Tamil Dictionary 🔍

கொட்டை

kottai


koṭṭai,
n.
1. [T. K. Tu. koṭṭe, M. koṭṭa.] Seed of any kind not enclosed in chaff or husk, nut, stone, kernel;
விதை. (பிங்.)

2. [Tu. koṭṭe.] Testicles;
அண்டம்.

3. Pericarp of the lotus flower;
தாமரைக்கொட்டை. தாமரை வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல (பெருங். உஞ்சைக். 38, 258).

4. Fruit-bud of the jack; very small green pumpkin;
பலா பூசனிகளின் பிஞ்சு. Colloq.

5. Large rounded form, as in writing;
உருண்டை வடிவம். கொட்டையெழுத்து.

6. A gold ornament for women's hair;
மகளிர் தலையணிவகை.

7. See கொட்டாயிலந்தை. (L.)
.

8. [M. koṭṭa.] Castor-plant. See
ஆமணக்கு.

9. See கொட்டைக்கரந்தை. (மலை.)
.

10. Knob of wooden sandals;
பாதக்குறட்டின் குழிழ். பவழக்கொட்டைப் பொற்செருப் பேற்றி (பெருங். மகத. 22, 202).

11. Knots made of warp threads at the end of a cloth, as ornament, etc.;
அலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத்தும்பினைத் திரளமுடிந்த முடிச்சு. கொட்டைக்கரைய பட்டுடை நல்கி (பொருந. 155).

12. Warp threads at the end of a cloth hanging lossely and not made into knots;
ஆடைத்தும்பு. (பொருந.155, உரை.)

13. Head of a plole used as a prop;
கிடுகுதாங்குங் கால்முதலியவற்றின் தலைப்பகுதி. மணிபுனை செம்பொற் கொட்டை (சீவக. 113).

14. An ornament for elephant;
யானையின் அணிவிசேடம். பட்ட மடுத்த கொட்டையொடு (பெருங். மகத. 27, 75).

15. Base of a handspindle;
நூற்குங் கதிரின் கொட்டை.

16. Rolls of cotton prepared for spinning;
பஞ்சுச்சுரள். கொட்டைத் தலைப்பால் கொடுத்து (திவ். பெரியாழ். 3, 5, 1).

17. Plug or tent of cloth to widen the ear-holes for jewels;
காதுவளர்க்குந் திரி. Loc.

18. Small round pillow, cushion;
மகளிர் காதணிவகை. (பிங்.)

19. Pad for the head in carrying a load;
சும்மாடு. (W.)

20. Small round pillow, cushion;
சிறு தலையனை. பஞ்சின் நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பி (பதினொ. திருவிடைம. மும்.19).

koṭṭai
n.
A kind of paddy;
நெல்வகை. (தண். கன. பள். பக். 62.)

DSAL


கொட்டை - ஒப்புமை - Similar