Tamil Dictionary 🔍

குரல்

kural


கதிர் ; பூங்கொத்து ; ஒன்றோடொன்றற்குள்ள சேர்க்கை ; தினை , வாழை முதலியவற்றின் தோகை ; தினை ; பாதிரி ; பெண்டிர் தலைமயிர் ; மகளிர் குழல்முடிக்கும் ஐவகையுள் ஒன்று ; இறகு ; பேச்சொலி ; மொழி ; சந்தம் ; மிடறு ; ஏழிசையுள் முதலாவது ; ஓசை ; கிண்கிணிமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூங்கொத்து. கமழ்குரற் றுழாய் (பதிற்றுப். 31, 8). 2. Flower-cluster; ஒன்றோடொன்றற்குள்ள சேர்க்கை. குரலமை யொருகாழ் (கலித். 54, 7). 3. Link, tie, band; தினை வாழை முதலியவற்றின் தோகை. பரூஉக்குரற் சிறுதினை (புறநா. 168, 6). 4. Stalk, sheath of millet or plantain; தினை. (மலை.) 5. [T. korra, K. koraḷe.] Italian millet; . 6. See பாதிரி. (மலை.) பெண்டிர் தலைமயிர். (பிங்.) நல்லார் குரனாற்றம் (கலித். 88). 1. Woman's hair; மகளிர் குழல்முடிக்கும் ஐவகையுள் ஒன்று. (பு. வெ. 9, 35, உரை.) 2. One of the five modes in whicha woman dresses her hair; பறவையின் இறகு. (திவா.) 3. Feather, plumage; பேச்சொலி. சேவல் மயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்டு (நலவெண். சுயம்வ. 41). 1. [T. kuṟṟu, K. koral, M. kuṟal.] Voice; மொழி.யாவருந் தண்குரல் கேட்ப (கலித். 142, 9). 2. Word; சாரீரம். காமன் காமுறப்படுங்குரறருமிது (சீவக. 1218). 3. Tone in singing; ஏழிசையுள் முதலாவது. (திவா.) 4. (Mus.) First note of the Indian gamut; மிடறு. மணிக்குர லறுத்து (குறுந். 263). 5. Throat, windpipe; ஓசை. இடிகுரன் முரசு (கம்பரா. எழுச்சி. 1). 6. Sound; கிண்கிணிமாலை. (பிங்.) 7. String of jingling bells. See கதிர். வரகி னிருங்குரல் (மதுரைக். 272). 1. [Tu. koralu.] Cornear, spike; எழுத்து. (அக. நி.) 3. Letter; கற்றை. குரற் கூந்தல் (கலித். 72, 20). 1. Dense mass; யாழ்நரம்பு. (அக. நி.) 2. String of a lute;

Tamil Lexicon


s. woman's hair, குழல்; 2. a curl of hair; 3. feathers, plumage, இறகு; 4. millet.

J.P. Fabricius Dictionary


koralu கொரலு voice

David W. McAlpin


, [kurl] ''s.'' (''from Sans. Kura,'' to sound.) Voice, the voice of one person as dis tinguished from another, மிடற்றாற்பிறக்கும் இசை. 2. A good or clear voice; a singing voice, சந்தம். 3. The voice of birds, beasts, &c., sound; musical sound, tone, ஓசை. 4. (சது.) The throat; trachea, wind pipe, மிடறு. 5. The first of the seven musical tunes, prodused from the throat, மிடற்றிசை. (See இசை.) 6. The same tune on the lute or guitar, யாழ்நரம்பினோசை. 7. The first or lowest string of the guitar, யாழின் ஓர்நரம்பு. 8. A tree, பாதிரிமரம். ''(M. Dic.''

Miron Winslow


kural,
n.
1. [Tu. koralu.] Cornear, spike;
கதிர். வரகி னிருங்குரல் (மதுரைக். 272).

2. Flower-cluster;
பூங்கொத்து. கமழ்குரற் றுழாய் (பதிற்றுப். 31, 8).

3. Link, tie, band;
ஒன்றோடொன்றற்குள்ள சேர்க்கை. குரலமை யொருகாழ் (கலித். 54, 7).

4. Stalk, sheath of millet or plantain;
தினை வாழை முதலியவற்றின் தோகை. பரூஉக்குரற் சிறுதினை (புறநா. 168, 6).

5. [T. korra, K. koraḷe.] Italian millet;
தினை. (மலை.)

6. See பாதிரி. (மலை.)
.

kural,
n. cf. kurala.
1. Woman's hair;
பெண்டிர் தலைமயிர். (பிங்.) நல்லார் குரனாற்றம் (கலித். 88).

2. One of the five modes in whicha woman dresses her hair;
மகளிர் குழல்முடிக்கும் ஐவகையுள் ஒன்று. (பு. வெ. 9, 35, உரை.)

3. Feather, plumage;
பறவையின் இறகு. (திவா.)

kural,
n. cf. kura.
1. [T. kuṟṟu, K. koral, M. kuṟal.] Voice;
பேச்சொலி. சேவல் மயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்டு (நலவெண். சுயம்வ. 41).

2. Word;
மொழி.யாவருந் தண்குரல் கேட்ப (கலித். 142, 9).

3. Tone in singing;
சாரீரம். காமன் காமுறப்படுங்குரறருமிது (சீவக. 1218).

4. (Mus.) First note of the Indian gamut;
ஏழிசையுள் முதலாவது. (திவா.)

5. Throat, windpipe;
மிடறு. மணிக்குர லறுத்து (குறுந். 263).

6. Sound;
ஓசை. இடிகுரன் முரசு (கம்பரா. எழுச்சி. 1).

7. String of jingling bells. See
கிண்கிணிமாலை. (பிங்.)

kural
n.
1. Dense mass;
கற்றை. குரற் கூந்தல் (கலித். 72, 20).

2. String of a lute;
யாழ்நரம்பு. (அக. நி.)

3. Letter;
எழுத்து. (அக. நி.)

DSAL


குரல் - ஒப்புமை - Similar