Tamil Dictionary 🔍

கொய்தல்

koithal


koy-,
1 v. tr. [T. kōyu, K. koy, M. koyka.]
1. To pluck, cull, as flowers;
பறித்தல். பணிமலர் கொய்தும் பாவை புனைந்தும் (பெருங். இலாவாண. 19, 161).

2. To cut, reap;
அறுத்தல். சிறுதின் கொய்ய (மதுரைக். 271).

3. To shear, crop, as hair; to trim, as plants; to snip off;
கத்தரித்தல். கொய்தார் மன்னவன் (பு. வெ. 3, 3, கொளு)

4. To choose, select;
தெரிந்தெடுத்தல். பொருந்துவதோன் றெமக்குக் கொய்துரை (கோயிற்பு. பதஞ். 54).

5. To plait, gather into folds, as ends of a cloth;
சீலை செய்தல். கோடிப் பூந்துகில் கொய்து (பெருங். இலாவாண. 5, 165).

6. To bristle, as manes of a horse;
சிலிர்த்தல். கொய்சுவற் புரவி (மலைபடு. 572.)

koy-
11 v. tr.
To take away;
கவர்ந்துகொள்ளுதல். (ஈடு, 1, 4, 7.)

DSAL


கொய்தல் - ஒப்புமை - Similar