Tamil Dictionary 🔍

சினை

sinai


விலங்கு முதலியவை கருக்கொண்டிருத்தல் ; கருப்பம் ; முட்டை ; பூவரும்பு ; உறுப்பு ; மூங்கில் ; மொட்டு ; மரக்கிளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்கு முதலியவற்றின் சூல். சினைவளர் வாளையின் (பரிபா. 7, 38). 1. Embryo or foetus of animals; pregnancy; முட்டை. (பிங்.) 2. Spawn, eggs; பூமொட்டு. (திவா.) 3. Flower-bud; மரக்கிளை. குலவுச்சினைப் பூக்கொய்து (புறநா. 11, 4). 4. Branch of a tree; உறுப்பு. (திவா.) 5. Member, component part, limb; மூங்கில். (மலை.) 6. cf. vamša. Bamboo;

Tamil Lexicon


s. embryo, foetus of animals, கருப்பம்; 2. egg, முட்டை; 3. spawn of fish, மீன்சினை; 4. the being with young; 5. a member, component part; 6. flower bud, பூமொட்டு; 7. bamboo, மூங்கில். சினையாயிருக்க, to be with young (spoken of animals). சினைப்பட, -ஆக, -கொள்ள, to become impregnated, to conceive. சினைப்படுத்த, -யாக்க, to impregnate. சினைப்பட்டழிய, to perish by abortion. சினைநண்டு, a crab full of eggs. சினைமாடு, a cow in calf. சினை மீன், a fish with spawn.

J.P. Fabricius Dictionary


, [ciṉai] ''s.'' Embryo, f&oe;tus, கருப்பம். 2. Spawn, மீன்சினை. ''(c.)'' 3. Egg, முட்டை. 4. Flower bud, பூவரும்பு. 5. Branch of a tree, மரக்கொம்பு. 6. A member, a component part,--as distinguished from முதல் உறுப்பு. 7. Bambu, மூங்கில். (சது.) 8. One of the six sources, பொதுவிடம், from which nouns are formed, பொருளாதியாறனுளொன்று.--''Note.'' This word is in the first two meanings commonly applied to animals only. கெடாதஇடையன் சினையாட்டைக்காட்டினசம்பந் தம். As a shepherd, giving nothing, shows a ewe big with young; i. e. the illiberal make many promises.

Miron Winslow


ciṉai,
n. சினை-. [T. jena.]
1. Embryo or foetus of animals; pregnancy;
விலங்கு முதலியவற்றின் சூல். சினைவளர் வாளையின் (பரிபா. 7, 38).

2. Spawn, eggs;
முட்டை. (பிங்.)

3. Flower-bud;
பூமொட்டு. (திவா.)

4. Branch of a tree;
மரக்கிளை. குலவுச்சினைப் பூக்கொய்து (புறநா. 11, 4).

5. Member, component part, limb;
உறுப்பு. (திவா.)

6. cf. vamša. Bamboo;
மூங்கில். (மலை.)

DSAL


சினை - ஒப்புமை - Similar