattle. சூட்டடி, v. n. the beating of sheaves (before threshing). சூட்டுக்கோல், a brand-iron. சூட்டோடு சூடாய், adv. in continuation, at a heat, தொடர்ச்சியாக. கைச்சூடு, heat of the hand; 2. the sheaf given to the reapers.

J.P. Fabricius Dictionary


, [cūṭu] ''s.'' (''Gen.'' சூட்டு.) Heat, warmth, burn, scald, வெப்பம். 2. Brand, scar from a burn, or scald, சுடுசூடு. 3. Fomentation, அனல், [''ex'' சுடு, to burn.] 4. Stack of rice sheaves, or other grain-ricks, நென்முதலி யவற்றின்போர். 5. A sheaf of corn given to the washerman, barber, carpenter, &c., அரிக்கட்டு; [''ex'' சூடு, ''v.''] ''(c.)'' நீர்சூடாயிருக்கிறது. The water is hot. அவனுக்குச் சூடு கண்டிருக்கிறது. He has got strangury. His system is much irritated. சூட்டினாலுண்டானது. That which is pro duced by heat (in the body). சூட்டோடேசூடு. Repeated as hot appli cations. 2. While the thing is fresh.

Miron Winslow


cūṭu,
n. சூடு-.
[K. sūdu, M. cūṭṭu, Tu. sūdi.] Bundle of sheaves;
அரிக்கட்டு. அகவய லிளநெல் லரிகாற் சூடு (பரிபா. 7, 27).

cūṭu,
n. perh. சுடு-.
1. The which is heated, burnt, roasted;
கடப்பட்டது. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63).

2. Burn, scald;
சுடுபுண்.

3. (T. tcūdu, M. cūṭu, Tu. cūdu.) Heat, warmth, feverishness;
வெப்பம். உடம்பு சூடாயிருக்கிறது.

4. Fomentation;
ஒத்தடம்.

5. That which provokes;
கோபமுண்டாக்குவது. அவன் வார்த்தை சூடாக இருக்கிறது.

6. Hot temper, anger;
கோபம். அவன் சூடாக இருக்கிறான்.

7. Feeling, sensibility;
உணர்ச்சி. எவ்வளவு சொன்னாலும் சூடில்லை. Loc.

8. Increase or enhancement, as of prices;
விலையேற்றம். விலை சூடாயிருக்கிறது.

9. Opthalmia;
கண்ணோய்வகை. கண்ணில் சூடு வளர்ந்திருக்கிறது.

10. [T. cūdu, K. tūdu.] Brand;
சூட்டுக்குறி. கருநரைமேற் சூடேபோல் (நாலடி, 186).

11. Scar, callosity;
வடு. பாடகஞ் சுமந்த சூடுறு சேவடி (பெருங். மகத. 8, 14).

cūṭu,
n. cf. cūdā.
1. Hair-tuft;
சூடுமி. கானிறை குஞ்சிச் சூட்டில் (திருவிளை. யானையெய். 25.)

2. Crest, comb;
உச்சிக்கொண்டை.

DSAL


சூடு - ஒப்புமை - Similar