Tamil Dictionary 🔍

காண்ணுதல்

kaannuthal


kāṇ-
13 v.[T.Kānu, K.M.kāṇ.] tr.
1. To see, perceive, view, descry;
பார்த்தல். காணிற் குடிப்பழியாம் (நாலடி, 84).

2. To gain sight of, as a deity, a great person, the new moon;
தரிசித்தல். திருகண்டேன் பொன்மேனி கண்டேன் (திவ். இயற். 3, 1).

3. To discover, find out;
கண்டறிதல். காணாதாற் காட்டுவான் தான்காணான் (குறள், 849).

4. To make, create;
உண்டாக்குதல். முனைவன் கண்டது (தொல். பொ. 649).

5. To perceive by the senses;
பொறியாலறிதல். அவன் பேச்சைக் கண்டு (திருவாலவா. 16, 28).

6. To consider, investigate;
ஆராய்தல். அறம்பொருள் கண்டார்கணில் (குறள், 141).

7. To experience;
அனுபவத்தில் அறிதல்.

8. To regard;
மதித்தல். தானெனக் கண்டும் (கல்லா. 51, 7).

9. To worship, venerate, reverence;
வணங்குதல். (பிங்.)

10. To put to flight, drive away, as seeing the back of enemies;
புறங்காணுதல். நிலவுக் காண்பதுபோல (கலித். 119, 4).

11. To attain, obtain, get;
பெறுதல். முற்று மிடங்கண்டபின் (குறள், 491).

12. To tell, say;
சொல்லுதல். யாவருங் கண்ட நெறி (ஆசாரக். 17).

13. To look like, resemble;
.

14. To befit;
பொருந்துதல். மற்காணுந் திரடிண்டோள் (கம்பரா. குகப். 26).-intr.

1. To accrue, result;
பலித்தல். இவ்வருஷம் சாகுபடி எவ்வளவு காணும்?

2. To appear, to be found, to become visible, evident;
கண்ணுக்குத் தெரிதல். காண்கின்ற நிலமெல்லாம் யானேயென்னும் (திவ். திருவாய். 5,6,3).

3. To be sufficient;
போதியதாதல். இப்பொருள் எத்தனைநாளைக்குக் காணும்.

DSAL


காண்ணுதல் - ஒப்புமை - Similar